Verse 47
கொள்ளடா சத்திகை வசமதாகக்
கூறுகிறேன் கும்பமுனி உனக்காய் மைந்தா
தள்ளாதே ஆறு படை வீடு கட்டிச்
சடாட்சரமாம் ஆறு எழுத்தை அதிலே நாட்டி
விள்ளாதே
ஆறுபடை வீட்டுக் கெல்லாம்
விபரமுடன்
சொல்லுகிறேன் விந்து வட்டந்
துள்ளாதே
விந்துவில் ஓங்காரஞ்சாத்திச்
சுருதியுட
நாற்கோணம் மேலே சாற்றே
Translation:
Hold son, for the power to come under control,
I am saying this, Kumbhamuni, for your sake,
Building the six “padai veedu” (barracks)
Establishing the six letters there firmly
For the six barracks, without holding anything back
I will describe the details. Within the circle of bindu
Place the omkara in the bindu
Place it over the four pointed square.
Commentary:
Subramanyar is beginning to describe the yoga method
involving the six cakras. He says that
the goal of this practice is bringing the sakthi, kundalini, under
control. He talks about the six barracks
or “aru padai veedu”. These are the six cakras found in the body.
Murugan’s six padai veedu are Thirupparamkundram,
Thirucchendur, Thiru aavinankudi, Swamimalai, Thirutthanigai malai and
Pazhamudircholai. These six places
signify the six chakras as follows: thirupparam kunram- muladhara, Thirucchendhur-
svadishtana, Palani- Manipura, Swamimalai- Anahatha, Thirutthanigai- vishuddhi
and Pazhamudircholai- ajna (details by Sivaya Subramuniya Swami). Subramanyar says that the shat akshara or the
six letters should be placed firmly at these cakras. From this verse and the next we find that
these letters are om namacivaya. He says
that the omkara should be placed at the circle of bindu, (this is present in the
muladhara) and this in turn should be place in the square along with sruti, or
the nada. The three and a half rounds of
kundalini represent omkara’s a u m and the soundless state or visarga.
For those who missed checking the paper by Mr. Ramanathan
Narayanasawamy let us see a summary of the symbolism connected with Murugan,
here. http://archive.deccanherald.com/Content/Feb262009/city20090225120714.asp
Murugan’s mantra saravanabhava consists of the kumara
bhija (sa ra), sakthi bhija (va na) and siva bhija (bha va). They also signify the six attributes- purity,
bounty, light, auspiciousness, splendor and infinite power. Five of his six faces signify the five acts
(like Siva)- creation, preservation, destruction, veiling and grace. His sixth face symbolizes wisdom or communion
in silence. Murugan is seen with Valli, Deivayanai and his vel. They represent iccha, kriya and jnana sakthi. The peacock, we have seen before, signifies
the delusions caused by maya. The
rooster in his flag signifies the nada brahmam.
The sound of the rooster signifies divisions of time also- as night and
day.
இப்பாடலில்
சுப்பிரமணியர் குண்டலினி யோகத்தை விளக்கத் தொடங்குகிறார். அவர் இந்தப் பயிற்சியின் குறிக்கோள் சக்தி
வசமாகுவது என்கிறார். அதனை அடுத்து அவர்
ஆறு படைவீடுகளைக் குறிப்பிட்டு அவை உடலில் உள்ள சக்கரங்கள் என்று காட்டுகிறார்.
பொதுவாக உலகில் முருகனின் ஆறு படை வீடுகள் என்று
திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி அல்லது ஆவினன்குடி, சுவாமி மலை,
திருத்தணிகை மலை மற்றும் பழமுதிர்சோலையைக் குறிப்பிடுவது வழக்கம். இந்த ஆறு இடங்களும் நமது உடலில் உள்ள ஆறு
ஆதாரங்கள் என்று சிவாய சுப்பிரமுனிய சுவாமி குறிப்பிடுகிறார் (ஹவாய்). திருப்பரங்குன்றம்- மூலாதாரம், திருச்செந்தூர்-
சுவாதிஷ்டானம், பழனி- மணிபூரகம், சுவாமி மலை- அனாஹதம், திருத்தணிகை- விசுத்தி
மற்றும் பழமுதிர் சோலை- ஆக்ஞா சக்கரத்தையும் குறிக்கின்றன.
சுப்பிரமணியர்
ஷட் அக்ஷரங்களை, ஆறு எழுத்துக்களை, இந்த படைவீடுகளில்
உறுதியாகப் பதிக்கவேண்டும் என்கிறார்.
இந்த எழுத்துக்கள் ஓம் நமசிவய என்று இப்பாடலிலும் பின் வரும் பாடலிலும்
காண்போம். ஓம்காரத்தை விந்து வட்டத்தில்
சாற்றவேண்டும் என்றும் அதை நாற்கோணத்தில் சாற்றி சுருதியுடன் ஏற வேண்டும் என்கிறார்
சுப்பிரமணியர். சுருதி என்பது நாத தத்துவத்தைக் குறிக்கும். விந்து வட்டம் என்பது
குண்டலினி சக்தியைக் குறிக்கலாம்.
