Tuesday, 30 September 2014

37. Paraaparam and Mukthi

Verse 37
பாரப்பா இம்மூலம்தன்னைப் பார்த்து
பராபரத்தில் மூவருந்தான் முத்தியானார்
ஆரப்பா இதையறியாப் பாவிதன்னை
அடித்தடித்தே அப்புறமுந் தள்ள வேண்டும்
நேரப்பா நிறைந்த பராபரத்தினூடே
நீங்காமல் நிறுத்து நினைவாய்ச் சேர்க்கும்
பேரப்பா இதனாலே முத்தி பெற்றார்
பெரியோர்கள் இதனாலே முத்தி பெற்றார்

Translation:
See son, seeing this origin
The triad attained mukti in the Paraparam
The sinner who does not know this,
Should be beaten and pushed away
Within the Paraparam that is pervading
Fix the thoughts without wavering, it will take you.
They attained liberation because of this
Great souls attained mukti because of this.

Commentary: 
The ultimate state of the Divine is Paraaparam.  Tirumular calls this state as the Jyothi while Agatthiyar calls this as svaroopam or the original form.  When awareness or bodham occurs in this state, it becomes Paraaparai. Param and Parai occur from Paraaparai.  Nadha is present in Parai.  From nadha occurs bindhu, the primordial form the source from which the universe emerges. 
Subramanyar says here that the three attained liberation or mukti in within Paraaparam.  The three may be Param, Parai and Paraaparai.  This is the truth and one who does not know this should be discarded and if this state held firmly in the mind (through practice) it will lead to liberation or mukti.

இறைமையின் உச்ச நிலை பராபரம்.  திருமூலர் இந்த நிலையை சோதி ரூபம் என்கிறார் அகத்தியர் இதை சொரூபம் என்கிறார். இந்த நிலையில் போதம் தோன்றும்போது அது பராபரை எனப்படுகிறது.  இந்த பராபரை நிலையிலிருந்து பரம் மற்றும் பரை தோன்றுகின்றனர்.  பறையிடம் நாதம் இருக்கிறது.  இந்த நாதத்திலிருந்து பிந்து தோன்றுகிறது.  இதுவே காணால் காணப்படும் உலகின்மூலம். 

சுப்பிரமணியர் மூவரும் பராபத்தில் முத்தியடைகின்றனர் என்கிறார்.  இந்த மூவர் பராபரை, பரம் மற்றும் பரை ஆவர்.  இந்த உண்மையை அறியாதவரை அடித்து விரட்ட வேண்டும் என்கிறார் சுப்பிரமணியர்.  இந்த நிலையை மனதில் நிலைபெற்று இருக்குமாறு வைத்தால் முக்திக்கு அது அழைத்துச் செல்லும் என்கிறார் அவர்.  

Saturday, 27 September 2014

36. Action of Vaasi

Verse 36
தானென்ற நாமமதை மவுனம் வைத்து
தமர்வாசல் தனிலிருத்தி மைந்தா மைந்தா
கோனென்ற இம்மூலவெழுத்தினாலே
குருபாதந் தன்னிலையுங் கூட்டி வைக்கும்
வானென்ற வாசியுந்தானடங்கிப் பாயும்
வஸ்தான வஸ்து வென்று வணங்க வைக்கும்
கோனென்ற குண்டலினியின் குறியைக் காட்டும்
கூசாமல் மவுனத்திற் கூட்டும்பாரே

Translation:
Keeping the name, Self, in the silence
Holding it in the threshold of the superior, Son, Son!
Through this letter of the origin “im”
It will take you to the gurupaadam, the state of the Self,
The vital breath, the vaasi will flow under control
 It make (one) salute (it) as the supreme entity
It will show the sign of the kundali, the supreme
It will join (you) with the silence without any hesitation, See.

Commentary:
Subramanyar is talking about vasi’s effect in this verse. Vaasi yogam is regulating the breathing pattern.  When the omkara is uttered as a, u, m during this process the m or the unuttered letter causes vibrations inside the head, in the region of sahasrara.  This effect is due to the vaasi.  Subramanyar is describing the actions that occur within the skull, here.  The vital breath will hold the Self, the jiva, in the silent state.  Through the letter “im” it will take it to the threshold of realization, to the guru paadam, the entrance of sahasrara.  It will make the soul praise the Divine, the Ultimate Reality, as the supreme entity, vasthu.  It will show the nature of kundalini in whose company it traverses the sushumna nadi and hold the Jiva in the state of supreme silence, the state of realization. 

வாசி யோகம் என்னும் பிராணாயாமத்தில் ஓம்காரத்தை அ உ ம் என்று உச்சரிக்கும்போது, ம் என்னும் சப்தம் தலையினுள் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.  இந்த சப்தம் சுவாசத்தினால் நிகழ்த்தப்படுகிறது.   இந்த பயிற்சியின்போது தலையில் அல்லது சஹாஸ்ராரத்தில் ஏற்படும் செயல்களை இப்பாடலில் சுப்பிரமணியர் கூறுகிறார். 

வாசி யோகத்தின்போது சுவாசம்  குண்டலினி அக்னியுடன் சுழுமுனையில் பயணிக்கிறது.  இது “தான்” எனப்படும் ஜீவனை, விழிப்புணர்வை, மவுன நிலையில் வைத்து ஞானத்தின் வாசலில் இடுகிறது. குருபாதம் எனப்படும் சஹாஸ்ராரத்தின் வாசலில் இருக்கும் ஜீவன், முழுமுதற்வஸ்து என்று இறைமையைப் போற்றுகிறது.  இந்த வாசி குண்டலினியின் குறியை செயலைக் காட்டி மவுனத்தில் இருத்துகிறது. 

