Sri Mukthi Naga Subramanya Temple, Ramohalli, 18 km from Bangalore
Verse 18
போச்சடா ஆறுதலம் வேறீதென்று
புகுந்தெழுந்த மூலமதைப் பார்ப்பார்கோடி
ஆச்சடா மால்வீடு பிரமன்வீடு
அப்புறந்தான் ருத்திரன்வீ டென்பான் பாவி
வாச்சடா மகேஸ சதா சிவன்றானென்று
வாதாடித் திரிவற்பல வண்டர்கோடி
காச்சடா லலாடஞ்சாம் பவிதானென்றுங்
கண் மூக்கு மத்திஎன்று மலைவான்தானே
Translation:
Saying that this
is different from the six loci
There are
millions who see the origin that arises
The sinner, he
will say Vishnu’s house, Brahma’s house
After that
Rudra’s house
After that
maheswara and Sadasiva’s house
Arguing so
millions will roam around blabbering so
Saying that it
is the lalaata, sambhavi
The middle of
the eyes and nose, millions will get exhausted.
Commentary:
Subramanyar
says that millions will waste their lives discussing the theoretical. They will say that the Supreme is the six cakra- the
houses of brahma, Vishnu, maheswara, rudra and Sadasiva. Brahma represents the muladhara, Vishnu the
svadhishtana, Rudra the manipuraka, Maheswara the anahata and Sadasiva the
vishuddhi. Some will also get fatigued saying
that it is the lalata cakra- the one above the ajna from where the divine
nectar flows down, they will say it is holding the Sambhavi mudra- of keeping the
eye focused at the middle of the eyebrows, watching the ajna.
கோடிக்கணக்கான மக்கள் பரவுணர்வு என்றால் என்ன என்பதை
அறியாமல் தாம் படித்தவற்றை விவாதிப்பதில் காலத்தை விரயம் செய்கின்றனர் என்கிறார்
சுப்பிரமணியர். சிலர் பரம் என்பது ஆறு
சக்கரங்கள் என்பவர். பிரம்மாவின் வீடு
என்பது மூலாதார சக்கரம், விஷ்ணுவின் வீடு சுவாதிஷ்டானம், மணிபூரகம் ருத்திரனின்
வீடு, அனாஹதம் மகேஸ்வரனின் வீடு, விசுத்தி சதாசிவனின் வீடு. சிலர் பரம் என்பது லலாட சக்கரம் என்று
கூறுவர். இந்த சக்கரத்திலிருந்துதான்அமிர்தம்
ஊறுகிறது. சிலர் அது மூக்கும் கண்ணும்
சேரும் இடத்தில் கவனத்தைக் குவிப்பது என்பர் என்கிறார் சுப்பிரமணியர்.
No comments:
Post a Comment