Verse 54
பாரப்பா
வடுகனுக்குக் கும்பம் வைத்துப்
பாலகனே
நசிஎன்றே அடியிற்சாத்தி
ஆரப்பா
தேவியுட கும்பத்துக்கு
அப்பனே
மசிஎன்றே அடியிற் சாத்தி
நேரப்பா
பஞ்ச கர்த்தாள் ஐந்துபேரை
நீ
மகனே மானதமாய் நினைத்துப் போற்றி
ஏரப்பா
பூரணமே தெய்வமென்று
இரவி
மதி தனையடுத்துப் பூசை பண்ணே.
Translation:
See son, place a sacred pot for Vaduga
Little boy, you place “nasi” at the bottom
For Devi’s sacred pot
Son, place “masi” at the bottom
Son, the five “doers” (pancha kartha)
You think about them in the mind and praise them
Climb son, with the idea that pooranam is God
Worship the sun and the moon next.
Commentary:
This verse talks about Bhairava and Devi worship. The bheeja akshara are nasi and masi for them. The pancha kartha or five doers are Sadasiva,
Maheswara, Rudra, Vishnu and Brahma.
They are responsible for the five actions of the Divine- bestowing
grace, obscuration, dissolution, sustenance and creation respectively.
Subramanyar tells Agatthiyar to contemplate on them and
raise the kundalini with the clear idea that the poornam (soul) is the Deity or
Supreme Reality. He says that the sun
and the moon should be worshipped next.
இப்பாடலில்
சுப்பிரமணியர் பைரவர் மற்றும் தேவி பூஜையை விளக்குகிறார். இருவருக்கும் கும்பம் வைத்து அடியில் முறையே
நசி என்றும் மசி என்றும் சாத்த வேண்டும் என்கிறார் சுப்பிரமணியர். அதன் பிறகு பஞ்ச கர்த்தாள் எனப்படும் சதாசிவன்,
மகேஸ்வரன், ருத்திரன், விஷ்ணு, பிரம்மா என்ற ஐவரையும் மனதில் நிலைத்துப்
பூசிக்கவேண்டும் என்கிறார் அவர். இவர்கள்
அனைவரும் முறையே அருளால், மறைத்தல், அழித்தல், காத்தல் படைத்தல் என்ற ஐந்து
தொழில்களைச் செய்கின்றனர். இவர்களை
மானதமாகப் பூசித்து பூரணம் எனப்படும் ஜீவாத்மா தெய்வம் எனப்படும் பரமாத்மா என்ற
உணர்வுடன் விழிப்புணர்வை மேலே ஏற்ற வேண்டும் என்று கூறும் சுப்பிரமணியர் இதனை
அடுத்து ரவி மதி எனப்படும் சூரிய சந்திர வழிப்பாட்டை விளக்கப் போகிறேன் என்று
கூறுகிறார்.
No comments:
Post a Comment