Friday, 26 September 2014

35. She is the "avusaari" who birthed me before attaining maturity!

Verse 35
பேரிட்டாள் சிறுபிள்ளை வயதோ கொஞ்சம்
பெற்ற பிள்ளை தன்னையுந்தான் பேணிப்பாராள்
சீரிட்டாள் சமையு முன்னமே என்னைப் பெற்றாள்
தேசமெல்லா மவுசாரி யாடிக் கொண்டாள்
ஏறிட்டுப் பார்த்தாலுங் கண்தான் கூசும்
இவளுடைய மாயை யல்லோ வுலக மாச்சு
நேரிட்ட ஐவருக்குந் தாயுமாகி
நிறைந்தாளே யாவருக்கும் பெண்டீர்தானே

Translation:
She named, the little child, very young in age
She will not nurture the child whom she birthed
She birthed me even before attaining maturity
The “avusaari” won all the lands with her dance
If looked up, the eyes will shrink
It is only her maya that became the world
Becoming the mother of the five who occurred
She pervaded, a lady, for everyone.

Commentary:
Subramanayar is talking about kundalini sakthi here.  Siddhas call her “vaalaikkumari” or the vaalai maiden.  They also say that her age is 10.  This number is obtained as a sum of 8+2 or a and u, the letters that represent the numbers 8 and 10 in Tamil lexicon.  Hence, Subramanyar is saying that she birthed him, that is, consciousness emerged from her even before she attained maturity.  The starting point of the emergence is the muladhara, the first stage of this vaalai kumara.  She “matures” and “unites” with Siva at the sahasrara.  The term “avusaari” is used in a very dishonorable way in the Tamil language.  Subramanyar gives a different meaning for this term!  It means “a+ u+ saari” the one who depends on a and u.  Agatthiyar explains the significance of various beeja akshara as follows: a represents Siva, u the Sakti and si the kundalini sakthi.  Si follows a and u and hence is “dependent” on a and u.  Thus Vaalai kumara is “avusaari”.  The manifested world remains so due to the maya of this power which, through its ascendance or descent takes one from the state of complete manifestation or the state of laya.  The five may be the principles, Sadasiva, Maheswara, Rudra, Vishnu and Brahma who represent the cakras from vishuddhi to muladhara and thus, the different states of consciousness.  She remains the sakti of all these emanations.  For Brahma she is the Sarasvati, for Vishnu she is the Lakshmi, for Rudra she is Rudri at the manipuraka cakra, for Maheswara she is Mahesvari and for Sadasiva she is the manonmani.

இப்பாடலில் சுப்பிரமணியர் குண்டலினி சக்தியைப் பற்றிப் பேசுகிறார்.  சித்தர்கள் அவளை வாலைக் குமரி என்று அழைத்து அவளுக்கு வயது பத்து என்பர்.  இந்த பத்து என்பது எட்டும் இரண்டும் கூட்டினால் வருவது. எட்டு  இரண்டு என்பவை அ மற்றும் உ.  தமிழில் எண்கள் எட்டும் இரண்டும் அ மற்றும் உ என்று குறிக்கப்படுகின்றன.   இதனால்தான் சுப்பிரமணியர் அவளுக்கு வயது கொஞ்சம் என்கிறார்.  இந்த சக்தியின் இருப்பிடம் மூலாதாரம்.  இங்கேதான் விழிப்புணர்வு பிறக்கிறது.  அது “சமைந்து”, சுழுமுனையில் ஏறி, சிவனுடன் “கலக்கிறது”.   விழிப்புணர்வு இந்த சேர்க்கைக்கு முன் பல நிலைகளில் பிறக்கிறது என்பதைக் குறிக்க சுப்பிரமணியர் அன்னை குண்டலினி தன்னை “சமையும் முன்” பெற்றாள் என்கிறார்.  தமிழில் “அவுசாரி” என்ற சொல் மிக இழிந்த பெண்ணைக் கூறப் பயன்படுத்தப்படுகிறது.  இங்கே சுப்பிரமணியர் இந்த சொல்லுக்கு வேறொரு பொருளைக் காட்டுகிறார். அவுசாரி என்பது அ வையும் உ வையும் சார்ந்தவள் என்று பொருள்படும்.  குண்டலினி சக்தியை விளக்கும்போது அகத்தியர் அ என்பது சிவன் என்றும் உ என்பது சக்தி என்று சி என்பது வாலை என்றும் கூறுகிறார்.  இவ்வாறு சி என்னும் எழுத்து அ வையும் உவையும் சார்ந்துள்ளது.  இந்த கண்ணால் காணும் உலகம் அனைத்தும் அவளது மாயை.  அவள் தனது ஆட்டத்தால், அசைவினால், பரவுணர்வு நிலை அல்லது லயத்துக்கும் உலகவுணர்வு நிலை அல்லது வெளிப்பாடு என்ற நிலைக்கும் இடையில் ஆன்மாக்களை இருக்கச் செய்கிறாள்.  ஐவர் என்று இப்பாடலில் குறிப்பிடப்படுவது வெளிப்பாட்டின் நிலைகளான சதாசிவன், மகேஸ்வரன், ருத்திரன், விஷ்ணு மற்றும் பிரம்மாவைக் குறிக்கின்றது.  தெய்வங்களாகக் குறிப்பிடப்படும் இவர்கள் ஐவகை உணர்வு நிலைகளைக் குறிக்கின்றனர்.  அவர்களது சக்தியாகத் திகழ்பவள் குண்டலினி. பிரம்மாவுக்கு சரஸ்வதியாகவும், விஷ்ணுவுக்கு லட்சுமியாகவும், ருத்திரனுக்கு ருத்திரியாகவும் மகேஸ்வரனுக்கு மகேச்வரியாகவும் சதாசிவனுக்கு மனோன்மணியாகவும் குண்டலினித் தாய் திகழ்கிறாள். 

