Verse 42
பாரப்பா ஆலயத்தில் நெய் விளக்குப்
பல பூசை செய்தும் அவன் அலைந்திட்டாலும்
ஆரப்பா அன்னதானம் பூமி தானம்
அப்பனே மாதானஞ் செய்திட்டாலும்
நேரப்பா குளங்கிணறு வெட்டினாலும்
நீ மகனே கரையேற மாட்டாய் பாவி
தேரப்பா தேட்கொடுக்காங் கொடுக்காந்தேளு
திரை ஏழை அறுத்தும் இனிக் கண்டு தேரே.
Translation:
See son,
(lighting) a lamp with clarified butter
Even if he
roams around performing several worship rituals
Offering food,
land
Even if he performs great offerings, son,
Even if he digs lakes and wells
You son, will not reach the shore
Become clear son, the sting of a scorpion, the scorpion
which is the sting
Cutting away the seven screens, see it and become an
expert.
Commentary:
Subramanyar spoke about various rituals that people
perform thinking that those actions will win them wisdom and liberation. In the previous verse he emphasized that mere
worship rituals without proper understand is useless. Here he says that offering or dhana alone
will not win liberation. The most
important of all the dhaana is the offering of food or annadhaana. Hence,
Subramanyar begins with anna dhaana and elaborates it to include offering of
land and all other great offerings. Digging
a well or lake is said to earn immense punya as it quenches the thirst of
millions. Here Subramanyar is saying
that none of those actions will win liberation.
The last two lines are about an esoteric concept that one should learn
from a guru. We will try to understand it
as much as we could with our limited knowledge.
Subramanyar is talking about the sting of a scorpion. This is related to
the power of kundalini. The ida nadi
originates from the right big toe and runs up to the left nostril. The pingala nadi originates at the left big
toe. When the kundalini Shakti starts
its ascent, the first piercing is said to be as sudden and piercing like a
scorpion’s sting or a snake bite. Subramanyar
is alluding to this phenomenon in the last section of this verse. This process tears away the seven screen that
we already saw before in verses 4, and 39.
முந்தைய பாடலில் எவ்வாறு பொருள் புரியாத பூசைகள் பயனில்லை
என்று கூறிய சுப்பிரமணியர் இப்பாடலில் உண்மையைப் புரிந்துகொள்ளாமல் தானம் மட்டும்
செய்தால் பயனில்லை என்று கூறுகிறார்.
தானத்தில் சிறந்தது அன்ன தானம்.
அதனால் அன்னதானத்தை முதலில் கூறும் சுப்பிரமணியர் அதனை அடுத்து பூமி தானம்
போன்ற பல மகா தனங்களைச் செய்தாலும் குளம் கிணறு வெட்டினாலும் ஒரு பயனுமில்லை என்று
வலியுறுத்துகிறார். இதனால் இவற்றைச் செய்ய
வேண்டாம் என்று அவர் கூறுவதாகக் கொள்ளக் கூடாது.
இவற்றினால் மட்டும் ஞானம் பிறந்துவிடும் என்று எண்ணக் கூடாது குண்டலினி
யோகம் மட்டுமே ஒருவரை பரவுணர்வு நிலைக்கு அழைத்துச் செல்லும் என்று
புரிந்துகொள்ளவேண்டும். இதனை அடுத்து அவர்
ஒரு மிக ரகசியமான விவரத்தைக் கோடிகாட்டுகிறார்.
தேள் கொட்டு என்று அவர் கூறுவது குண்டலினி சக்தி மேல் நோக்கி எழும்புவதுடன்
சம்பந்தப்பட்டது. நமது உடலில் இடை நாடி
வலது கால் கட்டைவிரலிலிருந்து புறப்பட்டு இடது நாசிக்குச் செல்கிறது. பிங்கலை நாடி இடது கால் விரலிலிருந்து
புறப்பட்டு வலது நாசிக்குச் செல்கிறது.
குண்டலினி சக்தி விழித்தெழுந்து மேலே ஏறத்தொடங்கும்போது அது சுருக் என்று
தேள் கொட்டுவதைப் போலவோ பாம்பு கடிப்பதைப் போலவோ இருக்கும் என்று நூல்கள்
கூறுகின்றன. இந்த விஷயத்தைப் பற்றிய
விவரங்களை சுப்பிரமணியர் பரிபாஷையில் இப்பாடலில் கூறியுள்ளார். குண்டலினி சக்தியின் எழுச்சி ஏழு திரைகள் என்று
நாம் முன்னமே பாடல் 4, 39 ல் பார்த்த மாயத்திரைகளை
அறுத்தெறிகிறது.
No comments:
Post a Comment