Monday, 8 September 2014

16. super conscious state

Verse 16
பாரப்பா சதகோடி ரவிபோல்வீசும்
பனிரண்டு தலமும்அங்கே பாய்ந்து காணும்
ஆரப்பா அயனோடு மாலுங்காணும்
அழகான சதாசிவன் ருத்திரனும் அங்கே
நேரப்பா மயேஸ்வரத்தின் கூரும்அங்கே
நிலையான கணேசனுட பீஜமங்கே
தேரப்பா நினைப்போடு மறைப்பும் அங்கே
தேறாத கருவியங்கே தெளிந்து காணே

Translation:
See son, it will glow like millions of suns
All the twelve loci will be seen there
Brahma along with Mal will be seen
The beautiful Sadasiva and Rudra are there
The part, Maheswaram is also present there
The seed of Ganesha, the locus/state also there
The memory and lack of it- there
The senses that will not remain, also there, see with clarity.

Commentary:
Subramanyar is talking about the experience in the super conscious state.  He says that all the twelve loci will be seen there.  He referred to this in a previous verse and explained his name “panniru kai velan” or the one with the lance in twelve hands or the twelve handed one with the lance.  At this state one will see all the states of emanation.  Agatthiyar has explained in his Saumya Sagaram about the order of these emanations.  From param, the nirguna state, emerged Sivam, Sakthi, Sadasiva, Mahesvara, Rudra, Vishnu and Brahma, in that order.  The last five are called “pancha kartha” or the five effectors.  These seven forms belong to the seven cakras.  During reabsorption or laya these states merge with the previous one and finally abide in the param.  In the super conscious state the seed of manifestation, the bheeja of Ganesha, is also present.  This is a state where the mind ceases to exist.  As the mind is the locus of memory and senses they are also present in this state, not in the distinct form but in the laya state.
The yogi who reaches this state of supreme consciousness will be able to perceive all these clearly.

சுப்பிரமணியர் இப்பாடலில் பரவுணர்வு நிலையை விளக்குகிறார்.  இந்த நிலையே எல்லா வெளிப்பாடுகளுக்கும் காரணமாக இருப்பது. இங்கே பன்னிரண்டு தலங்கள் அல்லது உணர்வு நிலைகள் ஒன்றாகக் காட்சியளிக்கும்.  முந்தைய பாடலில் சுப்பிரமணியர் தனது பெயரான “பன்னிரு கை வேலன்” என்பதை விளக்கும்போது இதைக் குறிப்பால் உணர்த்தினார்.  இந்த நிலையில் எல்லாவிதமான வெளிப்பாடுகளும்- சிவம், சக்தி, சதாசிவம், மகேஸ்வரம், ருத்ரம், விஷ்ணு, பிரம்மா ஆகிய நிலைகள் புலப்படும்.  இந்த நிலையே வெளிப்பாட்டின் தோற்ற நிலையாக இருப்பதால் இதில் கணேசரின் பீஜமும் உள்ளது.  இந்த நிலையில் மனம் இல்லாமல் போவதால் அது தோற்றுவிக்கும் நினைவும் மறுப்பும், உணர்ச்சிகளும் இருப்பதில்லை.

இந்த லய நிலையை அந்த யோகி தெளிவாகக் காண்கிறார்.  

No comments:

Post a Comment