Verse 28
பாரப்பா இங்கென்று குறியிற்சாதி
பராசக்தி மூலமிது பாரு பாரு
ஆரப்பா அம்மூல மார்தான் சொல்வார்
அகத்தியமா முனியேகே ளுனக்காகச் சொன்னேன்
நேரப்பா நீ மகனே நினைவாய் நின்று
நிருவிகற்ப சமாதியிலே நீஞ்சி ஏறு
வீரப்பா வெறும்பேச்சுப் பேசிடாமல்
வெட்ட வெளி தனை நாடி விந்தைகாணே
Translation:
See Son, in by
focusing as “this is the sign”
This is the
origin, Parasakthi (origin of Parasakthi)
Who will
reveal this origin, son?
Agatthiya
Mamuni! I am telling for your sake
You remain
with this in your mind
Swim in the
nirvikalpa Samadhi and climb up
Without engaging in empty talk be valorous
Seek the supreme space and see the wonder.
Commentary:
Subramanyar tells Agatthiyar that he is imparting all
these esoteric information only for Agatthiyar’s sake and that generally no one
will reveal it. Hence, let us all pray to
Agatthiyar and to Subramanyar before we go further in this verse.
Subramanyar is talking about the state that he told Agatthiyar
to merge within. This is the origin of everything,
even Parasakthi.
Agatthiyar describes the cosmic emanation in his Saumya
Sagaram as follows: Initially there was
only Param. When it decided to manifest
Sivam occurred and then Sakti. So, the
state that Subramanyar is talking about is the state even before the Sivam and
Sakthi states. All the books on yoga say
that Nirvikalpa Samadhi is the pinnacle of yoga. Here Subramanayar tells Agatthiyar to go even
beyond this state of nirvikalpa where the knower, the process of knowing and
the object of knowledge become one. He
says that this should be performed with the mind as the mind is the agent of
cognition. This step needs valor, it is
not for people who only blabber. This is
the state of supreme space, the super conscious state.
அனைத்துக்கும் மூலமான நிலையைப் பற்றி அகத்தியருக்காகவே கூறுகிறோம்,
பிறர் அதை விளக்க மாட்டார்கள் என்று கூறுகிறார்.
அதனால் நாம் அனைவரும் அகத்தியருக்கும் சுப்பிரமணியருக்கும் நமது
வணக்கத்தைத் தெரிவித்துவிட்டு மேலே தொடருவோமாக.
சுப்பிரமணியர் தான் அகத்தியரை கூடச் சொன்ன நிலையைப் பற்றி
இங்கே மேலும் விளக்குகிறார். இந்த நிலை
அனைத்துக்கும், பராசக்தி உட்பட, மூலமாகும்.
அகத்தியர் தனது சௌமிய சாகரத்தில் உலக வெளிப்பாடு எவ்வாறு
ஏற்படுகிறது என்று கூறுகிறார்.
அனைத்துக்கும் மூலமாக இருந்தது பரம்.
அது உலகமாக வெளிப்பட விழைந்தபோது சிவம் தோன்றியது. சிவத்தை அடுத்து சக்தியும், சதாசிவமும்,
மகேஸ்வரனும், ருத்திரனும், விஷ்ணுவும் பிரம்மாவும் ஒருவர் பின் ஒருவராகத்
தோன்றினர். யோகத்தின் உச்ச நிலை
நிர்விகல்ப சமாதி என்று யோக நூல்கள் கூறுகின்றன.
நிர்விகல்ப சமாதி என்பது காண்பவர், காட்சி, காண்பது என்ற மூன்றும் ஒன்றாகிவிடும்
நிலை. சுப்பிரமணியர் உச்ச நிலை என்பது
இதையும் கடந்தது என்று இங்கே கூறுகிறார்.
இந்த செயல் மனதினால் செய்யப்படுவது என்றும் அவர் கூறுகிறார். மனமே அறிவுபெற உதவும் கருவி. இந்த செயலுக்கு வெறும் பேச்சு உதவாது வீரமான
சாதனையே உதவும். இந்த உச்ச நிலை வெட்ட
வெளி என்றும் சுப்பிரமணியர் கூறுகிறார்.
No comments:
Post a Comment