Verse 34
நில்லடா சற்புத்ர னானால்மைந்தா
நிற்கையிலே நின்ற நிலை உனக்குத் தோன்றும்
சொல்லடா சுழிக்காற்று நிலைக்கொட்டாது
சொன்னதெல்லாமெய்யாகும் நினைந்த போது
அல்லடா எனைப் போலே யார்தான் சொன்னார்
ஆதியந்தம் அனாதியந்தம் இரண்டு மைந்தா
கொல்லடாமாயைதனை ஒழித்ததாலே
குமரகுரு பரனென்று நமக்குப் பேரே
Translation:
Remain if you
are satputra, son
If you remain
so, the state of existence will occur to you
Say son, the
air in the whorl will not remain
All that was
said will become true, when thought about it.
Who has said
this like me?
There are the
two- beginning/end and the eternal/end
Kill the maya,
as I have destroyed it
My name is
Kumaraguru Paran.
Commentary:
Charya, Kriya,
yoga and jnana are the four steps in God realization. Among these charya is called Satputra
margam. Tirumular has described it
elaborately in his Tirumandiram 5th Tantra, 11th section,
verse 2. He says, “worship, reading, praising,
chanting, faultless good tapas, being faultless, purifying the rice with water
are all Satputra margam”. This implies a
state of internal and external purity.
This is the first which, according to Agatthiyar, leads to kriya, yoga
and ultimately to jnana. This process
will show the true state of everything, thus delusion is removed. The air of the whorl is prana that flows
through the cakra. The achievement in
this step is that all that the yogi wishes for or says will happen, will
occur. Subramanyar talks about two types
of end. One is “aadi andham” beginning
and end. This is the beginning of the birth and end of it. The next one is “anaadhi andham” the eternal
end, the state of supreme consciousness, the point of no return, the ultimate
end, that of remaining eternally. These
two could be achieved by destroying maya.
Subramanyar says that as he has done so he got the name “Kumaraguru
Paran”. Kumara means one who destroyed
the darkness of ignorance-Kumara, guru is the preceptor, paran is the Lord, the
one in the ultimate state of Param.
Commonly this name is uttered as Kumaraguruparan. The way the name is split in the verse gives
three qualities that form the basis of this name.
சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு படிகள் இறைவனைக்
காட்டுவன. இவற்றில் சரியை என்பது
சத்புத்திர மார்க்கம் எனப்படுகிறது.
திருமூலர் தனது திருமந்திரம் ஐந்தாம் தந்திரம், பதினொன்றாம் பகுதி பாடல்
இரண்டில் சத்புத்திர மார்க்கத்தை, “பூசித்தல், வாசித்தல், போற்றல், செபித்திடல்,
ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை நேசித்திட்ட அன்னமும் நீர் சுத்தி செய்தல் மற்று
ஆசற்ற சற்புத்திரமார்க்கமாகுமே” என்று இதை விளக்குகிறார். இவ்வாறு சத் புத்திரமார்க்கம் உள்ளும் வெளியும்
அழுக்கற்று இருப்பதைக் குறிக்கிறது. இந்த
சரியை இதனை அடுத்த கிரியைக்கும் யோகம் ஞானத்திற்கும் அழைத்துச் செல்லும் என்று
அகத்தியர் தனது சௌமிய சாகரத்தில் கூறுகிறார்.
சுழிக்காற்று என்பது சக்கரங்களில் பாயும் பிராண வாயுவைக்
குறிக்கும். இந்த நிலையில் ஒரு யோகி
கூறுவன அனைத்தும் பலிக்கும். வாக் சித்தி
ஏற்படும்.
இதனை அடுத்து சுப்பிரமணியர் இருவிதமான அந்தம் அல்லது
முடிவுகளைப் பற்றிக் கூறுகிறார். ஆதி
அந்தம் என்பது பிறப்பிறப்பையும் அநாதி அந்தம் என்பது உச்ச முடிவான என்னும்
நிலைத்திருக்கும் பரவுணர்வு நிலையையும் குறிக்கும். இந்த இரண்டும் மாயையைக் கொன்றால் ஏற்படும்
என்று கூறும் சுப்பிரமணியர் அதனால்தான் தனக்கு குமரகுரு பரன் என்று பேர் ஏற்பட்டது
என்கிறார். குமரன் என்பது கு என்னும் அஞ்ஞான
இருட்டை மரிக்கச் செய்தவன், கொன்றவன் என்று பொருள். அவனே குரு.
அவன் உச்ச நிலையான பர நிலையில் இருப்பவன்.
அதனால் அவன் குமரகுரு பரன்.
பொதுவாக குமரகுருபரன் என்று நாம் கூறும் பெயரை சுப்பிரமணியர் பாடலுக்காக
குமரகுரு பரன் என்று பிரித்தது நமக்கு அவரது மூன்றுவித தன்மைகளைக் காட்டுகிறது!
No comments:
Post a Comment