Wednesday, 12 November 2014

71. Vishnu gets the conch and the disc

Verse 71
இருவென்று பூரணமே மைந்தாவென்று
எவ்வுயிரும் ரட்சித்து மிடுக்கந்தீர்த்தும்
திருவென்றும் பெயரிட்டு அழைத்து மாலைத்
திருஷ்டிக்கு மொளிவாகித் தீர்க்கம் பெற்று
உருவென்று தோணாம லுயிராய் நின்று
உத்தமனே யோகாதி யோகியாகித்
தருவென்று தருக்களையு மவருக் கீந்து
சங்கோடு சக்கரமுங் கொடுத்திட்டாளே

Translation:
Remain, son, the fully complete, saying so
Nurturing all the life forms solving their problems
Naming Maal as Thiru
Increasing in stature while remaining hidden to avoid attracting the evil eye
Remaining as the soul, not appearing as the explicit form
The good one, becoming the yogi of yogis
Granting him trees
She gave him the disc and the conch.

Commentary:
This verse is a continuation of the previous one on the emergence of Vishnu.  Shakti named him Thiru granted him all the trees for nourishing the world.  The tree mentioned here is the sushumna nadi.  The Siddhas usually refer to it as “Karu nelli maram” or the tree of black gooseberry.  She also gave him the conch and the disc, his emblems so that he can perform maintainance of the world.


முந்தைய பாடலின் தொடர்ச்சியான இப்பாடலில் சுப்பிரமணியர் விஷ்ணு எவ்வாறு சங்கு சக்கரங்களைப் பெற்றார் என்று கூறுகிறார்.  சக்தி அவரை மைந்தா என்று அழைத்து அவருக்குத் திரு என்று பெயரிட்டு உலகில் வாழும் உயிர்களின் உடலுள் இருந்து அவர்களைக் காக்குமாறு, யோகாதி யோகியாக இருக்குமாறு அவருக்குக் கட்டளையிடுகிறாள். உலகை ரட்சிக்க வேண்டி விஷ்ணுவுக்கு மரங்களைத் தந்து தனது தொழிலை அவர் புரிவதற்கு அவருக்கு சங்கையும் சக்கரத்தையும் அளிக்கிறாள். இங்கு மரம் என்பது சுழுமுனை நாடியைக் குறிக்கும்.  சித்தர்கள் இதை கருநெல்லி மரம் என்று அழைக்கின்றனர்.

No comments:

Post a Comment