Thursday 30 October 2014

62. Pancha sakthi, ashta karma

Verse 62
பாரப்பா பஞ்ச சக்தி தீட்சையாலே
பரலோக முழுவதுமே தனதாய்ப் போகும்
ஆரப்பா அஷ்டகர்ம வாலையாலே
யாகாதி யொன்றுக்கு வயது நூறு
நேரப்பா யாகாதி செய்யவுந்தான்
நிலைதவறா திருந்துமனம் நிறுத்த வேணும்
பேரப்பா இப்படியே பேருபெற்றேன்
பேசாத மவுனத்திற் கூடினேனே

Translation:
See son, due to Pancha Sakthi Deeksha
The entire world of param will become one’s own
Rest son, due to the Ashta karma vaalai
Lifespan will be hundred years
It is proper son, to perform yaga and others
One should remain firmly in one’s state and stop the mind
See son, in this fashion I attained glory
I joined the unspeaking silence.

Commentary:
The Pancha Sakthi or five sakthi are Chith Sakthi, Parasakthi, Iccha sakthi, Jnana Sakthi and Kriya Sakthi.  Chith Sakthi is the awareness of the Supreme Being, Parasakthi is the active form of Param.  Siva and Sakthi transform into Jnana sakthi and Kriya Sakthi, the wisdom about the state of Divine with a form and its power to move/function.  Iccha Sakthi is the will of the Divine which manifests as bindu, the primordial form for manifestion.  This bindu is made of suddha maya.  The five Sakthi are the causes for manifestion. Hence, having their deeksha will grant the entire manifested universe.

Ashta karma are the eight acts of sthambanam, maaranam, mohanam, vidveshanam, bedhanam, ucchadanam, aakarshanam and aakrooshanam.  These powers are generally associated with black magic but that is not their original intent. Vasiyam is attracting all the knowledge, devas, munis, animals, spirits, desires and worldly life towards oneself.
Mohanam is making all the life forms and elements of nature being attracted towards oneself.  Sthambanam is making all the elements stop their action upon one’s will.  Ucchadanam is removal of all diseases, evil magical effects. Vidveshanam is controlling creation.  Whatever the yogin touches will multiply ten times.  Maaranam is bring about death.  It is death of diseases and other enemies for one’s spiritual attainment. If bedhanam is attained all the diseases will be removed if the yogin offers anyone vibhuti.  Agatthiyar mentions that Ashta Ganapathi are responsible for these eight actions.
A yogin who has all the above actions under control will live for hundred years.  His mind will be under control and performance of yaga will become easy.

பஞ்ச சக்தி என்பவை சித் சக்தி, பரா சக்தி, இச்சா சக்தி, ஞான சக்தி மற்றும் கிரியா சக்தி என்ற ஐந்து சக்திகளும் ஆகும்.  சித் சக்தி என்பது பர சிவனின் தன்னை அறியும் உணர்வு.  ஆதி சக்தி உலகம் வெளிப்படக் காரணமாக இருக்கும் சக்தி.  சிவனும் சக்தியும் வெளிப்பட்டவுடன் அவர்கள் வெளிப்படுத்துவது ஞான சக்தி மற்றும் கிரியா சக்தி.  அவர்களது விருப்பம் அல்லது சங்கல்பம் இச்சா சக்தி.  இவ்வாறு பஞ்ச சக்தி தீட்சை பர உலகை- பரம் படைத்த உலகை, பரத்தின் உலகை ஒரு யோகிக்குப் பெற்றுத் தரும்.


