Verse 14
பாரப்பா சிவன் தானும் அதுதான் கண்டு
பன்னிருகை வேலனென்றே பகர்ந்தார் நாமம்
ஆரப்பா அறிந்து சிவ சத்தி என்னை
அருளான குமாரன் என்றே அழைத்துத் தானும்
நேரப்பா திருமுலைப் பால் அமுதமூட்டி
நீங்காத நிஷ்டையிலே இருத்தி வைத்தாள்
ஏரப்பா வுழுதால் வெள்ளாமையாகும்
ஏரில்லான்அறுத்தடித்த தன்மை தானே
Translation:
See! Sivan seeing that
Gave me the
name, the Velan with twelve hands
Knowing this
the SivaSakthi
Called me the kumara,
the embodiment of grace
And fed me the
nectar, the milk of her sacred breast
Kept in the
everlasting nishatai (austerity)
If the
ploughed is used for ploughing, then there is cultivation
Otherwise it
is like the one without the plough harvesting and processing (the crop)
Commentary:
In this verse
Subramanyar is explaining two of his names- panniru kai velan- the Velan, one
who possesses the spear, and with twelve hands.
We have already seen that Vel represents the power of discrimination-
being able to separate the good from the bad.
Calling one as ‘panniru kai velan’ means one who holds the Vel in twelve
hands or exercises his power of discrimination and ascends through the twelve
states of consciousness (within the body and beyond) till one reaches the state
of Universal consciousness. The states
of consciousness do not end at the sahasrara.
One has to cross several states beyond the sahasrara, the physical realm
to reach the supreme state.
The other name
explained in this verse is Kumaara, the youth or son. Subramanyar is said to be the son of Siva and
Sakti, the merging of limited consciousness with the universal consciousness. A
yogin who ascends the cakras and reaches the talu cakra in the uvula consumes
the divine nectar that descends from there.
This nectar is said to confer everlasting youth. This amrit is referred to as the divine milk
of sivasakti or the power of Siva.
Consumption of this nectar and making the consciousness climb up
further, the yogin is in the everlasting state of supreme consciousness.
Subramanyar
says that one should plough the field to have good cultivation. The field is the body and soul complex. It must be prepared well so that it is
capable of receiving this above mentioned experience. Otherwise it will be like an unprepared
person cutting and threshing the plant- first of all cultivation is not
possible and if it some plants manage to grow the yield will be poor.
இப்பாடலில் சுப்பிரமணியர் தனது இருபெயர்களை அகத்தியருக்கு
விளக்குகிறார். அவை பன்னிருகை வேலன், குமாரன். வேல் என்பது பகுத்துணர்வு. இந்த திறத்தைக் கொண்டு நன்மை தீமைகளை உணர்ந்து
சரியானவற்றைத் தேர்ந்தெடுத்து தீயனவற்றை விலக்கி ஒரு யோகி பரவுணர்வு நிலையை
அடையவேண்டும். வேலன் என்பதற்கு வேலைக் கொண்டவன்,
பகுத்துணர்வைக் கொண்டவன் என்று பொருள்.
பன்னிருகை வேலன் என்பது பன்னிரண்டு தளங்களில் இந்த பகுத்துணர்வைப் பயன்படுத்தி
(உடலினுள்ளும் சஹாஸ்ராரத்தைக் கடந்தும் உள்ள உணர்வு நிலைகள்) ஒரு யோகி பரவுணர்வு நிலையை அடையவேண்டும்.
இப்பாடலில்
விளக்கப்பட்டுள்ள மற்றொரு பெயர் குமாரன்.
தனது விழிப்புணர்வு நிலையை தாலு சக்கரம் அல்லது உண்ணாக்குக்கு ஏற்றும் ஒரு
யோகி அங்கிருந்து கீழிறங்கும் அமிர்தத்தைப் பருகிறார். இந்த அமிர்தம் என்னும் இளமையைக் கொடுக்கும். இதைத்தான் சிவசக்தியின், சிவனின் சக்தியின்,
திருமுலைப் பால் என்கிறார் சுப்பிரமணியர்.
ஒரு நல்ல விளைச்சல் ஏற்பட ஒரு உழவன் ஏர் கொண்டு நிலத்தை
நன்றாக உழவேண்டும். அதேபோல் ஒரு யோகி
மேற்கூறிய அனுபவங்களைப்பெற தனது உடலையும் மனதையும் தயார்ப்படுத்தவேண்டும். இல்லாவிட்டால் உழாத ஒரு நிலத்தில் ஏற்படும்
விளைச்சல்தான் கிட்டும். முதலாவதாக
விளைச்சலே கிடைக்காது, கிடைத்தாலும் மிகவும் கொஞ்சமே கிட்டும்.
No comments:
Post a Comment