Thursday, 25 September 2014

34. Satputran, Kumaraguru Paran

Verse 34
நில்லடா சற்புத்ர னானால்மைந்தா
நிற்கையிலே நின்ற நிலை உனக்குத் தோன்றும்
சொல்லடா சுழிக்காற்று நிலைக்கொட்டாது
சொன்னதெல்லாமெய்யாகும் நினைந்த போது
அல்லடா எனைப் போலே யார்தான் சொன்னார்
ஆதியந்தம் அனாதியந்தம் இரண்டு மைந்தா
கொல்லடாமாயைதனை ஒழித்ததாலே
குமரகுரு பரனென்று நமக்குப் பேரே

Translation:
Remain if you are satputra, son
If you remain so, the state of existence will occur to you
Say son, the air in the whorl will not remain
All that was said will become true, when thought about it.
Who has said this like me?
There are the two- beginning/end and the eternal/end
Kill the maya, as I have destroyed it
My name is Kumaraguru Paran.

Commentary:
Charya, Kriya, yoga and jnana are the four steps in God realization.  Among these charya is called Satputra margam.  Tirumular has described it elaborately in his Tirumandiram 5th Tantra, 11th section, verse 2.  He says, “worship, reading, praising, chanting, faultless good tapas, being faultless, purifying the rice with water are all Satputra margam”.  This implies a state of internal and external purity.  This is the first which, according to Agatthiyar, leads to kriya, yoga and ultimately to jnana.  This process will show the true state of everything, thus delusion is removed.  The air of the whorl is prana that flows through the cakra.  The achievement in this step is that all that the yogi wishes for or says will happen, will occur.  Subramanyar talks about two types of end.  One is “aadi andham” beginning and end. This is the beginning of the birth and end of it.  The next one is “anaadhi andham” the eternal end, the state of supreme consciousness, the point of no return, the ultimate end, that of remaining eternally.  These two could be achieved by destroying maya.  Subramanyar says that as he has done so he got the name “Kumaraguru Paran”.  Kumara means one who destroyed the darkness of ignorance-Kumara, guru is the preceptor, paran is the Lord, the one in the ultimate state of Param.  Commonly this name is uttered as Kumaraguruparan.  The way the name is split in the verse gives three qualities that form the basis of this name.

சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு படிகள் இறைவனைக் காட்டுவன.  இவற்றில் சரியை என்பது சத்புத்திர மார்க்கம் எனப்படுகிறது.  திருமூலர் தனது திருமந்திரம் ஐந்தாம் தந்திரம், பதினொன்றாம் பகுதி பாடல் இரண்டில் சத்புத்திர மார்க்கத்தை, “பூசித்தல், வாசித்தல், போற்றல், செபித்திடல், ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை நேசித்திட்ட அன்னமும் நீர் சுத்தி செய்தல் மற்று ஆசற்ற சற்புத்திரமார்க்கமாகுமே” என்று இதை விளக்குகிறார்.  இவ்வாறு சத் புத்திரமார்க்கம் உள்ளும் வெளியும் அழுக்கற்று இருப்பதைக் குறிக்கிறது.  இந்த சரியை இதனை அடுத்த கிரியைக்கும் யோகம் ஞானத்திற்கும் அழைத்துச் செல்லும் என்று அகத்தியர் தனது சௌமிய சாகரத்தில் கூறுகிறார். 
சுழிக்காற்று என்பது சக்கரங்களில் பாயும் பிராண வாயுவைக் குறிக்கும்.  இந்த நிலையில் ஒரு யோகி கூறுவன அனைத்தும் பலிக்கும்.  வாக் சித்தி ஏற்படும்.

இதனை அடுத்து சுப்பிரமணியர் இருவிதமான அந்தம் அல்லது முடிவுகளைப் பற்றிக் கூறுகிறார்.  ஆதி அந்தம் என்பது பிறப்பிறப்பையும் அநாதி அந்தம் என்பது உச்ச முடிவான என்னும் நிலைத்திருக்கும் பரவுணர்வு நிலையையும் குறிக்கும்.  இந்த இரண்டும் மாயையைக் கொன்றால் ஏற்படும் என்று கூறும் சுப்பிரமணியர் அதனால்தான் தனக்கு குமரகுரு பரன் என்று பேர் ஏற்பட்டது என்கிறார்.  குமரன் என்பது கு என்னும் அஞ்ஞான இருட்டை மரிக்கச் செய்தவன், கொன்றவன் என்று பொருள்.  அவனே குரு.  அவன் உச்ச நிலையான பர நிலையில் இருப்பவன்.  அதனால் அவன் குமரகுரு பரன்.  பொதுவாக குமரகுருபரன் என்று நாம் கூறும் பெயரை சுப்பிரமணியர் பாடலுக்காக குமரகுரு பரன் என்று பிரித்தது நமக்கு அவரது மூன்றுவித தன்மைகளைக் காட்டுகிறது!

33. Vasi, mental focus and Vedanta Paraaparai

Verse 33
பாரப்பா வாங்கு சிங்கு என்றேவாகிப்
பராபரமாங் குலதெய்வந் தன்னைப் பார்த்து
தேரப்பா நிலையறிந்து பிதுங்கொட்டாமல்
நீ மகனே பூசை நிறை வேற்றிக்கொண்டு
ஏரப்பா பூரணத்தின் மனக்கண்ணாட்ட
இடைகலையும் பின்கலையீடழிந்து போகும்
வேறப்பா சுழிமுனையில் நினைவாய் நின்று
வேதாந்த பராபரையை வேண்டி நில்லே

Translation:
See son, as vang and sing
The kula deity Paraaparam,
See the status without spilling over
You, son, fulfilling the worship ritual
Climb, fixing the mental eye of the fully complete
The idakalaa and pingalaa will be destroyed
Remaining with focus at the sushumna
Remain seeking the Vedanta Paraparai.

