Friday, 26 September 2014

35. She is the "avusaari" who birthed me before attaining maturity!

Verse 35
பேரிட்டாள் சிறுபிள்ளை வயதோ கொஞ்சம்
பெற்ற பிள்ளை தன்னையுந்தான் பேணிப்பாராள்
சீரிட்டாள் சமையு முன்னமே என்னைப் பெற்றாள்
தேசமெல்லா மவுசாரி யாடிக் கொண்டாள்
ஏறிட்டுப் பார்த்தாலுங் கண்தான் கூசும்
இவளுடைய மாயை யல்லோ வுலக மாச்சு
நேரிட்ட ஐவருக்குந் தாயுமாகி
நிறைந்தாளே யாவருக்கும் பெண்டீர்தானே

Translation:
She named, the little child, very young in age
She will not nurture the child whom she birthed
She birthed me even before attaining maturity
The “avusaari” won all the lands with her dance
If looked up, the eyes will shrink
It is only her maya that became the world
Becoming the mother of the five who occurred
She pervaded, a lady, for everyone.

Commentary:
Subramanayar is talking about kundalini sakthi here.  Siddhas call her “vaalaikkumari” or the vaalai maiden.  They also say that her age is 10.  This number is obtained as a sum of 8+2 or a and u, the letters that represent the numbers 8 and 10 in Tamil lexicon.  Hence, Subramanyar is saying that she birthed him, that is, consciousness emerged from her even before she attained maturity.  The starting point of the emergence is the muladhara, the first stage of this vaalai kumara.  She “matures” and “unites” with Siva at the sahasrara.  The term “avusaari” is used in a very dishonorable way in the Tamil language.  Subramanyar gives a different meaning for this term!  It means “a+ u+ saari” the one who depends on a and u.  Agatthiyar explains the significance of various beeja akshara as follows: a represents Siva, u the Sakti and si the kundalini sakthi.  Si follows a and u and hence is “dependent” on a and u.  Thus Vaalai kumara is “avusaari”.  The manifested world remains so due to the maya of this power which, through its ascendance or descent takes one from the state of complete manifestation or the state of laya.  The five may be the principles, Sadasiva, Maheswara, Rudra, Vishnu and Brahma who represent the cakras from vishuddhi to muladhara and thus, the different states of consciousness.  She remains the sakti of all these emanations.  For Brahma she is the Sarasvati, for Vishnu she is the Lakshmi, for Rudra she is Rudri at the manipuraka cakra, for Maheswara she is Mahesvari and for Sadasiva she is the manonmani.

இப்பாடலில் சுப்பிரமணியர் குண்டலினி சக்தியைப் பற்றிப் பேசுகிறார்.  சித்தர்கள் அவளை வாலைக் குமரி என்று அழைத்து அவளுக்கு வயது பத்து என்பர்.  இந்த பத்து என்பது எட்டும் இரண்டும் கூட்டினால் வருவது. எட்டு  இரண்டு என்பவை அ மற்றும் உ.  தமிழில் எண்கள் எட்டும் இரண்டும் அ மற்றும் உ என்று குறிக்கப்படுகின்றன.   இதனால்தான் சுப்பிரமணியர் அவளுக்கு வயது கொஞ்சம் என்கிறார்.  இந்த சக்தியின் இருப்பிடம் மூலாதாரம்.  இங்கேதான் விழிப்புணர்வு பிறக்கிறது.  அது “சமைந்து”, சுழுமுனையில் ஏறி, சிவனுடன் “கலக்கிறது”.   விழிப்புணர்வு இந்த சேர்க்கைக்கு முன் பல நிலைகளில் பிறக்கிறது என்பதைக் குறிக்க சுப்பிரமணியர் அன்னை குண்டலினி தன்னை “சமையும் முன்” பெற்றாள் என்கிறார்.  தமிழில் “அவுசாரி” என்ற சொல் மிக இழிந்த பெண்ணைக் கூறப் பயன்படுத்தப்படுகிறது.  இங்கே சுப்பிரமணியர் இந்த சொல்லுக்கு வேறொரு பொருளைக் காட்டுகிறார். அவுசாரி என்பது அ வையும் உ வையும் சார்ந்தவள் என்று பொருள்படும்.  குண்டலினி சக்தியை விளக்கும்போது அகத்தியர் அ என்பது சிவன் என்றும் உ என்பது சக்தி என்று சி என்பது வாலை என்றும் கூறுகிறார்.  இவ்வாறு சி என்னும் எழுத்து அ வையும் உவையும் சார்ந்துள்ளது.  இந்த கண்ணால் காணும் உலகம் அனைத்தும் அவளது மாயை.  அவள் தனது ஆட்டத்தால், அசைவினால், பரவுணர்வு நிலை அல்லது லயத்துக்கும் உலகவுணர்வு நிலை அல்லது வெளிப்பாடு என்ற நிலைக்கும் இடையில் ஆன்மாக்களை இருக்கச் செய்கிறாள்.  ஐவர் என்று இப்பாடலில் குறிப்பிடப்படுவது வெளிப்பாட்டின் நிலைகளான சதாசிவன், மகேஸ்வரன், ருத்திரன், விஷ்ணு மற்றும் பிரம்மாவைக் குறிக்கின்றது.  தெய்வங்களாகக் குறிப்பிடப்படும் இவர்கள் ஐவகை உணர்வு நிலைகளைக் குறிக்கின்றனர்.  அவர்களது சக்தியாகத் திகழ்பவள் குண்டலினி. பிரம்மாவுக்கு சரஸ்வதியாகவும், விஷ்ணுவுக்கு லட்சுமியாகவும், ருத்திரனுக்கு ருத்திரியாகவும் மகேஸ்வரனுக்கு மகேச்வரியாகவும் சதாசிவனுக்கு மனோன்மணியாகவும் குண்டலினித் தாய் திகழ்கிறாள். 

3 comments:

  1. அம்மா தெளிவான விளக்கம் மிக்க நன்றி.

    ReplyDelete
  2. குமரகுரு பரன் துணை

    ReplyDelete
  3. அபாரம்! விளக்கம் அபாரம்! சகோதரி நலமா? நீண்ட நாளுக்குப் பிறகு மீண்டும் இங்கே வாசிக்க வந்தேன். நாம் உரையாடி மூன்று வருடங்களுக்கு மேல் ஆயிற்று போல. சித்த நூலுக்கு விளக்கவுரை எழுதும் மாறுபட்ட பாணியை உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்கிறேன். நீங்களும் எனக்கு குருவே! ஓம் சரவணபவ.

    ReplyDelete