அஷ்ட கர்மா என்பவை வசியம், மோகனம், ஸ்தம்பனம், வித்வேஷணம், மாரணம், பேதனம் என்ற எட்டு செயல்களாகும்.  இந்த செயல்கள் பொதுவாக பிறருக்கு துன்பம் விளைவிக்கவே பயன்படுவதாக ஒரு எண்ணம் நிலவுகிறது.   அவற்றின் உண்மைப் பொருளை அகத்தியர் இவ்வாறு விளக்குகிறார்.  வசியம் என்பது எல்லா சாஸ்திரங்கள், வேதங்கள் ஆகியவற்றையும் தேவர்கள், முனிவர்கள், விலங்குகள், பறவைகள் மற்றும் ஆவிகளைத் தன்னை நோக்கி வசீகரிப்பது.  மோகனம் என்பது பஞ்ச பூதங்களைத் தன்னிடம் மயங்கச் செய்வது.  ஸ்தம்பனம் என்பது பஞ்ச பூதங்களை செயலிழக்கச் செய்வது. உச்சாடணம் எல்லா நோய்களையும் செய்வினைகளையும் விலக்குவது.  வித்வேஷணம்- இதைப் பெற்ற யோகி தொட்டதெல்லாம் பத்துமடங்காகும்.  மாரணம் என்பது பிறரை மரணமடையச் செய்வது மட்டுமல்ல எல்லா வியாதிகளையும், ஆத்ம வளர்ச்சிக்கு விரோதிகளாக இருப்பவற்றை மரிக்கச் செய்வது.  பேதனம் சக்தியைப் பெற்ற யோகி ஒருவருக்கு விபூதியைக் கொடுத்தால் அவருக்கு எதிரியாக இருப்பவை அனைத்தும் விலகி ஓடும்.  இந்த எட்டு கர்மாக்களையும் அருளுவது அஷ்ட கணபதிகள் என்று அகத்தியர் கூறுகிறார். இந்த சித்திகளைப் பெற்ற யோகி நூறு வருடங்கள் வாழ்வார்.  யாகம் செய்வதற்குத் தேவையான மனக்கட்டுப்பாடு அவருக்கு வாய்க்கும் என்று சுப்பிரமணியர் கூறுகிறார். 

Tuesday 28 October 2014

61. Turiyatheetham, Svaroopa mani, Sookshma mani.


                                           Jñana Malai Valli Teyvanai Samedha Murugan

                                                  Jnana malai Sri Valli Devanai samedha Murugan

Verse 61
கொள்ளையிலே நரித்தோலைத் தரித்து மைந்தா
கூறுவாய் உத்தளமாய் விபூதியிட்டுச்
சொல்லையிலே ஓர் துரியா தீதம் பார்த்துச்
சொரூபமணி சூட்சமணி தன்னைப் பார்த்து
எல்லையில்லாப்  பேரொளியைப் போலே வீசும்
இமயகிரி பருவத்தில் இருத்தி வைக்கும்
தொல்லைஎல்லாந் தீருமினிப் பாசம் போகுந்
துன்பமற்றுப் பேரின்பந் தொடரும் பாரே

Translation:
Adorning the skin of the fox, son,
You will adorn the sacred ash as a power and say
While reciting seeing a turiyatheetha
Svaroopa mani and sooksha mani
They will glow like limitless supreme blaze
It will hold you at the Himagiri Parvatham
All the troubles will end, attachments (pasa) will leave
Supreme bliss will continue without any misery, see.

Commentary:
Subramanyar is saying telling Agatthiyar that he should adorn the fox skin, sacred ash power and recite the appropriate praise verse.  This will lead to the vision of Turiyatheetham, the state of consciousness beyond the fourth state, turiya, the sight of svaroopa mani or the jewel of the self-atma darsana and sooksha mani, the subtle jewel or the supreme being.  They will glow with great effulgence.  Consciousness will be held fixed at Himagiri parvatham or the Sahasrara.  All the troubles will leave, pasa will end and interrupted supreme bliss will ensue.


