Verse 70
பாரப்பா
பச்சை நிற வடிவுகொண்டு
பராபரையே
பராபரனே என்று போற்றி
ஆரப்பா
வென்றாயே ஆத்தாளென்று
ஆனந்தக்
கூத்தாடி யவனைப் பார்த்து
நேரப்பா
எனையழைத்த மாதே மாதே
நிலைத்திருக்க
நிலைதனையும் நிறுத்து மென்றார்
மேரப்பா
மகாரமென்ற மவுனங் காட்டி
மேலாக
பதவியிலே யிருமென்றாளே
Translation:
See son, adorning the green hue
Praising, “Paraparaiye! Paraaparane!”
The mother said, “Who is it son?”
Dancing the dance of bliss seeing him
The lady who bid me
She said, “Establish to the
status of existence”
Showing the Meru, the silence
of makaara
She said, “Remain in the
exalted state.”
Commentary:
In this verse Sakthi is talking
to Vishnu whose emergence was described in the previous verse. Subramanyar says that Acchuthan’s hue is
green. Green represents fertility,
existence of life. It is not clear
whether this color has another significance besides this. Siddhas call mother Kundalini also as the one
with green hue.
Vishnu emerges and stands
before Sakthi praising her as “Paraaparaiye, Paraaparane”. From this we understand that creation, sustenance
and all other processes are performed by Siva and Sakthi together. Another name for Vishnu is Maal. This term means “one who causes delusion/enchantment”. Delusion or enchantment is preduced as a
result of maya. Maya is represented by the letter makaara. Hence, Subramanyar says that Sakthi revealed
to Achutan the maya and told him to manage the sustence or existence of this
world.
முந்தைய
பாடலில் அச்சுதனின் வரவு கூறப்பட்டது.
இப்பாடலில் அச்சுதனுக்கு சக்தி அளித்த கட்டளையைப் பார்க்கிறோம். மால் பச்சை வண்ணன் என்று சுப்பிரமணியர் கூறுகிறார்
சுப்பிரமணியர். பசுமை நிறம் என்பது
உயிர்களின் இருப்பைக் குறிப்பதைத் தவிர வேறு முக்கியத்துவம் பெற்றுள்ளதா என்பது
தெரியவில்லை. குண்டலினித் தாயைக்கூட
சித்தர்கள் பச்சை நிறத்தாள் என்று சில பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு தோன்றிய மால் சக்தியை பராபரையே,
பராபரனே என்று வாழ்த்தி வணங்கி நின்றார்.
இதிலிருந்து சிவனும் சக்தியும் பிரியாமல் இருந்தே உலகைத்
தோற்றுவிக்கின்றனர் என்பது தெரிகிறது. மால்
என்னும் சொல் மயக்கத்தை ஏற்படுத்துவது என்று பொருள்படும். இந்த மயக்கம் மாயையால் தோற்றுவிக்கப்படுவது.
மாயை மகாரத்தில் குறிக்கப்படுகிறது.
இவ்வாறு மேரு போன்ற மகாரத்தை மாலுக்கு சக்தி வழங்கி அவரை இந்த உயர்ந்த
பதவியில் உலகின் இருப்பை நிலைபெற்றிருக்கச் செய்துகொண்டு இரு என்று
கட்டளையிடுகிறாள்.
No comments:
Post a Comment