Friday, 24 October 2014

58. Steps to light the flame that never diminishes

Verse 58
போற்றுகின்ற போதிலேதான் மைந்தாநீயும்
பூரணத்திற் பிரமமென்ற ரூபங் கொண்டு
ஏற்றுகின்ற போதெல்லாமவுன விஞ்சை
எண்ணியே மனதொன்றாய் இருத்திக் கொண்டு
மாற்றுகின்ற போதே முன்னிலையைப் பார்த்து
வாடாத தீபமதைத் தூண்டி ஏற்றி
காற்றினிலும் அதிகமடா மூன்றெழுத்தைக்
கண்டு கொள்ளக் காட்சியடா கண்டு கொள்ளே

Translation:
While praising, Son,
Adorning the form of brahmam in the fully complete
At all times while praising it, the knowledge of ma vu
Thinking about it and holding the mind in focus
While changing, seeing in front
Tease and light the lamp that never dwindles
In the wind that is in excess, the three letters
See the scene that should be seen.

Commentary:
Subramanyar mentions an important feature of kundalini yoga here.  While raising the fire of kundalini and consciousness one should visualize one’s soul as the Brahmam.  With this attitude one should raise the kundalini.  Mind must focus on this thought and the light of consciousness should be lit in the midst of the wind, the prana.  The three letters are a u ma, the reverse of it as Subramanyar says ma vu vinchai or supreme knowledge.  Experiencing the three letters is experiencing the creation and dissolution of the manifested universe represented by the three letters a u and ma.


இப்பாடலில் சுப்பிரமணியர் குண்டலினி யோகத்தின் ஒறு முக்கிய காட்சிப்பாட்டைக் குறிப்பிடுகிறார்.  பிராணனின் உதவியுடன் குண்டலினி சக்தியை மேலே ஏற்றும்போது ஒரு யோகி தனது ஆத்மா பிரம்மம் என்ற உணர்வுடன் ஏற்ற வேண்டும்.  பூரணம் என்பது ஆத்மாவைக் குறிக்கும்.  மனம் இந்த எண்ணத்தில் குவிந்திருக்கவேண்டும்.  இவ்வாறு அலையும் காற்றில், பிராணனில், வாடாத தீபமதை, பரவுணர்வு என்ற ஜோதியை ஏற்ற வேண்டும்.  அதை மீண்டும் ஏற்ற வேண்டாம் தூண்டிவிட்டால் போதும் ஏனெனில் அது மிகக் குறைந்த அளவில் எரிந்துகொண்டுதான் இருக்கிறது.  இந்த முறையில் ம வு விஞ்சை அல்லது மிக உயர்ந்த அறிவைப் பெற வேண்டும், மூன்றெழுத்தைக் காணவேண்டும் என்கிறார் சுப்பிரமணியர்.  அதாவது உலகம் விரிந்து லயிப்பதைக் காணவேண்டும் உலகின் சூட்சுமத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்.

No comments:

Post a Comment