Verse 53
தானவனா
யாவதற்கு அறியுமிட்டுத்
தப்பாமற்
சித்திரியும் ஸ்ரீ யுஞ் சேர்த்து
வானவர்கோன்
போற்றி செய்ய விஞ்சைவாலை
மைந்தனே
மசிஎன்றும் நசிஎன்றோதி
மாநதமாம்
பூசைசெய்து மைந்தா மைந்தா
மறக்காதே
இருவளையம் வாசலிட்டுக்
கோனருளால்
வாலையுட பீஜமிட்டுக்
கும்மென்றே
யோதியுந்தான் குறியைப் பாரே
Translation:
Drawing hreem for Self to become him
Adding the image and shreem without failing
With the king of the celestials praising, the vaalai of kalaa
Son, chanting masi and nasi
Performing the mental worship,
son, son,
Adding the two circle
entrances without forgetting
Adding the bheejam of vaalai
by the grace of the king
See the sign reciting gum.
Commentary:
The bheejakshara hreem transforms
the limited self into universal self. Chittiri
means design, to carve. It may mean the
designs that are added along with the bheeja akshara in the yantra. Shreem is
also included in the yantra. Agatthiyar
has mentioned in Saumya Sagaram that the letter for vaalai is si. Subramanyar says that along with these the
letters masi and nasi should be recited.
Thus, this comes to be si ma na, the reverse of na ma si. This is mental worship. Gum is part of many
mantra. Gum and phat are found in several prayoga mantra.
ஹ்ரீம்
என்னும் பீஜாக்ஷரம் ஜீவாத்மாவை பரமாத்மா நிலைக்கு உயர்த்துவது. சித்திரி என்பது படம்,ஓவியம் என்று பொருள்படும். யந்திரத்தில் பீஜ அக்ஷரங்களுடன் காணப்படும்
குறிகளாக இது இருக்கலாம். ஸ்ரீம் என்னும்
எழுத்தும் இதனுடன் சேர்க்கப்படுகிறது.
அகத்தியர் சௌமிய சாகரத்தில் வாலையின் எழுத்து சி என்று
குறிப்பிட்டுள்ளார். இருவளையங்களுடன் மசி
மற்றும் நசி என்ற எழுத்துக்களையும் உச்சரிக்கவேண்டும் என்று சுப்பிரமணியர்
கூறுகிறார். இவ்வாறு இந்த மானச பூஜையில்
சிமந என்று நமசி என்னும் எழுத்துக்கள் அவரோகணக் கிரமத்தில் உச்சரிக்கப்படுகின்றன.
No comments:
Post a Comment