Saturday, 11 October 2014

46. Fragrances, dvarapalaka, manonmani

Verse 46
நிறுத்துவேன் தாரணைதான் மகாரமாச்சு
நின்றிலங்கும் வாசியல்லோ சாரியாச்சு
கருத்தான தேவி மனோன் மணியுமாச்சு
காமதேன் கற்பகமும் அதுவேயாச்சு
மருத்துமலைச் சார்பு நடு வட்டத்துள்ளே
மாறாத வாசனைதான் அனேகமுண்டு
திருத்தமுடன் துவாபர பாலகரரும்உண்டு
தெரிசித்தே அடிபணிந்து தெரிந்து கொள்ளே
Translation:
I will hold it, the dharana became makaaram
The vaasi that remains became saari
It became Devi Manonmani
It became the Kamadenu (the wishgranting cow) and Karpakam (wish granting tree)
Within the circle in the medicinal hill
There are several fragrances
There are also dvarapalaka (protectors of the threshold)
See them, salute the feet and learn about them.

Commentary:
Agatthiyar says in his saumya sagaram that dharana is holding on to the thought that this world is the manifestation of the Brahman, mother kundalini.  The letter makaara represents the manifested world that occurs due to her.  Hence, Subramanyar is saying that dharana is makaara. 
The yogin associates with vasi or regulation of life breath and remains with this understanding.  Manonmani is another name for kundalini sakthi.  Manonmani is also considered the consort of Sadasiva the state from which all the manifestations start and it is Manonmani who provides the power for their emergence.  Kamadenu and Kalpaka vriksham are the celestial cow and tree that grant all the wishes.  During kundalini yoga the yogin’s body is said to attain a special fragrance as all the impurities are removed during the process.  Also, during the yoga a special mudra, kechari mudra is practiced which brings down the nectar and along with it special fragrances.  This is symbolically called ganda madanam.  Madanam is churning, a special movement of the tongue and gandam means fragrance.  Dvara palaka are protectors or deities that safe guard the various enegy centers or the cakras.  Subramanyar tells Agatthiyar to see all these and understand them.


அகத்தியர் தனது சௌமிய சாகரத்தில் தாரணை என்பது இவ்வுலகம் பிரம்மனின் வெளிப்பாடு, குண்டலினி தாயின் வெளிப்பாடு என்பதை மனதில் எப்போதும் கொண்டிருப்பது என்கிறார்.  இங்கு சுப்பிரமணியரும் தாரணை என்பது மகாரம் என்கிறார்.  மகாரம் என்பது உலகைப் படைக்கும் மாயையைக் குறிக்கும் எழுத்து.  ஒரு யோகி இந்த கருத்தை மனத்தில் கொண்டு வாசியைச் சார்ந்து இருப்பார்.  மனோன்மணி என்பது குண்டலினியின் மற்றொரு பெயர்.  சக்கரங்களின் அதிதேவதைகளில் சதாசிவனின் சக்தி மனோன்மணி.  உன்மணி என்பது ஒரு விழிப்புணர்வு நிலையைக் குறிக்கும்.  காமதேனு மற்றும் கல்பக விருட்சம் என்பவை விருப்பத்தை அருளுபவை.  குண்டலினி யோகத்தின்போது யோகியின் சரீரம் நறுமணத்தைப் பெறுகிறது ஏனெனில் உடலில் உள்ள மலங்கள் பயிற்சிகளினால் அகற்றப்படுகின்றன.  மேலும், யோகத்தின்போது கேசரி முத்திரையை அந்த யோகி மேற்கொள்கிறார்.  இந்த முத்திரை லலாட சக்கரத்திலிருந்து அமிர்தத்தை ஊறச் செய்து உடலில் பலவித நறுமணங்களைத் தோற்றுவிக்கிறது.  இது கந்த மாதனம் என்று குறியீட்டு மொழியில் அழைக்கப்படுகிறது.  மாதனம் என்பது கடிவது என்றும் கந்தம் என்பது மனம் என்றும் பொருள்படும்.  துவாரபாலகர்கள் என்பவர்கள் வாயில்காப்போர், சக்கரங்களின் அதிதேவதைகள் துவாரபாலகர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.  சுப்பிரமணியர் அகத்தியரை இவையனைத்தையும் பார்த்து வணங்கி தேறுமாறு கூறுகிறார். 

No comments:

Post a Comment