Verse 55
பண்ணுவது
பூசியுந்தான் செய்யும்போது
பாலகனே
கும்பமெல்லாம் வஸ்திரங்கட்டி
கண்ணுமனக்
கண்ணறிந்து விண்ணைப் பார்த்துக்
கபாலிக்கும்
வடுகனுக்கும் வஸ்த்ரங் கட்டி
எண்ணம்அயராமல்
நீ புஷ்பம் வாங்கி
ஈஸ்வரியும்
வடுகனையும் ரூபமாகித்
தண்ணுட்டா
னிருந்து பாத்திரங் களைந்துஞ்
சத்தியமாய்ப்
பானமிட்டுச் சரியாய் நில்லே
Translation:
While performing the worship ritual
Son adorn all the sacred pots with cloth
Knowing the mind’s eye, seeing
the sky
Adorn cloth for Kapali and
Vadugan
Without fatigue in your
thoughts, you buy flowers
Invoking Isvari and Vadugan in
a form
Keeping the focus within and
the five vessels
Placing the water, remain
properly.
Commentary:
After describing the yantra and
the procedure for the kumbha puja Subramanyar is describing how to perform this
puja. After placing the kumbha with the
bhija mantra they should be covered with appropriate cloth or vastram for
Kapali, Vadugan or Bhairava. They should
be adorned with flowers and the gods should be invoked in the water placed in
each kumbha. The five vessels are the pancha
patra used in puja where water is kept for performing rituals such as water
offering, cleaning god’s feet, mouth etc.
It is interesting that Subramanyar does not say Sivan but says Kapali. The term kapali when split as Ka+paali means one who protects the ka or space. He is the Lord of the chith akasam, chith ambalam and perambalam, microcosm and macrocosm respectively.
முந்தைய
பாடல்களில் யந்திரத்தையும் கும்பத்தையும் விளக்கிவிட்டு எவ்வாறு பூஜை செய்ய
வேண்டும் என்று இப்பாடலில் சுப்பிரமணியர் விளக்கத் தொடங்குகிறார். அரிசியைப் பரப்பி பீஜ மந்திரங்களை இட்டு
கும்பத்தை வைத்த பிறகு அவற்றிற்கு வஸ்த்திரங்கள் இடவேண்டும் என்கிறார் அவர். கபாலி, வடுகன், ஈஸ்வரி ஆகியோருக்கு வஸ்த்திரங்களை
அளித்து கும்பத்தில் ஆவாஹனம் செய்ய வேண்டும்.
இது மானத்த பூஜையாகையால் மனக்கண்ணை அறிந்து இதைச்செய்ய வேண்டும் என்கிறார்
அவர். இதனை அடுத்து பஞ்சபாத்திரங்கள்
எனப்படும் ஐந்து பாத்திரங்களில் நீரை வைக்க வேண்டும். இது அர்க்கியம் பாத்யம் எனப்படும் இறைவனின் கையை
அலம்புவது கால் கழுவுவது என்பது போன்ற சடங்குகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
இப்பாடலில் சுப்பிரமணியர் சிவன் என்று கூறாமல் கபாலி என்கிறார். இந்த சொல் க+பாலி என்று பிரிந்து க என்னும் ஆகாய தத்துவத்தை பாலிப்பவர் பாதுகாப்பவர் என்று பொருள் படும். இந்த ஆகாசம் சித்தாகாசம் அல்லது சிதம்பரம் மற்றும் பேரம்பலம் எனப்படும் உடலினுள் இருக்கும் ஆகாயம் பிரபஞ்ச வெளி என்ற இரண்டுமாகும்.
No comments:
Post a Comment