Verse 82
நாட்டியே பரமசிவன் தன்னைப் பார்த்து
நானுரைத்தேன் பூரணத்தின் நிலமைதன்னைக்
கூட்டியே பரமசிவன் என்னைப் பார்த்து
குருவென்றுஞ் சிவனென்றுங் குறித்தார் மைந்தா
ஆட்டியே பூரணத்தில் அடங்கி வாழ்ந்தேன்
அரனென்றுஞ் சிவனென்று மருளச் செய்தேன்
கூட்டியே எனை எடுத்து முகந்து கொண்டு
குமரகுரு பரனென்று கூறினாரே
Translation:
Seeing
Paramasiva after establishing so
I spoke about
the status of the fully complete
Seeing me,
Paramasiva
Called me as
Guru and Siva, my son!
Placing it in
the poornam, I lived abiding in it
I made it
grace as Hara and Siva
Collecting me and
cherishing me
He said, “Kumaragur
para”.
Commentary:
Subramanyar is
talking about himself and about getting the name Kumara Guru para”. We already saw in verse 34 about this
name. Here Subramanyar is telling us
that it was Paramasiva who gave him this name.
This verse is interesting in that Subramanayar is telling us that he blessed as Hara and Siva. The action of Hara and Siva are performed by remaining in the state of poornam. We already saw the words of Sakthi when she tells Brahma, Rudra and Vishnu to perform their actions while remaining in the state of poornam. Here Subramanyar tells Agatthiyar that he established himself in the state of poornam and functioned as Hara and Siva, the one who cuts away sins and further births and Siva, one who is auspiciousness, the agni and vayu, the underlying principles of vaasi yogam.
இப்பாடலில் சுப்பிரமணியர் தான் குருபரன் என்ற பெயரைப்
பெற்றதைப் பற்றிக் கூறுகிறார். நாம்
முன்பே பாடல் 34ல் இந்தப் பெயரின் விளக்கத்தைப்
பார்த்தோம். இப்பாடலில் சுப்பிரமணியர்
தனக்கு இப்பெயரைப் பரமசிவன் அளித்தார் என்று கூறுகிறார். மேலும் அவர் தன்னை அரன் என்றும் சிவன் என்றும்
அழைத்ததாகக் கூறுகிறார். முந்தைய பாடல்களில் எவ்வாறு சக்தி பிரமன், ருத்திரன் மற்றும் மாலுக்கு அவர்கள் தத்தம் செயலை பூரணத்தில் நின்று நிகழ்த்தவேண்டும் என்று கூறியதைப் பார்த்தோம். இப்பாடலில் சுப்பிரமணியர் தானும் பூரணத்தில் நிலைத்து நின்று அரனது செயலான பாபங்களையும் இனிவரும் பிறவிகளையும்
அறுத்து சிவனாக எல்லா மங்களங்களையும் அருளுவதாக, வாசி யோகத்தின் அடிப்படையானஅக்னி வாயுவாக
இருப்பதாகக் கூறுகிறார்.
No comments:
Post a Comment