Verse 40
பாரப்பா
பூசைவிதி அறியாமல்தான்
பரமசிவ
தீட்சையென்றே அலைவான்பாவி
ஆரப்பா
முழுகியனுஷ்டாணஞ் செய்து
அஞ்செழுத்தா
மூன்றெழுத்தெட் டெழுத்தாமென்று
நேரப்பா
தீட்சைவைத்த குருக்களுந்தான்
நீணிலத்தில்
மணியுருட்டிப் பூசை செய்து
வேறப்பா
வெறி பிடித்துத் திரிவான் பாவி
வேரற்ற
மரமென்று வீசு வேனே
Translation:
See son, without knowing the rules of worship
The sinner will roam seeking paramasiva deeksha
Bathing and performing austerities
Saying it is three letters, eight letters
The gurus who performed deeksha
Rolling the beads performing worship
He will roam around with frenzy, the sinner
I will toss him like a root-less tree.
Commentary:
Subramanyar is
talking about one who spends his time in mere rituals without clear understanding
about the pooja vidhi. Siddha worship
rituals are specific procedures that involve a deeksha, a yantra, a mantra, specific
visualization, recitation of the mantra for a specific number of times and preconditioning
such as nyasa and kavacha. A particular
pooja is performed for a specific benefit. Without any understanding about this
people spend a lot of time on mere rituals such as bathing an image in various
products, reciting a common mantra such as om or om namacivaya or aim kleem
saum namacivaya or aim kleem saum (common three and eight letter mantras) for
any number of times they wish.
Subramanyar says that these are useless rituals and he, the supreme
consciousness, will not toss them as useless piece of wood.
பூசை விதிகளை முறையாக அறிந்துகொள்ளாமல் அவற்றை ஒரு
சடங்காகச் செய்பவரை சுப்பிரமணியர் இப்பாடலில் கண்டிக்கிறார். சித்தர்கள் பரிந்துரைக்கும் பூசை என்பது
நியாசம், கவசம் முதலிய முன் படிகளுடன், ஒரு குறிப்பிற யந்திரத்தைக் கீறி, ஒரு
குறிப்பிட்ட மந்திரத்தை ஒரு எண்ணிக்கையில் ஒரு காட்சிப்பாட்டுடன் செய்வது. எந்த பலனை எதிர்பார்க்கிறோமோ அதற்கேற்ப இந்த
மந்திரங்கள், யந்திரங்கள், காட்சிப்பாடுகள், ஜபம் ஆகியவை மாறுபடுகின்றன. அகத்தியர்
இந்த பூசை விதிகளைத் தனது பல நூல்களில் பேசியுள்ளார். இவ்வாறு குறிப்பிட்ட முறையில் செய்யப்படாமல் தனது
விருப்பத்துக்கேற்ப ஸ்நான ஜப தபங்களைச் செய்து, ஒரு சிலையைப் பல பொருட்களால்
நீராட்டி, அலங்கரித்து, தனக்குப் பிடித்த ஓம் அல்லது ஐம் கிலீம் ஸௌம் என்னும்
மூன்றெழுத்து மந்திரத்தையோ ஓம் நமசிவாய அல்லது ஐம் கிலீம் சௌம் நமசிவாய என்ற
எட்டெழுத்து மந்திரத்தையோ பிற மந்திரங்களையோ மணியை உருட்டி ஜபம்
செய்கின்றனர். இது பயனற்றது என்றும்
அவ்வாறு செய்பவர்களைத் தான் வேற்ற மரத்தைப்போல வீசுவேன் என்கிறார் சுப்பிரமணியர்.
No comments:
Post a Comment