Verse 15
தன்மையுள்ள குலையல்லோ தெய்வமாகிச்
சகலருக்குஞ் சீவனுயி ரதுதான் மைந்தா
உண்மைஆதாரம் எழுத்தாறுமாகி
உதயகிரி பருவத்தில் ஒடுங்கி வாழ்ந்து
நன்மையுடன் பாழ்வீடு சுடுகாடாகி
நான் என்றும் நீ என்றும் நாவுண்டாகி
அம்மை சிவகாமி சிலம்பொலியும் கேட்கும்
அத்தளத்தில் எரிசனைகள் அநேகம் பாரே
Translation:
The Kulai (kundalini) becoming the deity
It is that which remains as the Jiva for everyone, Son
The true support being the six letters
Living, abiding in the Udayagiri mountain
The house of paazh becoming the creamation ground
With the expressions “I” and “you” occurring
The sound of Mother Sivakaami’s anklets will be heard
There are several fires burning in that locus, See.
Commentary:
Subramanyar is talking about the fire of kundalini and
the state of a jnani or a realized soul here.
The real deity will be kula kundalini or kulai-the lady of kula. She is the Jivatma.
Agatthiyar in his Saumya Sagaram explains that the
Jivatmatma is the fire, the fire of kundalini and the Paramatma is the breath
or vayu (verse 23). These two come together, the prana and the
fire of kundalini, the Jivatma and the Paramatma during the yogam, they travel
together towards the state of realizing.
This is what is meant by the Paramatma leading the Jivatma towards the
state of supreme consciousness. This is what is meant by the Paramatma and
Jivatma remaining together in one body.
Agatthiyar refers to this by saying, the fire and the air live together
in the matapathi or the insentient locus, the material body.
The cakras other than the sahasrara are called aaru
adhaaram and the sahasrara is called niradhara.
The other cakras are connected by the sushumna nadi but beyond the ajna
it is the hairlike bridge or the “mayirpaalam” that the soul uses to reach the
sahasrara. The cakras are called adhara
because they represent different principles or tattva that hold a body in its
form, shape and behavior. However, the
true adhara are the cakras themselves by the six letters which may be om
namacivaya or saravanabhava. These are
mystic syllables that represent different principles both in the physical realm
as well as spiritual realm.
Mr. Ramanath Narayanaswamy has written a beautiful
explanation on saravanabhava in the Deccan Herold. http://archive.deccanherald.com/Content/Feb262009/city20090225120714.asp
Udayagiri represents the sahasrara. The point at which the universal
consciousness” paravunarvu dawns.
The paazh veedu represents the physical body. The term paazh may be referring to the three
paazh or voids of maya paazh, bhodhappaazh and upasaanthappaazh. These are states of illusion created by the
limited nature of the soul. Thus, physical
existence is created by the paazh. When
it said to become the cremation ground, it means, it turns into a plane where
all the faults and limitations are burned with the fire, the fire of
kundalini. At that state all forms of
distinctions, as You and Me, as this and that, disappear. Here, the sound of the tinkling of mother Sivakaami’s
anklet will be heard. It is the
nadaantha state which is indicated by the tinkling of the anklet. One should not take its literal meaning but
as a place value for the sound that will be heard as these sounds can only be
described by alluding to a sound that one is familiar with. Subramanyar says that a great effulgence
remains in that state which goes ahead to describe in the next verse.
இப்பாடலில் சுப்பிரமணியர் குண்டலினியைப் பற்றியும் ஒரு
ஞானியைப் பற்றியும் பேசுகிறார். குண்டலினி
யோகம் செய்யும் ஒரு ஞானியின் குலதெய்வம் குல குண்டலினிதான். அவள்தான் அனைவரது ஜீவனுமாக இருக்கிறாள். அகத்தியர் தனது சௌமிய சாகரம் என்ற நூலில்
எவ்வாறு உடலும் உயிர்களும் தோன்றுகின்றன என்று விளக்கும்போது ஜீவாத்மா என்பது
குண்டலினி அக்னி, பரமாத்மா என்பது வாயு அல்லது பிராணன் என்கிறார் (பாடல் 23). இந்த இரண்டும்
சேர்ந்து பல உணர்வு நிலைகளைக் கடந்து பரவுணர்வு நிலையை அடைகின்றன. இதைத்தான் இறைவன் ஜீவனை முக்தியை நோக்கி
அழைத்துச் செல்கிறான் என்று விளக்குகின்றனர்.