Commentary:
Subramanyar is talking about the vaasi yogam in the first line. Vang and sing are the letters chanted while drawing the breath in and out respectively.  The deity eulogized here is Paraaparam.   The pooja that Subramanyar talks about is internal worship following which the mental eye of internal perception should be used to experience altered states of consciousness.  The vital breath and fire of kundalini will flow through the sushumna nadi.  The Vedanta Paraaparai is kundalini sakthi.  Subramanyar is advising Agatthiyar to remain seeking her.


சுப்பிரமணியர் இப்பாடலில் வாசி யோகத்தைப் பற்றிப் பேசுகிறார்.  வங் சிங் என்னும் பீஜ மந்திரங்கள் முறையே மூச்சை உள்ளிழுக்கும்போதும் வெளிவிடும்போதும் உச்சரிக்கப்படுகின்றன.  இங்கு வழிப்படப்படும் குலதெய்வம் பராபரம், செய்யப்படும் பூசை அந்தர்யாகம்.  இந்த வழிபாட்டுக்குப் பிறகு மனக்கண்ணை, கவனத்தை உள்ளே நிறுத்தினால் இடகலையும் பிங்கலையும் செயல்படாமல் பிராணனும் குண்டலினி சக்தியும் சுழுமுனையில் பாயும்.  வேதாந்த பராபரை என்பது குண்டலினி சக்தியைக் குறிக்கும்.  அவளை வேண்டி நிற்குமாறு சுப்பிரமணியர் கூறுகிறார். 

Wednesday, 24 September 2014

32. Events at the peak of the experience

Verse 32
போமடா இரியென்றுங் கிரியென்றோதி
பொருத்தமுடன் பூரணத்தைக் கலந்து பாரு
ஆமாடா சகல சித்தும் அதிகமாகும்
அடங்காத பூதமைந்தும் ஒன்றாய்ச் சேரும்
வாமடா வாமமுந்தான் கசிந்து பாயும்
வடவரையில் துருவனுட சூட்சங் காட்டும்
காமடா காமப்பால் திரண்டு காணும்
காணாத காட்சியெல்லாங் காணும் பாரே

Translation:
It will go as hrim kreem
Merge with the fully complete and see it
Yes son, all the mystical accomplishments will increase
The uncontrollable five elements will merge into one
Vaamam will ooze and flow
The subtlety of Durva in the northern peak, it will show
Desire, the kaamappaal will accumulate and be seen
All the “difficult to see” sights will be seen, see!

Commentary:
Hreem and kreem are two Sakthi bheeja mantras.  This sadhana will grant all the mystical accomplishments in abundance.  This is the process of laya and so all the elements will merge with one another starting from muladhara cakra which represents the earth element.  Vaamam in this verse may be referring to sexual fluids.  This line may be referring to the concept of “madai maarral” or reversing the flow of the sexual fluids.  Vadavarai is the peak in the north.  This may be referring to the sahasrara.  The star, Druva, is the pole star or the north star which is important in navigation both in the worldly sense as well in the spiritual journey.  Seeing the star of Druva represents attaining a specific state in the spiritual progress.  Siddhas use the terms kaamappaal, kaanal paal, vaamappaal, somappaal to indicate various fluids that are released at specific stages of spiritual progress.  All the rare sights will become visible at this advanced state.


ஹ்ரீம் மற்றும் க்ரீம் என்பவை சக்தி பீஜ மந்திரங்கள். இந்த குண்டலினி யோகப் பயிற்சி எல்லா சித்திகளையும் அருளும் என்கிறார் சுப்பிரமணியர்.  சித்திகள் என்பவை ஆன்மீகப் பாதையில் மைல்கற்கள்.  முந்தைய பாடல்களில் விளக்கப்பட்டுள்ள பயிற்சிகள் லயம் அல்லது ஆதி நிலையை அடைவதைக் குறிக்கின்றன.  அதனால் சுப்பிரமணியர் எல்லா பூதங்களும் ஒன்றாகச் சேரும் என்று கூறுகிறார்.  “வாமம் கசிந்து பாயும்” என்பது சித்த யோகப் பயிற்சிகளில் ஒன்றான மடைமாற்றல் என்பதைக் குறிக்கலாம்.  இந்தப் பயிற்சியில் விந்து தனது கீழ்நோக்கிய பயணத்தை மாற்றி மேல் நோக்கி செலுத்தப்படுகிறது.  இது பல அரிய சித்திகளை யோகிக்கு அருளுகிறது.  வடவரை என்பது சஹாஸ்ராரத்தைக் குறிக்கலாம்.  வரை என்பது மலையுச்சியைக் குறிக்கும், தத்துவத்தின் உச்ச நிலையைக் குறிக்கும் என்று முன்னமே பார்த்தோம்.  துருவ நட்சத்திரம் என்பது கடலில் செல்லும் மாலுமிகளுக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறது.  ஆன்மீகப் பயணத்தை மேற்கொள்பவர்களுக்கும் அது அவர்களது பாதையைக் காட்டுகிறது.  சித்தர்கள் காமப்பால், கானல் பால், வாமப் பால், சோமப்பால் என்று உடலில் பல்வேறு நிலைகளில் சுரக்கும் திரவங்களைக் குறிப்பிடுகின்றனர்.  இந்த பயிற்சியை மேற்கொள்ளும் யோகிக்கு பல அரிய காட்சிகள் கண்ணில் தென்படுகின்றன.

