Thursday 27 November 2014

85. Sakthi remains as sankalpa dhaarana

Verse 85
வாவென்றா ளுந்தனுக்கு விஞ்சை தானும்
வகாரமென்ற மவுனத்தை வைத்தாள் ஆத்தாள்
ஆவென்றாள் பூரணத்தை அடுக்கச் சொன்னாள்
அதிலடங்கி வாசிஎன்றே இருக்கச் சொன்னாள்
கூவென்றாள் மனதடங்கி அறிந்து கொண்டாள்
கூறுகின்ற மனக்கண்ணால் ஒளியைப் பார்த்து
தாவென்று தமர்வாசர்க்குள்ளே சென்று
சங்கற்ப தாரணையுமானாள் பாரே

Translation
She said, “come” to you, the wisdom
The mother placed the silence, the vakaara
She said, “aa” and explained about the poornam
She bid to remain abiding in it as vaasi
With the mind coming under control as “koo”
Seeing the luminosity through the mind’s eye that is revealing it
Going within the threshold of the experts
She became the sankalpa dhaarana.
Commentary:
Sakthi bid the consciousness, knowledge to occur saying, “come” and placed the vakaara, the silence to aid this process. “aa” is the long form of akaara, the sakthi form of the letter of siva or the supreme being.  Siddhas talk about kaaranam and pooranam.  Kaaranam is the cause the akaara and pooranam is the active state of the kaaranam the aakaara.  This knowledge occurs when the yogin performs vaasi yogam.  The mind then comes under control.  “koo” as we saw before is the tamil form of “hoo” the letter for bindu, the singularity from which everything emerges.  The luminosity of consciousness should be experienced through the mind’s eye.  Thus, mind is both the impediment as well as the aid.  Hence, Agatthiyar said, “manamadhu semmaiyaanaal mandiram jebikka vendaam” (if the mind is perfected there is no need for reciting any mantra).  Ramana Maharishi says the mind must be used as a stick to stoke the fire of austerities and then it should also be thrown into the fire.  Sakthi remains as the sankalpa dhaarana or intentional contemplation.  By saying that Sakthi goes through process Subramanyar is indicating that all the five forms, Brahma, Vishnu, Rudra, Maheswara and Sadasiva are none other than Sakthi herself.


மகேஸ்வரனை வா என்று அழைத்த சக்தி வகாரம் என்ற மவுனத்தை ஞானம் பெறுவதற்காக வைத்தாள்.  அவள் ஆ என்ற பூரணத்தை அடையுமாறு கூறினாள்.  சித்தர்கள் காரணம் என்றும் பூரணம் என்றும் பரம்பொருளின் இரண்டு நிலைகளைக் குறிக்கின்றனர்.  பூரணம் என்பது சிவ நிலை, காரணம் என்பது சக்தி நிலை, செயல்பாடுடைய நிலை.  உயர் எழுத்துக்களில் அ என்ற குறில் சிவத்தையும் ஆ என்ற நெடில் சக்தியையும் குறிக்கும்.  பூரணத்தை விளக்கிய சக்தி வாசியினால் அதில் அடங்கி இருக்கக் கூறினாள்.  கூ என்பது பிந்துவின் எழுத்து என்று முன்னமே பார்த்தோம்.  பிந்துவிலிருந்துதான் உருவங்கள் தோன்றின.  இதை அறிவது மனதை அடக்கினால்தான் இயலும்.  மனம் என்பது தடையாகவும் உதவியாகவும் செயல்படுகிறது.  அதைக் கொண்டு ஒருவர் உலக வாழ்க்கையில் மூழ்கலாம் அல்லது உயர் நிலையை அடையலாம்.  அதனால்தான் அகத்தியர் மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்கிறார்.  ரமண மகரிஷியும் தவம் என்னும் தீயை எழுப்பும் கோலாக மனதைப் பயன்படுத்திவிட்டு முடிவில் அதையும் அந்தத் தீயில் இடவேண்டும் என்று கூறுகிறார்.  முடிவில் சக்தி தகுதி வாய்ந்தோர் என்னும் வாயிலில் புகுந்து அங்கு சங்கல்ப தாரணையாக நிற்கிறாள் என்கிறார் சுப்பிரமணியர். தாரணை என்பது பிரத்தியாகாரத்தால் உள்ளே இழுக்கப்பட்ட மணத்தை அந்த நிலையில் இருத்துவது.  

2 comments: