Gautamapuram, Halasuru, Bangalore, Karnataka
verse 25
நில்லடா ஓமென்றும் ஸ்ரீயுமென்றும்
நிறுத்தடா பூரணத்தின் நிலையைப் பார்த்து
அல்லடா வதினுடைய மகிமை சொல்ல
அரனாலு முடியாது மற்றோர்க்கேது
சொல்லடா வாய்ப்பேச்சு முனக்குமேது
சொல்லாதே யிம்மூலந் திறவு கோலாம்
வில்லடா கீழ் மேலா ராய்ந்து பாரு
விந்துவட்டம் பளீரெனவே வீசும் பாரே
Translation:
Remain as Om
and Sreem
Stop, seeing
the status of the fully complete
It is
impossible to utter its glory
It is not
possible even for Hara, how is it possible for others?
Say son, why
do you need any conversation, words about it
Do not say it,
this is the key to open the mulam
See the top
and bottom, this bow,
The circle of
bindhu will shine effulgently.
Commentary:
A bheeja
mantra is a seed mantra that confers special benefits. It is tantric way of worship and hence needs
guru upadesa. Om is the pranava from which all other mantras emerged.
Kleem is the
kama bheeja, a seed sound that fulfills all desires. Ka- kama deva, la-indra, ee-contentment and
im-chandra bindu and thus the nada and bindu.
Now, some of
the other bheeja mantras:
Aim- is the
mantra for Saraswati, the goddess of knowledge.
Thus, the aim
kleem in the previous verse means, the desire to attain jnana.
The mantra
mentioned in this verse are om and shreem. Shreem is the mantra for Mahalakshmi
or goddess of wealth, the wealth here is the knowledge or realization.
Subramanayar
says that it is impossible to describe the glory of the Divine, the poorna and
hence there is no point in talking about it.
This process, described in the above and this verse is the key that
opens the muladhara thus facilitating the ascent of kundalini. When one chants these mantra and pays
attention to the muladhara and sahasrara the circle of bindu will glow. The muladhara is represented as the circle
and so is the sahasrara. The bindu in the muladhara represents manifestation of
the world and the circle in sahasrara represents complete dissolution of the
manifested world and emergence of supreme consciousness.
முந்தைய பாடலிலும் இதிலும் சுப்பிரமணியர் சில பீஜ
மந்திரங்களைக் கூறுகிறார். பீஜ
மந்திரங்களை உச்சரித்து வழிபடுவது தந்திர வழிபாடு, அதற்கு குருவின் உபதேசம்
தேவை. ஓம் என்பது பிரணவம்,
அதிலிருந்துதான் பிற மந்திரங்கள் தோன்றுகின்றன.
க்லீம் என்பது காம பீஜம், எல்லா விருப்பங்களையும் தீர்த்துவைப்பது. இங்கு இருக்கும் விருப்பம் ஞானத்தைப்
பெறுவது. ஐம் என்பது சரஸ்வதி அல்லது
ஞானதேவதையின் மந்திரம். இவ்வாறு முந்தைய
பாடலில் கூறிய ஐம் க்லீம் என்பது ஞானம் பெறவேண்டும் என்ற விருப்பத்தை
வெளிப்படுத்துவது. இப்பாடலில்
சுப்பிரமணியர் ஓம், ஸ்ரீம் என்ற இரு மந்திரங்களைக் கூறுகிறார். ஸ்ரீம் என்பது மகாலட்சுமியின் மந்திரம். எல்லா வளங்களையும் கொடுப்பது. இங்கு விரும்பும் வளம் ஞானம்.
இந்த மந்திரங்களின் பெருமையா விலக்குவது என்பது அரனாலும்
முடியாது அதனால் நாம் பேச்சில் நேரத்தை வீணாக்கவேண்டாம் என்கிறார்
சுப்பிரமணியர். இந்த மந்திரங்களை
உச்சரித்து அகத்தியர் தனது கவனத்தை மேலும் கீழும் உள்ள விந்து வட்டத்தில்
வைக்கவேண்டும் என்கிறார் சுப்பிரமணியர்.
மூலாதாரமும் சஹாஸ்ராரமும் வட்டங்களாகக் குறிக்கப்படுகின்றன. மூலாதாரத்தில் இருக்கும் பிந்து உலகம்
தோன்றுவதற்கு முற்பட்ட நிலை.
சஹாஸ்ராரத்தில் உள்ள பிந்து வட்டம் உலக உணர்வு முடிந்து பரவுணர்வு தோன்றும்
இடம். இந்த இரு இடங்களும் இந்த சாதனையை
மேற்கொள்ளும்போது பளீரென ஒளிவிடும் என்கிறார் சுப்பிரமணியர்.
No comments:
Post a Comment