Saturday, 22 November 2014

80. Experiences of the yogi

Verse 80
கூடுவாய் தம்பனமும் இதுவேயாகும்
கோடி ரவி தனிக் காட்டிக் குறியில் நிற்கும்
ஆடுவாய் இதையறிந்து மவுனங்கொண்டு
அஷ்டமா சித்திஎட்டு மாட்டி வைக்கும்
நாடுவாய் நாற்பதின் முக்கோணந்தோன்றும்
நந்தி குரு ஆசானைப் பேசவைக்கும்
பாடுவாய் பரவெளியைக் கண்டுகண்டு
பாவமதை அகற்றிடுவாய் பாரு பாரே

Translation:
You will join this, this is the sthambanam
Showing millions of suns it will remain in the sign
You will dance, knowing this, adorning silence
The eight siddhis will torment you
You will seek in the fourty triangles
It will make the preceptor, Nandi Guru, speak
You will sing, seeing the supreme space repeatedly
You will eliminate sins, see, see.

Commentary:
Subramanyar is telling Agathiyar about the experiences of a kundalini yogi.  In the previous verse he spoke about kumbaka pranayama and joining the gurupaadam.  In this verse he says that this is sthambanam.  Sthamban or immobilization is one the ashta karma or eight acts.  We have already seen the details about these in verse 3.  While it is usually thought to be for immobilizing one’s enemy its actual purpose is to immobilize breath in kumbakam and along with it the mind as the movements of the mind is associated with the breath.  This practice will grant the ashta ma siddhi or the eight mystical accomplishments- anima, magima, lagima, garima, praapthi, praakaamyam, isithvam and vasithvam.  Subramanyar tells Agatthiyar that these accomplishments will torment one because a yogi loses his goal very easily being engulfed by the pride that these accomplishments grant.  The fourty triangles that Subramanyar talks about may be the Sricakra, the cosmogram that describes creation and dissolution.  Nandi guru aasaan is Siva who is the Adi guru.  Paraveli is the supreme space which represents the space of consciousness.  Through this procedure the yogin gets rid of his sins.


இப்பாடலில் சுப்பிரமணியர் ஒரு குண்டலினி யோகியின் அனுபவங்களை விளக்குகிறார்.  முந்தைய பாடலில் எவ்வாறு கும்பகத்தால் மூச்சை அடக்கி குருபாதத்தில் கூட வேண்டும் என்று சொன்ன அவர் இப்பாடலில் இதுவே தம்பனம் என்று விளக்குகிறார்.  தம்பனம் என்பது அஷ்ட கர்மாக்களில் ஒன்று.  இதைப் பற்றிய விவரங்களைப் பாடல் மூன்றில் பார்த்தோம்.  பொதுவாக தம்பனம் என்பது எதிரியை அசையாமல் இருக்கச் செய்வது.  இப்பாடலில் தம்பனம் என்பது மூச்சை கும்பகத்தில் அசையாமல் இருக்கச் செய்வது என்று சுப்பிரமணியர் காட்டுகிறார்.  இவ்வாறு மூச்சு கட்டுப்பட்டால் மனமும் தனது ஆட்டத்தை நிறுத்தி அசையாமல் இருக்கிறது. ஏனென்றால் மனமும் மூச்சும் நெருங்கிய தொடர்புடையவை.  ஒன்றின் செயல்பாடு மற்றொன்றை செயல்பட வைக்கும்.  இந்த பயிற்சி அஷ்ட சித்திகள் எனப்படும் அணிமா மகிமா, லகிமா, கரிமா, பிராகாமியம், ஈசித்வம், வாசித்வம் மற்றும் பிராப்தி என்பவை.  இந்த சித்திகள் ஒருவரை ஆட்டிவைக்கும் என்று சுப்பிரமணியர் கூறுகிறார்.  இந்த சித்திகளைப் பெற்ற யோகி அவை அளிக்கும் சக்தியினால் தனது இலக்கை நோக்கிப் பயணிக்காமல் வழிதவறிவிடலாம்.  நாற்பது முக்கோணம் என்று சுப்பிரமணியர் கூறுவது உலகின் தோற்றத்தையும் லயத்தையும் குறிக்கும் ஸ்ரீ சக்கரமாக இருக்கலாம்.  நந்தி குரு ஆசான் என்பது ஆதிகுருவான சிவனைக் குறிக்கும்.  பரவெளி என்பது விழிப்புணர்வு மண்டலத்தைக் குறிக்கும்.  

No comments:

Post a Comment