Monday, 22 September 2014

31. Udayagiri, Mucchandhi, kaaranam and pooranam.

Verse 31
ஆச்சடா மூன்றெழுத்தினாலேமைந்தா
ஆறுவரை ஊடுருவி அடுக்கத் தோணும்
மூச்சடா மூச்சடங்கி மேலே நோக்கு
முச்சந்தி உதயகிரி உச்சி தோணும்
வாச்சடா வாயு சாரணையாம் வேகம்
வாரியுனை உயரவினித் தூக்கியோடும்
காச்சடா கருவிகளைத் தள்ளியோடுங்
காரணமும் பூரணமுங் கலந்து போமே.

Translation:
Son, with the three letters
The six peaks will be pierced and they will appear stacked
The breath, with the breath stopping look up
The point of meeting of the three, the Udayagiri peak will appear
The air, with increasing speed in a straight path
It will collect you and run, carrying to heights
It will go pushing away the senses
The Cause and the Fully complete will merge and go together.

Commentary:
Subramanayar is talking about the run of the vital breath and the kundalini sakthi.  Agatthiyar in his Saumya Sagaram says that in our body, the “madapathi” the Lord remains as the fire of kundalini and the limited soul remains as the vital breath.  During kundalini yogam the vital breath and the fire of kundalini ascend the sushumna nadi.  The soul is carried to the state of super consciousness by the fire of kundalini, the Divine force.  They pierce the six peaks, the cakras and reach the ajna cakra, “mucchandhi” where the three nadis meet. The siddhas equate the cakras or the energy vortices to peaks, giri.  Udayagiri is the peak where supreme consciousness emerges.  This may be the Sahasrara or the ajna.  During this process the breath stops- this is the kumbaka siddhi, the senses lose their significance as knowledge occurs without the help of the senses.  The kaaranam- the kundalini sakthi, and pooranam- vital breath, will travel together.

இப்பாடலில் சுப்பிரமணியர் பிராணன் மற்றும் குண்டலினி அக்னியின் ஓட்டத்தைக் கூறுகிறார்.  அகத்தியர் தனது சௌமிய சாகரம் என்னும் நூலில் மடபதியான இந்த உடலில் இறைவன் அக்னியாகவும் ஜீவன் வாயுவாகவும் உள்ளனர் என்கிறார்.  அக்னி என்பது குண்டலினி சக்தியைக் குறிக்கிறது, வாயு என்பது பிராணன் ஆகும். இந்த இரண்டு வஸ்துகளும் சேர்ந்து உயர்விழிப்புணர்வு நிலையை நோக்கிப் பயணிக்கின்றன.  அதைத்தான் கடைசி வரியில் காரணமும் பூரணமாம் கலந்து போகும் என்கிறார் சுப்பிரமணியர்.

சித்தர்கள் பொதுவாக சக்கரங்களை சக்தி மையங்களை வரைகள் அல்லது மலைச்சிகரங்கள் என்று அழைக்கின்றனர்.  பொதிகை, மகேந்திர கிரி, உதய கிரி என்பவை அத்தகைய சக்தி மையங்களே, விழிப்புணர்வு நிலைகளே.  மேற்பாடலில் கூறிய மூன்று எழுத்துக்களால், ந, ம, சி என்ற எழுத்துக்களால்ஆறு வரைகள், அல்லது சக்கரங்கள், துளைக்கப்பட்டு அவை ஒன்றின்மேல் ஒன்று அடுக்கியதைப்போல், அவற்றின் தன்மைகள் ஒன்று சேர்க்கப்பட்டதைப் போல தோன்றும் என்றும் இந்த நிலையில் மூச்சின் ஓட்டம் நின்றுவிடும்- கும்பக சித்தி ஏற்படும் என்றும் கருவிகளின் உதவியில்லாமல் அறிவு ஏற்படுவதால் அவை புறம்தள்ளப்படும் என்றும் முச்சந்தி எனப்படும் மூன்று நாடிகள் கூடும் இடமான ஆக்ஞை, உதய கிரி எனப்படும் பரவுணர்வு உதிக்கும் இடம் ஆகியவை புலப்படும் என்றும் சுப்பிரமணியர் இப்பாடலில் கூறுகிறார். 

Sunday, 21 September 2014

30. Dance of the Ambalavar, the three letters and Kailayam



Verse 30
பாரப்பா விண்ணமொரு மவுனங் கேளு
பராபரத்தி னடியினுட பாதம் போற்றி
ஆரப்பா நசிஎன்று மசிஎன்றோதி
அடங்காத தேவிதனை அர்ச்சித் தேற்றிக்
கூரப்பா குவிந்துமனமொன்றாய் நின்று
கூடுகையில்அம்பலவர் கூத்துந்தோணும்
சேரப்பா விம்மூன்று எழுத்தினாலே
சிவனுடைய கயிலை வரை தெரியலாச்சே

Translation:
See son, hear about another silence,
Praising the sacred feet of the Paraparam
Chanting na si and ma si
Worshipping the Devi who is uncontrollable and raising her
Remaining, Son, with the mind focused
While associating, the arena one’s dance will appear
Join, Son, with these three letters
Siva’s Kailaya started becoming visible

Commentary:
The term “mavunam” is generally interpreted as silence.  When Subramanyar says “innam oru
mavunangkelu” then one wonders what this term really means.  If we split this word as “ma+u+ang” it means laya or ma the manifested world becoming u the sakthi and ang the Siva. The order of manifestation is sakti, the u emerging from Siva the ang and manifesting as ma the world.  The reverse of this process is laya or merging with the origin. 

