Verse 74
காணுவது பூரணமே வெளியாய்ப் போகுங்
கருத்துடனே மவுனமதைக் கண்டுகொண்டு
தோணுவதெல்லாமுனக்குச் சூட்சங்காணுமஞ்
சொல்லாதே என்மகனேஎன்று சொல்லிக்
கோணாமல் நிலைதவறிப் போய் விடாமற்
சோர்ந்து மனதொன்றாகக் குறியைப் பார்த்து
வாணுலகில் உயிர் தோறும் நீயாய்நின்று
வகுத்து உயிரை ரெட்சித்துமிருமென்றாளே
Translation:
What is seen
is the poornam, with the idea of going as space
Seeing the
silence with mental focus
All that
appears will be the subtlety
Do not reveal
it, my son, saying so
Without flinching,
without losing your balance
Remain inactive,
with mind focused seeing the sign,
You, remaining within all the lives
Nurture them, she said.
Commentary:
Sakthi is telling Vishnu that when he remains with mental
focus all that he sees will be the Supreme, the fully complete. Through yoga Vishnu should see this, maintain
his mental focus and balance remain within all the life forms protecting and
nurturing them.
விஷ்ணு மனக்குவிப்புடன் இருந்தால் அவர் காணுவது அனைத்தும்
இறைவனாக பூரணமாக இருக்கும் என்று கூறும் சக்தி அவர் மவுனமாக இந்த நிலையில், அதைப்
பற்றி விளக்க முனையாமல், கோணாமல் தனது நிலை தவறாமல், குறியைப் பார்த்தவாறு இருக்கவேண்டும்.
மேலும் அவர், உலகில் உள்ள உயிர்ககளிலெல்லாம் தானாக நின்று அவற்றை காத்து
ரட்சிக்கவேண்டும் என்றும் சக்தி கூறுகிறாள்.
No comments:
Post a Comment