Verse 72
கொடுத்திட்டாள்
ஒளிவாலே மாயை தோன்றிக்
குருவான
தேசிஎன்று பேருமிட்டு
அடுத்திடாளென்மகனே
வாவா வென்று
ஆதார
மாயிருக்கும் படியாய் நின்று
தடுத்திட்டாள்
தாரணையை அவர்க்குக் காட்டித்
தானானே
என்றும் உரைத்தருவிலேறி
விடுத்திட்டாள்
பூரணமே விஞ்சை நாதா
வேண்டியே
விண்ணிலிரும் என்றாள் பாரே
Translation:
She granted these with the maya disappearing
Also naming as Desi, the guru
She bid, “My son! Come, come”
Remain as the axis.”
She accepted him showing him
the dharana
Climbing the tree saying, “I
became the self”
She bid, “The poorna, the lord
of wisdom
You remain in the sky.”
Commentary:
The holy triad of Brahma,
Vishnu and Rudar are beings with variations in the triple mala of aanava, karma
and maya. Brahma is under the influence
of the all the three malas. Vishnu is free
from maya but is under the influence of aanava and karma, Rudra is under the
influence of aanava. Subramanyar is referring
to this fact when he talks about Vishnu.
Vishnu is free from maya. Sakti
call him as her son as she is the mother who birthed the holy triad, they
emerged from her. Vishnu is the deity of
the svadishtana and the water element.
Tirumular describes dharana (thaaranai) as tying the
mind that was turned inwards firmly, preventing the downward flow of breath by
holding the mulabandha, raising the prana and making it ascend through the
sushumna nadi (equated to the stem of the musical instrument, veena) remaining
with “unseeing eye and unhearing ear”. It
is merging the physical body with the five elements, the five elements with
their subtle qualities and the mind with chittham. This causes the downward
flow of nectar (water from the sky) through the central channel conferring the
vision of the dance of the blissful effulgence. The breath stays within in
kumbaka. Tirumular says that dharana is the process of waking up the man in the
lower grounds and making him meet the lady on the high ground.
பிரம்மா,
விஷ்ணு, ருத்திரன் என்ற மும்மூர்த்திகளில் பிரம்மா ஆணவம், கர்மம், மாயை என்ற
மூன்று மலங்களாலும், விஷ்ணு ஆணவம், கர்மம் என்ற இரண்டு மலங்களாலும், ருத்திரன் ஆணவ
மலத்தாலும் ஆளப்படுகின்றனர். இதைத்தான்
சுப்பிரமணியர் மாயை ஒளிய என்று இங்கே குறிப்பிடுகிறார். சக்தி விஷ்ணுவை மகனே என்கிறாள் ஏனெனில் அவளே
அவருக்குத் தாய், மும்மூர்த்திகளும் அவளிடமிருந்தே தோன்றினர். விஷ்ணு சுவாதிஷ்டானத்தின் அதிபதி நீர்
தத்துவத்தைக் கட்டுப்படுத்துபவர்.
திருமூலர்
தாரணை என்பதை இவ்வாறு விளக்குகிறார்: மனதை
உள்ளே திருப்பி மூச்சு கீழே வெளியேறுவதைத் தடுக்க மூல பந்தத்தை மேற்கொண்டு பிராணனை
சுழுமுனை நாடியின் (வீணையின் தண்டு) மூலம் மேலே ஏற்றி காணமல் கண்டு கேட்காமல்
கேட்டு இருப்பது என்கிறார். உடலை
அம்பூதங்களிலும் ஐம்பூதங்களை அவற்றின் குணங்களிலும் மனதை சித்தத்துடனும் ஒன்றச்
செய்வது. இது அமிர்தத்தை கீழே இறங்கச்
செய்து இறைவனின் நடனத்தைக் காணச் செய்யும்.
மூச்சு கும்பகத்தில் நிலைபெற்று இருக்கும். தாரணை என்பது மனிதனை கீழ் நிலங்களிலிருந்து
உயர்த்தி மேல் நிலத்தில் பராபரையை சந்திக்கச் செய்வது என்று திருமூலர் கூறுகிறார்.
தெளிவான விளக்கம்,நன்றி அம்மா
ReplyDelete