The three letters that Subramanyar mentions here are na, si and ma.  Si is the agni  bheejam.  It is the letter of the manipuraka cakra that represents the fire element.  Na is the letter of the muladhara where our karma and samskara are stored. The manifested world that each of us face depends on the set of karma and samskara that start operating in this birth.  Ma is the letter of the svadhishtana or sva+adhishtana- the locus of the self.  The svadhishtana cakra operates in conjunction with the muladhara cakra in a specific birth.  Thus, ma si may represent the burning

away of all the factors that inhibit the soul from leaving the manifested world and merging with the state of supreme consciousness.  The Devi who is uncontrollable is the kundalini sakthi.  When she emerges from her inactive state and ascends through the sushumna nadi is it like a raging fire.  This process is facilitated by mental focus. 

 “ambalavar” means the one of the arena.  The arena here is the citramabalam or the arena of consciousness.  Kailaya represents the state of supreme consciousness.  Subramanyar says that during this process this state starts to become perceivable.   

பொதுவாக மவுனம் என்னும் சொல் பேச்சற்ற நிலையைக் குறிக்கும்.  இன்னம் ஒரு மவுனங்கேளு என்று சுப்பிரமணியர் கூறும்போது இந்த சொல் எதைக் குறிக்கிறது என்ற கேள்வி எழுகிறது.  மவுனம் அல்லது மவுனங் என்னும் சொல்லை ம+உ+அங் என்று பிரித்தால் ம என்பது மாயையால் தோற்றுவிக்கப்பட்ட உலகத்தையும் உ என்பது சக்தியையும் அங் என்பது அனைத்துக்கும் காரணமான சிவத்தையும் குறிக்கும்.  இவ்வாறு மவுனங் என்பது வெளிப்பட்ட உலகம் மீண்டும் தனது ஆதி நிலையை சிவநிலையை அடைவதைக் குறிக்கிறது. இதுதான் லயம்.  சுப்பிரமணியர் இங்கே லயத்தைப் பற்றித்தான் பேசுகிறார்.


இப்பாடலில் குறிப்பிடப்படும் மூன்று எழுத்துக்கள் ந, சி மற்றும் ம என்பவை.  ந அல்லது நங் என்பது மூலாதாரத்தின் எழுத்து.  ம என்பது ச்வதிஷ்டானத்தின் எழுத்து, சி என்பது மனிபூரகத்தின் எழுத்து.  மூலாதாரம் பூமி தத்துவத்தையும், ஸ்வாதிஷ்டானம் நீர் தத்துவத்தையும் மணிபூரகம் நெருப்புத் தத்துவத்தையும் குறிக்கின்றன. மூலாதாரத்தில்தான் நமது கர்மங்களும் சம்ஸ்காரங்களும் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.  சுவாதிஷ்டானம் என்பது ஸ்வ+ அதிஷ்டானம் என்று பிரியும்போது தனது இருப்பிடம், ஆத்மாவின் பதம் என்று பொருள்படும்.  இதனால் நசி என்பது மூலாதாரத்தில் உள்ள கர்மங்களின் எரிப்பையும் மசி என்பது ஆத்மாவை தனது உயர்நிலையை அடைவதைத் தடுப்பவற்றின் எரிப்பையும் குறிக்கின்றன.  இவ்வாறு இந்த மூன்று எழுத்துக்களையும் உச்சரித்து மனக்குவிப்புடன் நோக்கினால் கட்டுப்படுத்துவதற்கு அறியவளான குண்டலினி சக்தி மேலே ஏறுகிறாள்.  அப்போது அம்பலவரின் ஆட்டம் புலப்படும் என்கிறார் சுப்பிரமணியர்.   அம்பலவர் என்பது பரவுணர்வு நிலையைக் குறிக்கும்.  இந்த விழிப்புணர்வு நிலையின் ஆட்டமே, அசைவே, உலகமாக விரிகிறது.  இது நடைபெறும் இடம் கைலாயம்.  கைலாயம் என்பது சஹாஸ்ராரத்தைக் கடந்த நிலையைக் குறிக்கும்.  இந்த நிலை இந்த சாதனையின்போது மெதுவாகப் புலப்படஆரம்பிக்கும் என்கிறார் சுப்பிரமணியர். 

Saturday, 20 September 2014

29. It is the sound of the earth, it pervades the sakthi deeksha

Verse 29
காணுவது பராசத்தி தீட்சைக்கெல்லாம்
கலந்திருந்தது அதினுடைய கனல்தான் மைந்தா
பூணுவது இதையன்றிப் புலன்வேறில்லை
பூமியுட நாதமென்றும் இதற்குப் பேரு
வாணுலகில் திரியாதேமயங்கிடாதே
வாய்பேசாப் பூரணத்தை வணங்கிப் போற்றி
தோணுவதல்லாம் உனக்குத் தோணும் பாரு
துரியாதீதம் தனைத் தொடந்து பாரு

Translation:
In all the initiations for Parasakthi
Its fire merged within them
This is that which is adorned, the senses are not something else
This is also called the sound of the earth
Do not roam around in this world do not get deluded
Praising the fully complete that does not speak/ that cannot be spoken about
All that, that should occur, will occur for you
Continue seeing the turiyatheetham.

