Verse 84
பாரடா மயேஸ்பரனும் பரையைப் பார்த்து
பாதமதில் நமஸ்காரம் பண்ணி நிற்க
ஆரடா செகத்திலுள்ள வுயிர்கட்கெல்லாம்
அண்ட பிண்ட சராசரங்கள ளளாவிநின்றும்
தேரடா நடையுடை யுஞ் சீவசெந்து
தெளிந்திருந்து லோகாதி லோகமெல்லாம்
ஏரடா நீயிருந்து வாழுமென்றே
எடுத்துரைத்து மயேஸ்பரனை வாவென்றாளே
Translation:
See son,
Mahesvaran, seeing Parai
Standing there
worshipping her sacred feet
For all the
lives in the world
Pervading the
worlds and the universes
You remain as
their actions (walking and dressing), as the Jiva
You live so
Saying so, she
said, “Come Maheswara”
Commentary:
This verse
explains the significance of Maheswaran.
Tamil Siddhas consider the universe and the human body are made in the
same way. While the external world is
managed by the Gods, Brahma, Vishnu, Rudra, Maheswara and Sadasiva the human
body is also managed by the same deities by remaining in the muladhara,
svadhishtana, manipuraka, anahata and vishuddhi cakra. Here Subramanyar shows us that the Maheswara
tattva is the state of the Jiva who remains in the world and performs physical
actions such as walking and dressing. The
mind is not involved here, only the external senses are functioning. Hence, Sakthi is telling to remain as the
Jivas with “nadai udai” or the physical actions.
இப்பாடலில் சுப்பிரமணியர் மகேச்வர தத்துவத்தை விளக்குகிறார். எவ்வாறு அண்டமான இவ்வுலகம் படைக்கப்பட்டு வழிநடத்தப்படுகிறதோ
அதேபோல பிண்டமான நமது உடலும் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன் சதாசிவன் என்ற
தத்துவங்களால் வழிநடத்தப்படுகிறது.
இவற்றில் மகேச்வர தத்துவம் இப்பாடலில் விளக்கப்படுகிறது. மகேஸ்வரன் என்பது வெளிக்கரணங்களைப் பயன்படுத்தி
வாழும் மனிதனின் நிலையைக் குறிக்கிறது.
இதனை அடுத்த தத்துவமான சதாசிவ தத்துவத்தில் மனம் பங்கு வகிக்கின்றது. அதனால்தான் சக்தி மகேஸ்வரனிடம் நடை உடை என்ற
புறச் செயல்களைச் செய்யும் ஜீவனாக நீ இருப்பாய் என்று கூறுகிறாள்.
No comments:
Post a Comment