Wednesday, 17 September 2014

26. Sivayogam, andhi sandhi

Verse 26
பாரப்பா இன்னமொரு மகிமை சொல்வேன்
பாலகனே வாவென்று மலிஎன்றோதி
ஆரப்பா முன் தீட்சை மார்க்கம் போலே
அடி தொடுத்து நுனிவரைக்கா ராய்ந்து பார்த்துச்
சேரப்பா சிவயோகம் இதுவாமென்றுந்
தீர்க்கமுடன் அந்திசந்தி தெளிந்துபார்த்துக்
கோரப்பா பராபரனை வாவாவென்று
குவிந்த நிலைதனைப் பார்த்துக் கூடுவாயே

Translation:
See son, I will tell you about one more glory
Child, come, saying so,
Be soothed, like the previous way of initiation
Examine from the lower to the upper tip
Join it as “this is Sivayogam”
With firmness, seeing clearly the terminus and the junction,
Request the Paraparan to come
Seeing the focused state join it.

Commentary:
Subramanyar is telling Agatthiyar about the Sivayogam.  He says that like the previous diksha or initiations where while uttering specific mantras the mind’s eye is focused at the top and bottom terminiit should be performed now too.  Andhi and sandhi means terminus and the junction. The chakra are called the termini for different principles or tattva.  When the yogin raises his consciousness through the cakra he brings specific tattva under control.  Sandhi or junction are where one tattva ends and the next begins.  The body is also divided into three realms, that of fire, sun and the moon.  These realms are separated by specific knots.  These are the junctions.  The vishuddhi cakra is called the junction between the animalistic tendencies and humanistic qualities.  This is again a junction between two realms.  The sahasrara is the junction between the limitedness as a body and the state of unlimited all pervasive consciousness.  Thus, the sahasrara is also a sandhi.  The point where the prana and apana meet is a sandhi, the point where the inhalation and exhalation meet, the kumbaka, is also a sandhi.
Subramanayar is hence telling Agatthiyar to pay attention to these termini and the junctions and merge with the Paraparan beseeching to come.
இப்பாடலில் சுப்பிரமணியர் அகத்தியருக்கு சிவயோகத்தை விளக்குகிறார்.  முன்னே பல தீட்சைப் படிகளைப் போல கவனத்தை மேல் மற்றும் கீழ் எல்லைகளில், சக்கரங்களில் வைத்து மந்திரத்தை உச்சரிக்கவேண்டும் என்கிறார். 

அந்தி சந்தி என்பவை முடிவு மற்றும் இடைப்பட்ட நிலைகளைக் குறிக்கும்.  பொதுவாக சந்தியாகாலம் என்று நாம் அழைப்பது பகலும் இரவும் சேரும் நேரத்தைத்தான்.  இங்கே சந்தி என்பது பல தத்துவங்கள் சேரும் இடத்தைக் குறிக்கும்.  நம் உடலில் உள்ள சக்கரங்கள் பல தத்துவங்களின் எல்லையைக் குறிக்கும்.  ஒரு யோகி தனது விழிப்புணர்வை இந்த சக்கரங்களின் ஊடே மேலே ஏற்றும்போது இந்த தத்துவங்களை வெற்றி கொள்கிறார், அவற்றைத் தனது கட்டுக்குள் கொண்டுவருகிறார்.  இவ்வாறு சக்கரங்கள் சந்திகளாகவும் அந்திகளாகவும் இருக்கின்றன. மனித உடலை மூன்று மண்டலங்களாகப் பிரிப்பது வழக்கம்.  அவை அக்னி மண்டலம், சூரிய மண்டலம் மற்றும் சந்திர மண்டலம் என்பவை.  இந்த மண்டலங்கள் கிரந்தி அல்லது முடிச்சுகளால் பிரிக்கப்பட்டுள்ளன.  இந்த முடிச்சுக்களும் அந்தி சந்திகளாக இருக்கின்றன.  விசுத்தி சக்கரம் நமது மிருக உணர்வும் மனித நிலையும் சநதிக்கும் இடமாகவும் இருக்கின்றது.  சஹஸ்ராரம், அளவுக்குட்பட்ட  தன்மைக்கும் அளவற்ற பரவுணர்வு நிலைக்கும் இடைப்பட்ட அந்தி சந்தியாக இருக்கிறது.  உடலில் உள்ள பிராணனும் அபானனும் சந்திக்கும் இடம் சந்தியாகும்.  அதேபோல் பூரகமும் ரேசகமும் கும்பகத்தில் சந்திக்கின்றன.  கும்பகம் இவ்வாறு சந்தியாகிறது.   இவ்வாறு பல்வேறு தத்துவங்களையும் நிலைகளையும் உணர்ந்து பராபரனை வாவா என்று அழைத்து அவனுடன் சேருமாறு சுப்பிரமணியர் அகத்தியருக்குக் கூறுகிறார்.  பராபரன் என்பது இறைவனின் உருவ அருவ நிலையை, அவன் சோதி வடிவில் இருக்கும் நிலையைக் குறிக்கிறது.  

No comments:

Post a Comment