Verse 65
மோதென்ற
வென்குருவு மெனக்குச் சொல்ல
மூன்றெழுத்தை
யானறிந்து முருகனானேன்
சூதொன்றுமில்லையடா
விந்த பேச்சு
சுக்கிலமுஞ்
சுரோணிதமு மொன்றாய்ப் போச்சு
வாதொன்றும்
வாய் திறந்து பேசிடாதே
வருகுமடா
பேரிடியுந் தலையில் வீழ்கும்
காதொன்றுங்
கேளாத பிள்ளை போலக்
கருத்தில்
வைத்துப் பூரணத்தைக் கருவாய்ப் பாரே
Translation:
With my guru telling me to hit it
Knowing the three letters I became Mururgan
This talk is not deceitful
The semen and the female sexual fluid became one
Do not talk about the vadam openly
A huge thunder (lightning) will strike you
Pretending like a deaf person
Keeping in focus see the fully complete as the essence.
Commentary:
Subramanyar is explaining his name, Murugan. He says that he learned about the three letters
and hence became Murugan. Meivazhi Kuzhanthaisami
Gaundar explains this as mu- three, ru- brightness and gu- darkness. Murugan got his name as he attained the jnana
prakasha that explains the truth about the three letters. The three prakasha or luminosity are sun, moon
and fire. Subramanyar says that suklam
and sronitham became one. This means
that the male and female principles became one, he attained the unmanifested
state. He advises Agatthiyar to talk
publicly about vaadam or the alchemy, the process of bringing forth a
transformation. This involves bringing together
the male and female principles together.
Besides the conventional distinction based on gender Tirumular refers to
the ida and pingala nadi, the surya and Chandra kala as female and male principles
that should be brought together and offered to the fire of kundalini to attain
yoga siddhi (third tantra Chandra yogam).
The principle of transformation of the metals is based on the union of
male and female components that results in a superior metal. Subramanyar has a poignant advice for
Agatthiyar. He tells Agatthiyar to remain
like a deaf person, deaf to the world so that others would not disturb him, and
keep his focus on the fully complete, the Divine, the poornam, the essence.
சுப்பிரமணியர்
தனது முருகன் என்ற பெயரை இப்பாடலில் விளக்குகிறார். தனது குரு தன்னை மூலாதாரத்தில் மோது என்று
கூறியதால் தான் அவ்வாறு செய்து மூன்றெழுத்தின் உண்மையை அறிந்து முருகன் என்று
பெயர் பெற்றேன் என்கிறார் அவர்.
மூன்றெழுத்து என்பது ந, ம, சி என்று அவர் முன் பாடலில் கூறியதைப்
பார்த்தோம். மெய்வழி குழந்தைசாமி கவுண்டர்,
மு- மூன்று, ரு- பிரகாசம், கு- இருட்டு.
அறியாமை என்ற இருட்டை விலக்கி மூன்று பிரகாசங்களான சூரியன், சந்திரன்,
அக்னி ஆகியவற்றின் தன்மையை தான் அறிந்ததால் முருகன் என்ற பெயரைப் பெற்றேன் என்று சுப்பிரமணியர்
கூறுகிறார் என்கிறார். இங்கு சுக்கிலமும்
சுரோணிதமும் ஒன்றாய்ப் போச்சு என்கிறார் அவர்.
சுக்கிலமும் சுரோணிதமும் உலக வழக்கில் உள்ள உடல் சார்ந்த திரவங்களைக்
குறிப்பதுடன் ஆண் பெண் என்ற பாகுபாடுகளைக் குறிக்கும். அவை ஒன்றாயின என்பது ஆண் பெண் என்ற நிலையற்று
ஒருமை நிலையை அடைந்ததையே இங்கு அவர் குறிப்பிடுகிறார். மேலும் சூரிய கலையும் சந்திர கலையும் பெண், ஆண்
எனப்படுகின்றன. இந்த இரண்டு கலைகளையும்
குண்டலினி அக்னியில் சேர்த்தால் தீராத ஆனந்தம் ஏற்படும் என்று திருமூலர் மூன்றாம்
தந்திரத்தில் சந்திர யோகம் என்னும் பகுதியில் குறிப்பிடுகிறார். உலோகங்களை மாற்றுவதும் இந்த தத்துவத்தைக் கொண்டுதான். இந்த வாதத்தைப் பற்றி வாய்விட்டு பேசவேண்டாம்
என்று கூறும் சுப்பிரமணியர் அகத்தியருக்கு மற்றொரு உபதேசம் செய்கிறார். காது கேளாதவரைப் போல அகத்தியர் வெளியுலகத்தால்
கவரப்படாமல் கருத்தில் பூரணம் எனப்படும் பரமாத்மாவைக் கருவாகக் காணவேண்டும்
என்கிறார்.
No comments:
Post a Comment