Thursday, 9 October 2014

45. The supreme state



Pugazhi Murugan at Velayudhampalayam, Karur.

Verse 45
பாரடா சாகரமும் முடிவதாச்சு
பன்னிருகைப் புயம் இலங்க உரைக்கலாச்சு
ஆரடா அஷ்டாங்க முடிவுமாச்சு
ஆதி வஸ்து அனாதிவஸ்து ஒன்றாய்ப் போச்சு
கூறடா சடாட்சரமும் இதுவேயாச்சு
குவிந்தெழுந்த ஐந்தெழுத்தும் இதுவேயாச்சு
நேரடா பராசத்தி வேலுமாச்சு
நிலையான தாரணையை நிறுத்துவேனே.

Translation:
See son, the ocean came to an end
The shoulders with twelve hands started glowing and functioning
Son, it became the end of the ashtanga
The root entity and the eternal entity became one
Say this son/ the part, the six letters became this
The five letters that came together and rose became this,
This became the straight lance of Parasakthi
I will hold firmly the dhaarana. 

Translation:
The ocean may be the ocean of samsara.  We already saw that the twelve arms represent twelve states of consciousness.  Subramanyar says that in the exalted state the twelve states of consciousness will be functioning.  The supreme state is the terminus of the ashtanga yoga.  Samadhi is considered the pinnacle of ashtanga yoga. When the steps of yama, niyama, asana, pranayama, prathyahara, dharana and dhyana are practiced properly Samadhi occurs as a next logical step.  No effort is needed on the part of the yogin, it is a natural occurrence.  The “aadhi vastu” or the root entity is the soul.  The “anaadhi vastu” or the eternal entity is the Divine.  In this state the distinction between the limited soul and the universal soul disappears.  The Tamil Siddhas say that the jivatma does not “become” the Paramatma, there is no transformation or change.  It “is” the Paramatma whose true nature was concealed by the various principles or tattva.  The six letters may be saravanabhava. The five letters may be namacivaya.  Subramanyar says that they came together as the five elements they represent abide within each other during
the process of yoga.  The “vel” of Parasakthi is the sense of discrimination or “pakuttharivu” the supreme knowledge that leads to realization.  It is as sharp as the lance.  Dharana is the process of holding one’s focus on an internal or external object or a thought.  Agatthiyar describes six types of dharana in his Saumya sagaram verse 300 and concludes that dharana is remaining with the single thought that everything is the manifestation of the Brahman.  Dharana precedes dhyana.


இப்பாடலில் குறிப்பிடப்படும் சாகரம் சம்சார சாகரமாக இருக்கலாம் அல்லது நமது உடலில் உள்ள திரவங்களாக இருக்கலாம்.  இந்த திரவங்கள் பிறவியை ஏற்படுத்துகின்றன.  பன்னிரு கைகள் என்பது பன்னிரு உணர்வு நிலைகள் என்று முன்னமே பார்த்தோம்.  இந்த உயர் விழிப்புணர்வு நிலையில் இந்த பன்னிரு நிலைகளும் செயல்படும்.  இந்த உயர் விழிப்புணர்வு நிலை அஷ்டாங்க யோகத்தின் உச்ச நிலையான சமாதியாகும்.  அஷ்டாங்க யோகத்தின் படிகளான யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம் என்ற ஏழும் முறையாகச் செய்யப்பட்டால் சமாதி தானாக ஏற்படுகிறது. இதற்கு ஒரு யோகி எவ்வித தனியான முயற்சியையும் மேற்கொள்ள வேண்டாம்.  இந்த உயர் நிலையில் ஆதி வஸ்துவான ஜீவனும் அநாதி வஸ்துவான இறைவனும் ஒன்றாக இருக்கின்றனர்.  சித்தர்களின் தத்துவப்படி ஒரு ஜீவன் பரமனாக “மாறுவதில்லை”  என்றுமே பரமனாக இருக்கும் அவன் மாயை தோற்றுவிக்கும் தத்துவங்கள் நீங்கியவுடன் தனது உண்மை நிலையை உணர்ந்துகொள்கிறான்.  இவ்வாறு ஆதி வஸ்துவும் அநாதி வஸ்துவும் ஒன்று என்ற நிலை ஏற்படுகிறது.  ஆறெழுத்து என்பது சரவணபவ என்றும் ஐந்தெழுத்து என்பது நமசிவய என்ற மந்திரத்தையும் குறிக்கலாம்.  நமசிவய என்ற பஞ்சாட்சரம் பஞ்ச பூதங்களைக் குறிக்கின்றன என்பதை முன்னமே பார்த்தோம்.  இந்த எழுத்துக்கள் குறிக்கும் பஞ்ச பூதங்கள் உயர் விழிப்புணர்வு நிலையில் ஒருமைப்பட்ட நிலையில் இருக்கின்றன.  பராசக்தியின் வேல் என்பது ஞானத்தை அளிக்கும் அறிவு, பகுத்தறிவு.  இது வேலைப்போல கூர்மையாக இருப்பது.  தாரணை என்பது கவனத்தை வெளியில் இருக்கும் ஒரு பொருளின் மீதோ, உள்ளே காணும் ஒரு காட்சியின் மீதோ அல்லது ஒரு எண்ணத்தின் மீதோ குவிப்பது.  இது தியானத்துக்கு முற்பட்ட நிலை.  அகத்தியர் தனது சௌமிய சாகரத்தில் ஆறுவித தாரணைகளைக் குறிப்பிட்டு முடிவில் தாரணை என்பது அனைத்தும் பிரம்ம சொரூபம் என்று எண்ணுவது என்று முடிக்கிறார் (பாடல் 300).  

No comments:

Post a Comment