Monday, 6 October 2014

43. Red scorpion, black scorpion, crouching tiger, snake's poison

Verse 43
தேரடா தேளிருக்குஞ் சிவசாயைக்குள்
செந்தேளுங் கருந்தேளுந் திடமாய்ப் பாயும்
ஆரடா கருந்தேளை அறிவாருண்டோ
அறிந்தாலும் அதிநிலையை அறியப் போமோ
ஏரடா நிலையறிந்து மவுனம் பெற்று
என் மகனே புலியூருச் சாயை தன்னில்
நேரடா நேர் நிலையம் நீயே பார்த்து
நின்றுகொண்டு அரவு விஷ நிலையக் காணே

Translation:
Learn Son, the scorpion will remain within the shadow of Sivam
The red scorpion and the black scorpion will flow firmly
Who will know about the black scorpion
Even if they know it will they know its status
Climb son, knowing about its status, attaining silence
My son, in the pattern of the tiger crouching
Straight son, seeing the state of being straight, yourself
Standing there, see the status of the snake’s venom.

Commentary:
This verse is full of symbolism.  The sting of the scorpion we saw in the previous verse was about kundalini.  Here we see a different interpretation for it.  Subramanayar talks about a red scorpion and a black scorpion.  The triple qualities of satva, rajas and tamas are assigned the colors white, red and black.  Among these the universe is said to be made of tamas. In fact, another name for the universe is tamas.  It is the inactive state or the primary state before the energy pervaded it to make it active. Hence, Subramanyar is saying that hardly anyone knows about it and even if they know about it they cannot comprehend it.  This is the state of Sivam, before sakti, the red scorpion, emerged and activated it.   Thus, the red and the black scorpion are the Sakti and Sivam respectively. 
This symbolism is interesting even scientifically.  Quantum physics talks about the dark matter and dark energy pervading the universe.  The dark matters contributes to 70% of the matter in the universe and the dark energy contributes to 30% of the total energy in the universe. 
Only the state of silence gets close to this inactive state.  Silence does not mean “not speaking”.  It means going back to the para state of the four sound states, para, pashyanthi, madhyama and vaikari.   The crouching of tiger is mentioned to indicate the poise of kundalini sakthi before its pouncing or forceful ascendance. Snake poison also refers to the sharp sensation that kundalini sakthi produces and its speed of ascendance.


இப்பாடலில் பல குறியீடுகள் உள்ளன.  முதலில், நாம் செந்தேள் கருந்தேள் என்பவற்றைப் பற்றிப் பார்க்கலாம்.  முந்தைய பாடலில் சுப்பிரமணியர் கூறிய தேள் கொட்டு என்பது குண்டலினியுடன் தொடர்புடையது என்று பார்த்தோம்.  இங்கே தேள் என்பது வேறொரு விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.  சத்துவம் ரஜஸ் தமஸ் என்ற முக்குணங்களில் சத்துவம் வெள்ளை நிறம் என்றும் ரஜஸ் சிவப்பு நிறம் என்றும் தமஸ் கருப்பு நிறம் என்றும் குறிக்கப்படுகின்றன.  இவ்வுலகின் மற்றொரு பெயர் தமஸ் என்று நூல்கள் குறிப்பிடுகின்றன.  தமஸ் என்பது செயலற்ற நிலை, ஆதி நிலை, சக்தி அதற்கு செயல்பாட்டை ஊட்டாத நிலை.  இதுவே சிவத்தின் நிலை.  இதைத்தான் சுப்பிரமணியர் இப்பாடலில் கருந்தேள் என்று குறிப்பிடுகிறார்.  இந்த நிலையைப் பற்றி ஒருவரும் அறிவதில்லை அறிந்தாலும் அது எத்தகையது என்பது புரிதலுக்கு அப்பாற்பட்டது என்றும் சுப்பிரமணியர் குறிப்பிடுகிறார்.  இந்நிலைக்கு மிக அருகாமையில் இருக்கும் ஒப்புமை நிலை மௌனம்.  மௌனம் என்பது பேசாமல் இருப்பது மட்டுமல்ல, அது சப்தத்தின் ஆதி நிலையான பரா நிலையை அடைவது.  சப்தம் பரா, பஷ்யந்தி, மத்யமா, வைகரி என்ற நான்கு நிலைகளை உடையது.  இவற்றில் பரா என்பது ஆதி நிலை, துரிய நிலையைப் போல நாபியில் இருப்பது. இதனை அடுத்தது பஷ்யந்தி, இதயத்தில் இருப்பது.  மத்யமா என்பது தொண்டையிலும் வைகரி என்பது நாவிலும் இருக்கின்றன.  புலி ஊருவது என்பது அதன் பதுங்கிப் பாயும் தன்மையைக் குறிக்கும்.  குண்டலினி சக்தியின் பாய்ச்சல் இதைப் போன்றது.  அரவு விஷம் என்பது பாம்பின் விஷம் எவ்வாறு வேகமாக உடலில் பாயுமோ அதைப் போல குண்டலினி உடலில் பாய்வதைக் குறிக்கிறது.  

No comments:

Post a Comment