Friday 14 November 2014

75. Emergence of Brahma

Verse 75
இருமென்று நகாரமென்ற விஞ்சை தன்னை
எண்ணியே பூரணத்தில் இருத்தி ஓதி
திருமந்திர மூலமென்ற செபந்தான் செய்து
சேர்ந்தெழுந்த பராபரனை நினைத்துப் போற்றிக்
குருமந்த்ர நகாரமென்ற விஞ்சையாலே
கொடியதொரு மறையோனுங் குதித்தே வந்து
உருவொன்றுந் தெரியாத தேவி பாத
மோடி வந்து மகிழ்வுடனே பணிந்தான்பாரே

Translation:
Thinking about the knowledge, the nakaara
Holding it in the poornam, reciting it
Performing japa of the thirumulamantra
Contemplating and praising the Paraaparan who emerges along
With the knowledge of the guru mantra, nakaara
The vedi (one responsible for veda) jumped there
To the sacred feet of Devi whose form is incomprehensible
He stood there happily and humbly saluting them.

Commentary:
Next Sakthi decides that Brahma should emerge.  She contemplates on nakaara, its significance, what it stands for.  She holds it in the fully complete state, poornam.  She recites the moola thirumandiram while holding the nakaara in the mind and the wisdom it conveys.  This brings about the emergence of Paraaparam and Brahma.  Subramanyar calls him Maraiyon, the one responsible of the Vedas.  Marai also means concealment.  Brahma creates the lives and hides their true nature from them with the help of maya.  Thus the explanation that he is the concealer is also appropriate.  Brahma emerges and stands humbly saluting Devi’s sacred feet.  Subramanyar indicates that her feet is not like our material feet.  Its form is incomprehensible. 


சக்தி அடுத்து பிரம்மாவைப் படைக்க முனைகிறாள்.  அதற்கு அவள் நகாரத்தை மனதில் எண்ணி அதைப் பூரணம் என்னும் நிலையில் இருத்தி திருமூல மந்திரத்தை செபிக்கிறாள்.  அப்போது தோன்றும் பராபரனை எண்ணிப் போற்றுகிறாள். குருமந்திரம் என்னும் நகாரத்திலிருந்து பிரம்மா வெளிப்படுகிறார்.  அவரை சுப்பிரமணியர் மறையோன் என்று குறிப்பிடுகிறார்.  மறையோன் என்பது பொதுவாக வேத மூர்த்தி என்று பொருள்படும்.  இதை மறைத்தல் என்று கொண்டால் பிரம்மா உயர்களைப் படைத்து அவற்றின் உண்மைத் தன்மையை அவற்றினிடமிருந்து மறைப்பதாகவும் இதற்குப் பொருள் கூறலாம்.  இவ்வாறு வெளிப்பட்ட பிரம்மா உரு எது என்று தெரியாத தேவியின் பாதத்தைப் பணிந்து நின்றார்.  இதனால் தேவியின் பாதம் நமது மானுட பாதத்தைப் போன்றது அல்ல என்பது புலப்படுகிறது.

No comments:

Post a Comment