குண்டலினியின் மூன்றரை சுற்றுக்கள் ஓம்காரத்தின் அ உ ம மற்றும் சப்தமற்ற
நிலைகளைக் (விசர்கம்) குறிக்கும்.
சரவணபவ
என்ற முருகனின் மந்திரத்தைப் பற்றி திரு. ராமநாதன் நாராயண சுவாமி எழுதியதை இதுவரை
படிக்காதவர்களுக்காக இங்கு அதன் சாரம் கொடுக்கப்படுகிறது. http://archive.deccanherald.com/Content/Feb262009/city20090225120714.asp
சரவணபவ
என்ற மந்திரத்தில் முதல் இரண்டு எழுத்துக்கள் குமார பீஜம் என்றும் அடுத்த இரு
எழுத்துக்கள் சக்தி பீஜம் என்றும் கடைசி இரு எழுத்துக்கள் சிவ பீஜம் என்றும்
குறிப்பிடப்படுகின்றன. இந்த ஆறு
எழுத்துக்களும் தூய்மை, செல்வம், ஒளி, மங்களம், பெருமை மற்றும் அளவற்ற ச்கதியைக்
குறிக்கும். முருகனின் ஆறு முகங்களில் ஐந்து முகங்கள் படைத்தல், காத்தல்,
அழித்தல், மறைத்தல், அருளால் என்ற செயல்களையும் ஆறாவது முகம் ஞானத்தையும் குறிக்கின்றன. வள்ளி தெய்வயானை மற்றும் வேலுடன் அவர்
காணப்படுவது இச்சா, கிரியா ஞான சக்திகளைக் குறிக்கிறது. அவர் மயிலின் மேல் காணப்படுவது அவர் மாயையைக்
கடந்தவர் என்பதையும் கோடியில் உள்ள சேவல் அவர் நாதப் பிரம்மம், மற்றும் காலத்தைக்
கடந்தவர் என்பதையும் குறிக்கின்றன.
(சேவலின் கூவல் பகல் இரவு என்ற காலத்தின் பிறிவைக் குறிப்பிடுகிறது).
அம்மா,
ReplyDeleteஜீவ நாடி என்ற ஓலை சுவடியில் எழுத்துக்கள் தோன்றி மறையும் என்று கேள்விப் பட்டேன், இணையத்தில் தேடியதில் இது பற்றி யாரும் தெளிவாக எழுதவில்லை,சிலர் இது கட்டுக் கதை என்றும், மனம்படிக்கும் வித்தையே தவிர எழுத்துக்கள் தோன்றி மறையாது என்றும் கூறுகிறார்கள்.
தங்களின் முகநூல் பக்கத்தில் ''அகத்திய மகரிஷி தனது ஜீவ நாடியில் கொடுத்துள்ள கட்டளைகளின்படி இந்தப் பதிவுகள் வெளியிடப்படுகின்றன'' என்று குறிப்பிட்டு இருந்தீர்கள்.
உண்மையிலேயே ஜீவ நாடி என்பது என்ன?
இப்படி கேட்கும் போது ஏனோ மனம் சஞ்சலப் படுகிறது, தவறாக கேட்டு இருந்தால் என்னை மன்னிக்குமாறு வேண்டுகிறேன்.
இந்தக் கேள்விக்கு நான் ஞான ஜோதி அம்மாவை பதிலளிக்குமாறு வேண்டுகிறேன். அவருக்கு தமிழ் படிக்க வராததால் இந்தக் கேள்வியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அவருக்கு அனுப்புகிறேன்.
ReplyDeleteஅய்யா கேள்வி கேட்பதில் தவறில்லை, சரியாகப் புரிந்துகொள்ளாமல் ஒன்றைப் பொய் என்றோ உண்மை என்றோ நம்புவதுதான் தவறு. இன்றும் கல்லாரில் தவயோகி தங்கராஜன் அடிகள் அவர்கள் அவரை அணுகுவோருக்கு அகத்தியரின் ஜீவ நாடியைப் படிக்கிறார். அகத்தியரைப் பிரார்த்திக்கவும். உங்களுக்கு நேரமும் சூழ்நிலையும் சரியாக இருந்தால் அவர் நீங்கள் அங்கே செல்வதற்கு வழிவகுப்பார். ஜோதி அம்மாவின் பதிலை எதிர்பார்ப்போம்.
ReplyDeleteமிக்க நன்றி அம்மா.
ReplyDeleteHeard from Jnana Jyothi Amma- she instructed that you get in touch with Shanmugam Avadaiappa of Siddhaheartbeat. His email address is shanmugam.avadaiappa@yahoo.com. He can guide better in this regard. The jiva nadi instruction was given to jnana jyothi amma. That is when we started the Agatthiyar meijnanam and Subramanyar jnanam. I do not have any personal experience with the nadi. Tavayogi or Mr. Shanmugam can help you.
ReplyDeleteதங்களிற்கும் ஜோதி அம்மாவிற்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள்.
ReplyDelete