Verse 66
பாரப்பா
பரமசிவன் என்னைப் பார்த்து
பாலகனே
என்குருவே என்றே போற்றி
தேரப்பா
மூன்றெழுத்து மூல மந்த்ரஞ்
செப்பென்றே
தெண்டனிட்டு மப்பாவென்றார்
வேரப்பா
தெரியாதென் ரவர்க்குச் சொன்னேன்
வேண்டினார்
என்னையுந்தான் விபரமாக
ஏரப்பா
இம்மூன்று மூலங் காட்டி
என்நாளுஞ்
சிரஞ்சீவி யிருமென்றேனே
Translation:
Subramanyar explains his name “Sivaguru” here even though
he does not mention it explicitly. He
tells Agatthiyar that Paramasiva praised him as “my guru”, kneeled before Subramanayar
and asked him to tell the three letter mantra. Subramanyar says that he taught
Siva the three roots and blessed him to remain forever. The three letters are a u and ma the roots
for the Divine in the inactive, active states and its special capacity to
create the world.
இப்பாடலில்
சுப்பிரமணியர் தான் “சிவகுரு” என்று அழைக்கப்படுவதற்கான காரணத்தைக்
கூறுகிறார். சிவ பெருமான் சுப்பிரமணியரின்
முன் தெண்டனிட்டு மூன்றெழுத்து மூல மந்திரத்தைக் தனக்குக் கூறுமாறு கேட்டார்
என்றும் தான் அவருக்கு மூன்று மூல எழுத்துக்களை, அ, உ மற்றும் ம என்னும் செயலற்ற
செயல்பாடுடன் கூடிய இறைவனின் மூலத்தையும் அவரது படைப்புச் சக்தியான மாயையின்
எழுத்தான மகாரத்தையும் கூறி அவரை இறவாமல் இருக்குமாறு வாழ்த்தினேன் என்றும்
சுப்பிரமணியர் கூறுகிறார்.
No comments:
Post a Comment