Tuesday, 9 September 2014

17. The sahasrara is the terminus for several principles



Sringeri Sanmuga temple, Bangalore

Verse 17
காணடா வழலை என்ற முப்பூவங்கே
கலந்தெழுந்த  வைங்காயக் கருவுமங்கே
தானடா அஞ்சனத்தின் நிலையுமங்கே
தாரணையுஞ் சாரணையுஞ் சமாதுமங்கே
ஊணடா தீட்சைபத்துமுடிவுமங்கே
ஒருமித்து வுடலுயிருந் தரிப்பதெங்கே
கோணடா குருபாதங் காண்பதெங்கே
கூறுவேன் பேசாத எழுத்தாய்ப் போச்சே

Translation:
See son, the “muppoo” called vazhalai is present there
The essence of the five types of bodies is there
The state of the ‘anjanam” is there
Dharana, charana and Samadhi are there
Plant it firmly son, the terminus of the ten step initiation (dasadeeksha) is there
Where did the body and soul come together
Think where the gurupaadam will be seen
I will say, it became the unspoken letter.

Commentary:
There are several explanations for the muppoo. Some claim it to be three types of salts while others claim it to be a specific compound that is collected under special conditions.  From the literature, vazhalai muppoo seems to be the air principle/vayu, water principle/appu and fire principle/tejas.  These three represent the emergence of life.  The semen is said to represent the air principle, the female sexual fluid the water principle and the Divine grace the effulgence or fire principle.  Thus, the coming together of the male and female principles leading to a birth or the coming together of Siva and sakti at the sahasrara may be referred to in the first line.

The five types of bodies referred to in the next line represents the pancha kosha or sheaths created by maya that hold the limitless consciousness in a limited form.  The essence of these sheaths is the maya.  The maya comes to an end at the sahasrara. 
Anjanam represents special unction that is applied to the eye give the power to see unusual visions.  All these come to an end at the sahasrara as there are no more distinctions.  The fourth line refers to the austerities like the ashtanga yoga which includes dharana, dhyana Samadhi etc.  All these come to an end as the soul remains as the universal soul.  The soul enters a body through the sahasrara.  There is a gap in the cranium in children that closes only when the skull thickens when the infant grows up.  This soft spot is the locus of the sahasrara, the gateway for the soul.  Gurupaadam refers to the state of enlightenment.  This occurs at the sahasrara.  All the above mentioned are nothing but the unspoken letter or the “im”.

முப்பூ என்பதைப் பலர் பலவிதமாக விளக்கியுள்ளனர்.  அவையனைத்திலும் இந்த விளக்கமே இங்கே பொருத்தமாகத் தோன்றுகிறது:  முப்பூ என்பது அப்பு அல்லது நீர்த்தத்துவம், தேயு என்னும் அக்னி தத்துவம் மற்றும் வாயு என்னும் காற்றுத் தத்துவத்தைக் குறிக்கும்.  ஒரு உயிர் தோன்றுவதற்கு வாயு (சுக்கிலம்) அப்பு (சுரோணிதம்), அக்னி (இறையருள்) இவை மூன்றும் சேருவதே காரணம் என்று சித்தர்கள் கூறுகின்றனர்.  இவ்வாறு முப்பூ என்பது உயிர் தோன்றுவதற்குக் காரணமாக இருக்கும் மூன்று வஸ்துக்கள்.  இந்த மூன்று தத்துவங்களும் ஒன்று சேருவதே வழலை எனப்படுகிறது.  இவ்வாறு சஹஸ்ராரம் என்பது உயிர்களின் லய நிலை, பிறவியற்ற நிலை.  ஐங்காயம் என்பது பஞ்ச கோசம் அல்லது மாயையால் விளைந்த உடல்களைக் குறிக்கிறது.  இந்த உடல்களுக்குக் காரணமான மாயை ஒடுங்கும் இடம் சஹஸ்ராரம்.  அஞ்சனம் என்பது கண்ணில் தீட்டிக்கொண்டால் பல அரிய காட்சிகளைக் காட்டுவது.  இந்த நிலை பொருள்களின் பலதரப்பட்ட நிலையைக் குறிக்கிறது.  சஹாஸ்ராரத்தில் அனைத்தும் பரவுணர்வாக எவ்வித குணமும் இல்லாமல், வேறுபாடும் இல்லாமல் இருப்பது.  இங்கே அஷ்டாங்க யோகம் (தாரணை, தியானம், சமாதி) ஆகியவை முடிவுறுகின்றன.  இங்கே தச தீட்சைகளும் முடிவுக்கு வருகின்றன- காயசித்தி அடையப்பெறுகிறது.  உயிர் உடலினுள் நுழைவது சஹாஸ்ராரத்தின் மூலம்தான்.  அதனால்தான் பிறந்த குழந்தைகளின் மண்டையோடு ஒரு விரிசலை உடையதாக உள்ளது.  அந்தக் குழந்தை வளர்ந்து மண்டையோடு உறுதியானதாக மாறும்போது இந்த விரிசல் மூடிவிடுகிறது.  சஹாஸ்ராரத்தில் குருபாதம் காணக்கிடைகிறது.  இந்த சஹஸ்ராரம் பேசாத எழுத்தாக, “ம்” என்னும் எழுத்தாக இருக்கிறது என்கிறார் சுப்பிரமணியர். 

No comments:

Post a Comment