Verse 48
சாற்றுகிறேன்
நாற்கோணந் தன்னில் மைந்தா
தற்பரமாய்
நகாரமிட்டு சார்பாய் நின்று
ஏற்றுகிறேன்
அதன்பேரில் பிறைதானிட்டு
என்மகனே
மகாரமென்ற மவுனஞ்சாத்தி
போற்றுகிறேன்
அதன்மேன்முக்கோணமிட்டு
பூரணமாஞ்
சிகாரத்தை நடுவே சாத்தி
காற்றிலையுமதிகமடா
அறு கோணத்திற்
கலந்தெழுந்த
வகாரமதைக் கனிவாய்ப் பூட்டே
Translation:
I am adorning, Son, on the square,
The self controlled nakaaram, remaining associated with
it
I am adding above it a crescent
My son, adorning the silence, the makaara over it
I am praising by adding a
triangle over it
Adorning the fully complete
sikaara in its middle
In the six pointed figure that
buffets in the great wind
Lock, with mercy, the vakaara
that emerges.
Commentary:
Subramanyar is describing the
cakras here. Following his mention of
the five letter mantra here he describes how the letters of the namacivaya are
placed in the cakra. Nakaara is placed
at the muladhara, makaara at the svadhishtana, the cakra with the crescent,
sikaara is placed at the manipuraka cakra with a triangle and the vakaara at
the anahatha the cakra with six points.
This implies that the yakaara will be placed at the vishuddhi the next
cakra in line. This pattern is similar to that which Agatthiyar described in
his meijnanam.
இப்பாடலில்
சுப்பிரமணியர் சக்கரங்களும் அவற்றில் குறிக்கப்படும் எழுத்துக்களும் எவை என்று
கூறுகிறார். முந்தைய பாடலில் அவர்
குறிப்பிட்ட ஐந்தெழுத்துக்களை இங்கே முறையே மூலாதாரத்தில் உள்ள நாற்கோணத்திலும்
மகாரத்தை சுவாதிஷ்டானத்தில் உள்ள பிறையிலும், சிகாரத்தை முக்கோணத்தைக் கொண்ட
மணிபூரத்திலும் வகாரத்தை காற்று தத்துவத்தைக் குறிக்கும் அறுகோணத்தைக் கொண்ட
அனாஹதத்திலும் குறிக்கவேண்டும் என்று அவர் கூறுகிறார். இதனால் கடைசி எழுத்தான யகாரம் விசுத்தி
சக்கரத்தில் குறிக்கப்பட வேண்டும் என்பது தோன்றுகிறது.
No comments:
Post a Comment