நரித்தோலை அணிந்துகொண்டு விபூதியைப் பூசிக்கொண்டு சொல்ல வேண்டிய மந்திரங்களைக் கூறினால் முதலில் துரியாதீதம் தென்படும்.  அதன்பிறகு சொரூப மணி எனப்படும் ஆத்ம தரிசனமும் சூட்ச மணி எனப்படும் இறைதரிசனமும் கிட்டும்.  இவையிரண்டும்  கோடி சூரியப் பிரகாசமாகத் துலங்கும் என்கிறார் சுப்பிரமணியர்.  அது அகத்தியரை இமகிரி பர்வதத்தில் இருத்தி வைக்கும் என்றும் கூறுகிறார். இமகிரி பர்வதம் என்பது சஹாஸ்ராரத்தைக் குறிக்கும்.  எல்லா தொல்லைகளும் இதனால் தீரும், உலகோடு பிணைக்கும் பாசம் விட்டுப் போகும், இடைவெளியில்லா பேரின்பம் தொடரும் என்று சுப்பிரமணியர் அகத்தியரிடம் கூறுகிறார். 

60. Vaalai puja

Verse 60
சாத்தென்று சொன்னபடி நினைவாய்ச் சாத்தி
தவறாமற் பலகாரம் வடையும் வைத்து
போத்தென்று சொன்னபடி விஞ்சையோதிப்
புகழ்ந்திடுவாய் சாபமெல்லாம் நிவர்த்தி செய்து
ஏத்தென்று சொன்னபடி சமிதைப்போட்டு
என் மக்காளாவிநெய்யா விலையாற்சாத்தி
வாழ்த்தென்று வாழ்த்திடுவாய் வாலை பூசை
மறவாமல் அனுதினமும் பணிந்து கொள்ளே

Translation:
Adorning it as commanded before
Offering various eatables including “vada”
Reciting the scriptures as instructed to praise them
You will praise and thus remove all the curses
Lighting as instructure with the help of woodchips
My people, adding the clarified butter made from cow’s milk, with the leaf
You will praise, as instructed, and perform vaalai puja
Daily without forgetting, salute and accept it.

Commentary:
In this verse Subramanyar is talking about a homa for Vaalai or Kundalini Shakti.  Agatthiyar in his Saumya sagaram says that the letter “ci”represents vaalai.  The vaalai homa is performed with food offerings, kindling and growing the fire with ghee from cow’s milk which is added with a leaf, usually mango leaf, adding wood pieces and chanting the appropriate verses to expiate the curses.  Subramanyar is saying that this puja should be performed daily.


இப்பாடலில் சுப்பிரமணியர் வாலை பூஜையைப் பற்றிப் பேசுகிறார்.  வாலை என்பது குண்டலினி சக்தியைக் குறிக்கும்.  வாலைப் பூஜை அக்னியை பசு நெய்யினாலும் சமித்தினாலும் வளர்த்து, சாப நிவிர்த்தி மந்திரங்களை ஓதி பலாகரங்களையும் வடையையும் படைத்து மேற்கொள்ளப்படுகிறது.  இந்த பூசையை மறக்காமல் தினமும் செய்ய வேண்டும் என்கிறார் சுப்பிரமணியர்.

Sunday 26 October 2014

59. Navagraha puja

Verse 59
கொள்ளுதற்கு நவக்கிரக சித்தி வேணும்
கொடியதொரு நவகலசம் வைக்க வேணும்
தள்ளுதற்கு முன் சொன்னபடிதானப்பா
தவறாமற் றாணையை ஏற்ற வேணும்
சொல்லுதற்குக் கிரக வட் சரங்கள் கீறிச்
சுத்தமுடன் தருப்பையுமாவிலையுங் கட்டி
மல்லுத்தம் பண்ணாமல் மக்காள் மக்காள்
மனோன் மணியை அர்ச்சித்து தேங்காய் சாத்தே

Translation:
To see it, navagraha siddhi is essential
The vicious nine sacred pots should be placed
What should be avoided is as mentioned before
The command must be raised without fail
The akshara of the planets should be draw for chanting
Tying up with purity, the dharbha grass and mango leaves
People, people, without performing boxing
Place the coconut after praising Manonmani.