Commentary:
Subramanyar tells Agatthiyar that all the sakthi deeksha are pervaded by the fire of kundalini, the Lord’s supreme energy.  Agatthiyar in his paripurna sutra 216 talks about different Sakti deeksha and Siva deeksha. This is the substratum for the nada or sound.  Subramanyar says that this constitutes the nada of the earth.  Earth here means both the physical world that we see as well as the muladhara the site that represents the earth principle.  Subramanayar tells Agatthiyar to not get deluded if someone says something different about this concept.  He tells Agatthiyar to praise the “vaai pesaa pooranam”.  This may mean the fully complete state which is supreme silence or the state that is beyond verbal expression.  If Agatthiyar does so, “all that which should occur will occur for him”.  This may mean all the thoughts, all the sites and all the revelations.   To have this happen Agatthiyar should watch the state of turiyatheetha or the state of consciousness beyond the turiya. 
The soul remains in the muladhara when it is in the state of turiyatheetha.  The fire of kundalini is also in the muladhara.  It is this fire that forms the basis of everything in this world.  This is the site of the nada and bindu that expand as the manifested world.  This is the revelation that Subramanyar is conferring upon Agatthiyar.


இப்பாடலில் சுப்பிரமணியர் எல்லா சக்தி தீட்சைகளுக்குள்ளும் இருப்பது இந்த குண்டலினி அக்னிதான் என்கிறார். அகத்தியர் தனது பரிபூரண சூத்திரம் 216ல் பல நிலைகளான சிவ தீட்சை சக்தி தீட்சைகளை விளக்குகிறார்.  இந்த அக்னியே பூமியின் நாதமாக இருப்பது என்கிறார் சுப்பிரமணியர்.  இங்கு பூமி என்பது உலகத்தையும் நமது உடலில் மூலாதார சக்கரத்தையும் குறிக்கும்.  மூலாதார சக்கரம் பூமித் தத்துவத்தைக் குறிக்கும்.  இங்கிருந்துதான் நாதமும் பிந்துவும் உலகமாக, நமது உடலின் பல்வேறு தத்துவங்களாக, நமது புலன்கள் உட்பட, விரிகின்றன.  இந்த உண்மையை அறியாமல் உலகில் மயங்கித் திரியவேண்டாம் என்று சுப்பிரமணியர் அகத்தியரிடம் கூறுகிறார்.  இந்த தத்துவத்தை அறிந்து “வாய்பேசா பூரணத்தை” வணங்குமாறு அவர் கூறுகிறார்.  வாய் பேசா பூரணம் என்பது வார்த்தைகளால் விளக்க முடியாத பூரணத்தை அல்லது மோனநிலையில் இருக்கும் பூரணமான இறைவனைக் குறிக்கும். அப்போது அகத்தியருக்கு தோணுவதெல்லாம் தோன்றும் என்கிறார் சுப்பிரமணியர்.  இது மனதில், புத்தியில், பார்வையில் தோணவேண்டியவை அனைத்தும் தோணும் என்று பொருள்படும்.  இதற்கு அகத்தியர் தொடர்ந்து துரியாதீத்த நிலையைப் பார்க்கவேண்டும் என்கிறார் சுப்பிரமணியர்.  துரியாதீதம் என்பது துரியத்தையும் கடந்த நிலை.  மூலாதாரத்தில் நிலைத்து நின்று இந்த நிலையை ஆத்மா அனுபவிக்கின்றது.    

Friday, 19 September 2014

28. Supreme state is even beyond nirvikalpa

Verse 28
பாரப்பா இங்கென்று குறியிற்சாதி
பராசக்தி மூலமிது பாரு பாரு
ஆரப்பா அம்மூல மார்தான் சொல்வார்
அகத்தியமா முனியேகே ளுனக்காகச் சொன்னேன்
நேரப்பா நீ மகனே நினைவாய் நின்று
நிருவிகற்ப சமாதியிலே நீஞ்சி ஏறு
வீரப்பா வெறும்பேச்சுப் பேசிடாமல்
வெட்ட வெளி தனை நாடி விந்தைகாணே

Translation:
See Son, in by focusing as “this is the sign”
This is the origin, Parasakthi (origin of Parasakthi)
Who will reveal this origin, son?
Agatthiya Mamuni!  I am telling for your sake
You remain with this in your mind
Swim in the nirvikalpa Samadhi and climb up
Without engaging in empty talk be valorous
Seek the supreme space and see the wonder.

Commentary:
Subramanyar tells Agatthiyar that he is imparting all these esoteric information only for Agatthiyar’s sake and that generally no one will reveal it.  Hence, let us all pray to Agatthiyar and to Subramanyar before we go further in this verse. 

Subramanyar is talking about the state that he told Agatthiyar to merge within.  This is the origin of everything, even Parasakthi. 
Agatthiyar describes the cosmic emanation in his Saumya Sagaram as follows:  Initially there was only Param.  When it decided to manifest Sivam occurred and then Sakti.  So, the state that Subramanyar is talking about is the state even before the Sivam and Sakthi states.  All the books on yoga say that Nirvikalpa Samadhi is the pinnacle of yoga.  Here Subramanayar tells Agatthiyar to go even beyond this state of nirvikalpa where the knower, the process of knowing and the object of knowledge become one.  He says that this should be performed with the mind as the mind is the agent of cognition.  This step needs valor, it is not for people who only blabber.  This is the state of supreme space, the super conscious state.

அனைத்துக்கும் மூலமான நிலையைப் பற்றி அகத்தியருக்காகவே கூறுகிறோம், பிறர் அதை விளக்க மாட்டார்கள் என்று கூறுகிறார்.  அதனால் நாம் அனைவரும் அகத்தியருக்கும் சுப்பிரமணியருக்கும் நமது வணக்கத்தைத் தெரிவித்துவிட்டு மேலே தொடருவோமாக.
சுப்பிரமணியர் தான் அகத்தியரை கூடச் சொன்ன நிலையைப் பற்றி இங்கே மேலும் விளக்குகிறார்.  இந்த நிலை அனைத்துக்கும், பராசக்தி உட்பட, மூலமாகும்.