அகத்தியர் சௌமிய சாகரத்தில் இந்த இருவரும், அக்னியும் வாயுவும் மடபதியில்,
அறிவற்ற உடலில், ஆதாரமாகத் திகழ்கின்றனர் என்கிறார்.
சஹாஸ்ராரத்தைத் தவிர மற்ற ஆறு சக்கரங்கள் ஆதாரங்கள்
எனப்படுகின்றன. அவை ஒரு உடல், ஒரு வாழ்விற்கான
ஆதாரமாக, குறிப்பட்ட தத்துவங்களின் குறிகளாக இருக்கின்றன. சஹஸ்ராரம் நிராதாரம் என்று அழைக்கப்படுகிறது. மற்ற சக்கரங்களைக் கோர்க்கும் சுழுமுனை நாடி ஆக்ஞை
யைக் கடந்து போவதில்லை. அதற்குமேல்
இருக்கும் நுண்ணிய தொடர்புகள் மயிர்ப்பாலம் என்று சித்தர்களால்
அழைக்கப்படுகின்றன. இந்த சக்கரங்கள்
ஆதாரங்கள் என்று அழைக்கப்பட்டாலும் உண்மையான ஆதாரம் ஆறெழுத்து என்கிறார்
சுப்பிரமணியர். அந்த ஆறு எழுத்துக்கள் ஓம்
நமசிவய அல்லது சரவணபவ என்பதாக இருக்கலாம்.
ஓம் நமசிவய என்பது எவ்வாறு உடலளவிலும் ஆன்மநிலையிலும் ஆதாரமாக இருக்கிறது
என்பதை நாம் முன்னமே பார்த்தோம் (உதாரணம்- நவ்விரண்டும் காலதாய்..
சிவவாக்கியம்). சரவணபவ என்னும் மந்திரத்தை
திரு ராமநாதன் நாராயணசுவாமி என்பவர் விலக்கி ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அதைக் கீழ்க்காணும் தளத்தில் பார்க்கலாம். அதற்குத் தமிழ் விளக்கம் வேண்டும் என்றால்
தெரிவிக்கவும்.
உதயகிரி என்பது சஹாஸ்ராரத்தைக் குறிக்கும். அங்குதான் பரவுணர்வு நிலை உதிக்கிறது.
பாழ் என்பது உடலை, ஒரு உயிராக இருக்கும் நிலையைக்
குறிக்கிறது. திருமூலர் மூவித பாழ்களைக்
குறிப்பிட்டுள்ளார், அவை மாயப்பாழ், போதப்பாழ், உபசாந்தப்பாழ் என்பவை. இவை ஜீவாத்மாவின் அளவிற்குட்பட்ட
உணர்வுநிலைக்குக் காரணமானவை. இந்த முப்பாழைக்
கடந்தால் நான், நீ என்பது போன்ற பிரிவுகள் மறைந்துபோகின்றன. இந்தப் பாழால் உருவாக்கப்பட்ட உடல்தான் (ஸ்தூல,
சூக்ஷ்ம, காரண உடல்கள்) சுடுகாடு. அதில்
மலங்கள், அளவுக்குட்படச் செய்யும் தன்மைகள் குண்டலினி அக்னியால்
எரிக்கப்படுகின்றன. அப்போது அன்னை
சிவகாமியின் சிலம்பொலி கேட்கும் என்கிறார் சுப்பிரமணியர். இது நாதாந்த நிலையைக் குறிக்கும். சிலம்பொலி என்பது ஒரு குறியீடுதான். அந்த நாதத்தின் எல்லை விளக்கமுடியாததாக
இருப்பதால் நமக்குப் பழக்கமான ஒரு சப்தத்தை அது எவ்வாறு இருக்கும் என்று
புரிந்துகொள்ள சுப்பிரமணியர் இங்கே சிலப்பொலி என்று குறிப்பிடுகிறார். இந்த
நிலையில் உதயகிரி பர்வத்தில், சஹாஸ்ராரத்தில் ஒடுங்கி இருக்கும் ஆத்மா கோடி
சூரியப் பிரகாசத்தைக் காணும். அதை அவர்
அடுத்த பாடலில் விளக்குகிறார்.
No comments:
Post a Comment