Commentary:
Subramanyar says that to realize the significance of the three letters, a, u and ma, one should have navagraha siddhi.  The different plancts correspond to different sites in out body.  David Frawley describes the relationship between the different planets and the cakras in our body.  Muladhara corresponds to shani/saturn, svadhishtana to guru/Jupiter, manipuraka to mangala/Mars, anahata to shukra/venus, vishuddhi to budha/mercury, ajna to Chandra/surya.  Rahu and ketu correspond to the nodes where the moon and the earth meet.  Rahu is the node at the muladhara and ketu is at the sahasrara. Thus rise of kundalini Shakti is meeting of rahu with ketu.

For this puja Subramanyar says that nine pots should be placed along with dharba grass and mango leaves.  Dharba grass and mango leaves are said to have the highest value in conducting sound vibrations through their tips.  Hence, priests dip their tips in sacred water in the pots and sprinkle it.  Subramanyar says that a coconut should be placed on the pot after praying to Manonmani.  Manonmani is the sakthi of Sadashiva the manifestation corresponding to the space principle.  From space evolved the other principles.  Navagraha siddhi is siddhi of the cakra, corresponding to the nine planets and the five deities Sadashiva, Maheswara, Rudra, Vishnu and Brahma. 

Thus, navagraha siddhi is siddhi of the five elements and the mind.

அ உ ம என்ற மூன்றெழுத்தின் முக்கியத்துவத்தைக் காண நவகிரக சித்தி பெறவேண்டும் என்று சுப்பிரமணியர் கூறிகிறார்.  நவகிரகங்கள் நமது சக்கரங்களுடன் தொடர்பு கொண்டவை.  டேவிட் பிரௌலி என்பவர் கீழ்க்காணும் தொடர்பைக் கூறுகிறார்.  மூலாதாரம்- சனி, சுவாதிஷ்டானம்- குரு, மணிபூரகம்-செவ்வாய், அனாகதம்- சுக்கிரன், விசுத்தி- புதன், ஆக்ஞா- சந்திர சூரியர்கள். ராகு கேது என்பவர்கள் சந்திரனும் பூமியும் சநதிக்கும் புள்ளிகளைக் குறிக்கும்.  ராகு தென்புலத்தில் மூலாதாரத்திலும் கேது வட புலத்தில் சஹாஸ்ராரத்திலும் உள்ளனர்.  ராகுவை தலை என்றும் கேதுவை வால் என்றும் குறிப்பிடுவது வழக்கம்.  குண்டலினி சக்தியின் எழுச்சி என்பது ராகு கேதுவை சந்திப்பது, பாம்பு தனது தலை கீழ் நிலையிலிருந்து மேலே நோக்கி மாறுவது.  இதுதான் தலை கீழ் மாறலோ!

நவகிரக சித்தி பெற ஒன்பது கலசங்களை வைத்து அவற்றில் மாவிளையையும் தரிபைப் புல்லையும் வைக்கவேண்டும் என்கிறார் சுப்பிரமணியர்.  தர்பையும் மாவிலையும் சப்த அதிர்வுகளை தமது நுனியினால் கடத்துவதாக எண்ணப்படுகின்றன.  அதனால்தான் கலச நீரில் தர்பையையும் மாவிலையையும் நனைத்துத் தெளிப்பது வழக்கம்.  இதன் பிறகு மனோமணி யைப் போற்றி தேங்காயைச் சாத்த வேண்டும் என்கிறார் சுப்பிரமணியர்.  மனோன்மணி சதாசிவனின் சக்தி.  சதாசிவ தத்துவத்திலிருந்துதான், ஆகாய தத்துவத்திலிருந்துதான் பிற பூத தத்துவங்கள் பிறக்கின்றன. (சக்கரங்கள் இந்த தத்துவங்களுடன் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளன என்பதை நாம் முன்னமே பார்த்தோம்.  உதாரணம்- மூலாதாரம்- பூமி தத்துவம், சனி கிரகம்).  