அகத்தியர் தனது சௌமிய சாகரத்தில் உலக வெளிப்பாடு எவ்வாறு ஏற்படுகிறது என்று கூறுகிறார்.  அனைத்துக்கும் மூலமாக இருந்தது பரம்.  அது உலகமாக வெளிப்பட விழைந்தபோது சிவம் தோன்றியது.  சிவத்தை அடுத்து சக்தியும், சதாசிவமும், மகேஸ்வரனும், ருத்திரனும், விஷ்ணுவும் பிரம்மாவும் ஒருவர் பின் ஒருவராகத் தோன்றினர்.  யோகத்தின் உச்ச நிலை நிர்விகல்ப சமாதி என்று யோக நூல்கள் கூறுகின்றன.  நிர்விகல்ப சமாதி என்பது காண்பவர், காட்சி, காண்பது என்ற மூன்றும் ஒன்றாகிவிடும் நிலை.  சுப்பிரமணியர் உச்ச நிலை என்பது இதையும் கடந்தது என்று இங்கே கூறுகிறார்.  இந்த செயல் மனதினால் செய்யப்படுவது என்றும் அவர் கூறுகிறார்.  மனமே அறிவுபெற உதவும் கருவி.  இந்த செயலுக்கு வெறும் பேச்சு உதவாது வீரமான சாதனையே உதவும்.  இந்த உச்ச நிலை வெட்ட வெளி என்றும் சுப்பிரமணியர் கூறுகிறார்.   

Thursday, 18 September 2014

27. Dance at Tillai, Anuraagam, green peacock

Verse 27
கூடுவது லகுவல்ல வாய்ப்பேச்சல்ல
கோடியிலே ஒருவனடா குறியைக் காண்பான்
ஆடுவது தில்லையிலே காலைத் தூக்கி
அம்பரமாமாம்பலத்தில் ஆட்டைப் பார்த்து
நாடுவது சதாகாலம் நாட்டம்பாரு
நமனேது நமனேது நாசமாகும்
பாடுவது அனுராக மனந்தங்கேட்கப்
பச்சை மயிலேறியுந்தான் பாய்ந்தேன் பாரே

Translation:
Merging is not easy; it is not mere talk,
One in a million will see the sign
Dancing with foot up as in Tillai
In the arena of the world, seeing the dance
Seeking, at all times with interest,
Where is the god of death, where is the god of death, it will be destroyed
Hearing the music eternally
I rushed riding on the green peacock.

Commentary:
Subramanyar says that attaining the state of supreme consciousness is not easy.  It cannot be achieved through discussion; it is procedure that should be put to practice. He then refers to Siva’s dance at Tillai and says that his occurs at the arena of the world.  Traditionally Tillai refers to Chitambaram.  However, it also refers to the space of consciousness, chith ambaram, the state attained at the pinnacle of realization.  The Lord’s cosmic dance is the cause of his five functions: creation, sustenance, dissolution, obfuscation and bestowing grace. 
Tirumular has dedicated an entire section on Siva’s dance in his ninth tandiram (section 8).  He describes five types of dances, Sivananda kootthu, sundara kootthu, pon padhi kootthu, pon thillai kootthu and arpudha koothu.  Among these the dance at Tillai signifies destruction of aanava mala of the living beings.  Siva’s dance is witnessed at the pinnacle of kundalini yoga.  The term ‘anuraagam’ means desire, love.  May be this is what Tirumular referred to as ‘anbe Sivam”!
Subramanyar says that by riding on the green peacock he is rushing to reaching this state. Siddhas ascribe the color green to Kundalini Sakti. Peacock refers to Vasi (as we saw before).  Thus, green peacock refers to the vaasi and the fire of kundalini gushing through the sushumna nadi.

இறைவனுடன் கூடுவது என்பது எளிதான செயலல்ல, அது பேச்சால், வெறும் ஞானத்தால் வருவது அல்ல.  சாதனையின் மூலம் வருவது. இந்தக் கருத்துடன் இப்பாடலைத் தொடங்கும் சுப்பிரமணியர் இறைவனின் தில்லை நடனத்தை அடுத்து கூறுகிறார்.  இறைவனின் நடனம் அவனது ஐந்தொழில்களை, படைப்பு, காப்பு, லயம், மறைப்பு, அருளல், என்ற ஐந்து செயல்களைக் குறிக்கிறது.  திருமூலர் தனது திருமந்திரத்தில் இறைவனின் நடனத்தை ஒரு பகுதி முழுவதும் விளக்கியுள்ளார் (தந்திரம் 9, பகுதி 8).  அதில் அவர் ஐவகை நடனங்களைக் குறிக்கிறார்.  அவை சிவானந்தக் கூத்து, சுந்தரக் கூத்து, பொன் பதிக் கூத்து, பொன் தில்லைக் கூத்து, அற்புதக் கூத்து என்பவை.  இவற்றில் தில்லைக் கூத்து என்பது இறைவனின் ஆன்மாக்களின் ஆணவத்தை அழிப்பதைக் குறிக்கிறது.  இந்தக் கூத்தை ஒருவர் குண்டலினி யோகத்தின் உச்சிநிலையில் காண்கிறார்.  அனுராகம் என்பது அன்பு என்று பொருள்படும்.  இந்த உச்ச நிலை அன்புநிலை.  இதைத்தான் திருமூலர் அன்பேசிவம் என்றார் போலும்.  இந்த நிலையைத் தான் பச்சை மயில் ஏறி, வாசியின் மூலம், அடையப் பாய்கிறேன் என்கிறார் சுப்பிரமணியர்.  வாலை அல்லது குண்டலினியின் நிறம் பச்சை என்று சித்தர்கள் குறிப்பிடுகிறார்கள்.  குண்டலினி யோகத்தின்போது மூச்சும் குண்டலினி அக்னியும் சுழுமுனையில் பயணிக்கின்றன.