இவ்வாறு நவக்கிரக சித்தி என்பது ஐம்பூதம் மற்றும் மன சித்தி.

Friday 24 October 2014

58. Steps to light the flame that never diminishes

Verse 58
போற்றுகின்ற போதிலேதான் மைந்தாநீயும்
பூரணத்திற் பிரமமென்ற ரூபங் கொண்டு
ஏற்றுகின்ற போதெல்லாமவுன விஞ்சை
எண்ணியே மனதொன்றாய் இருத்திக் கொண்டு
மாற்றுகின்ற போதே முன்னிலையைப் பார்த்து
வாடாத தீபமதைத் தூண்டி ஏற்றி
காற்றினிலும் அதிகமடா மூன்றெழுத்தைக்
கண்டு கொள்ளக் காட்சியடா கண்டு கொள்ளே

Translation:
While praising, Son,
Adorning the form of brahmam in the fully complete
At all times while praising it, the knowledge of ma vu
Thinking about it and holding the mind in focus
While changing, seeing in front
Tease and light the lamp that never dwindles
In the wind that is in excess, the three letters
See the scene that should be seen.

Commentary:
Subramanyar mentions an important feature of kundalini yoga here.  While raising the fire of kundalini and consciousness one should visualize one’s soul as the Brahmam.  With this attitude one should raise the kundalini.  Mind must focus on this thought and the light of consciousness should be lit in the midst of the wind, the prana.  The three letters are a u ma, the reverse of it as Subramanyar says ma vu vinchai or supreme knowledge.  Experiencing the three letters is experiencing the creation and dissolution of the manifested universe represented by the three letters a u and ma.


இப்பாடலில் சுப்பிரமணியர் குண்டலினி யோகத்தின் ஒறு முக்கிய காட்சிப்பாட்டைக் குறிப்பிடுகிறார்.  பிராணனின் உதவியுடன் குண்டலினி சக்தியை மேலே ஏற்றும்போது ஒரு யோகி தனது ஆத்மா பிரம்மம் என்ற உணர்வுடன் ஏற்ற வேண்டும்.  பூரணம் என்பது ஆத்மாவைக் குறிக்கும்.  மனம் இந்த எண்ணத்தில் குவிந்திருக்கவேண்டும்.  இவ்வாறு அலையும் காற்றில், பிராணனில், வாடாத தீபமதை, பரவுணர்வு என்ற ஜோதியை ஏற்ற வேண்டும்.  அதை மீண்டும் ஏற்ற வேண்டாம் தூண்டிவிட்டால் போதும் ஏனெனில் அது மிகக் குறைந்த அளவில் எரிந்துகொண்டுதான் இருக்கிறது.  இந்த முறையில் ம வு விஞ்சை அல்லது மிக உயர்ந்த அறிவைப் பெற வேண்டும், மூன்றெழுத்தைக் காணவேண்டும் என்கிறார் சுப்பிரமணியர்.  அதாவது உலகம் விரிந்து லயிப்பதைக் காணவேண்டும் உலகின் சூட்சுமத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்.

Thursday 23 October 2014

57. Offerings for Devi- coconut as bali.

Verse 57
வையப்பா சாதமொடு மதுமாம்சங்கள்
மைந்தனே பாலொடு சர்க்கரையுந் தேனும்
செய்யப்பா தேங்காயும் பலிதானிட்டு
தித்திக்குங் கனிவகைகள் எல்லாம் வைத்து
பொய்யப்பா சொல்லாமல் விஞ்சை ஓதிப்
புத்திரனே சவ்வாதும் புனுகுஞ் சாத்து
மெய்யப்பா வாடை பரிமளங்கள் எல்லாம்
வேண்டியே தேவிக்கு வைத்துப் போற்றே

Translation:
Place son, along with cooked rice, alcohol and meat
Son, along with milk, sugar and honey
Perform bali with the coconut
Place all varieties of sweet fruits
Without lying, recite the verses
Son, adorn the fragrances of javvaadhu and punuku
True son, place all the fragrances
For Devi and praise her.

Commentary:
The first line surprises us when we read that Subramanyar tells Agatthiyar to place meat and alcohol as offerings.  Meivazhi Goundar says that it would not be the conventional meat and alcohol as Subramanyar reprimands those who kill lives in later verses.  He splits the word maamsam as maa+a+sam which means great water and bliss or poornam.  One wonders whether alcohol and meat were allowed as part of worship ritual or whether Subramanyar refers to something else through these words.  He says that sugar, milk and honey should be offered along with sweet fruits.  Coconut should be broken as a bali.  Coconut signifies our skull.  Breaking the coconut means releasing the chithakasam within the body to merge with the perandam outside.  The water and space within the coconut merge with the outer space when it is broken.  Specific prayers should be utter truthfully and fragrances such as Javvaadu and punuku should be adorned.  Punuku is the fragrance collect from civet cat and Javvaadu is also from an animal belonging to the cat family. 

இப்பாடலின் முதல் வரியில் சுப்பிரமணியர் தேவிக்குப் படைக்கப்பட வேண்டிய பொருட்களைக் கூறும்போது மது மாம்சம் என்று கூறியிருப்பது புதிராக உள்ளது.  பின்னே வரும் பாடல்களில் உயிர்களைக் கொல்லாமையைப் பற்றியும் புல்லால் உண்ணாமையைப் பற்றியும்  சுப்பிரமணியர் பேசியிருப்பதால் இதன் பொருள் என்ன என்பது புரியவில்லை.  உரையாசிரியர் மெய்வழிக் கவுண்டர் மாம்சம் என்பதை மா+அம்+சம் என்று பிரித்து மகா நீர் மற்றும் காற்று என்று பொருள் கூறுகிறார்.  இதனை அடுத்து சுப்பிரமணியர், தேவிக்கு சர்க்கரை, தேன், பால் முதலியவற்றையும் இனிய பழங்களையும் படிக்கவேண்டும் என்று கூறுகிறார்.  தேங்காயை பலியாகக் கொடுக்கவேண்டும் என்று அவர் கூறியிருப்பது மற்றொரு விஷயத்தை நமது கவனத்துக்குக் கொண்டு வருகிறது.  இறைவனுக்குத் தேங்காய் உடைப்பது என்பது ஒரு முக்கியமான சடங்காகும்.  தேங்காய் என்பது நமது கபாலத்தைக் குறிக்கிறது.  அதனுள் இருக்கும் இடம் சிதாகாசம் அல்லது சிற்றம்பலம் எனப்படுகிறது.  அதனை உடைப்பது என்பது சித்தாகாசத்தை பேராகாசம் அல்லது பேரண்டத்துடன் சேர்ப்பதைக் குறிக்கிறது.  இவ்வாறு தேங்காயை உடைப்பது என்பது நமது கபாலத்தை உடைப்பதற்கு ஒக்கும்.  அதனால்தான் சுப்பிரமணியர் அதைப் பலி என்று கூறுகிறார்.  அதனை அடுத்து தேவிக்கான மந்திரங்களையும் ஓதி புனுகு சவ்வாது என்பது போன்ற நறுமணப் பொருட்களைப் படைக்கவேண்டும் என்று சுப்பிரமணியர் கூறுகிறார்

Wednesday 22 October 2014

56. Puja, step 3

Verse 56
நில்லடா ஒரு மனதாய் நிலையில் நின்று
நிறுத்தியே திருவாத்தி மலர்தான் சாத்தி
அல்லடா சூலமுஞ்சக் கரங்கள் சாத்தி
அப்பனே நெய் விளக்குத் தீபம் வைத்துச்
சொல்லடா பூரணத்தை நினைத்து நீயுஞ்
சூட்டுமிரு பக்கங்கற்பூரமேத்தி
வில்லடா தேவியுட குறியைப் பார்த்து
வேண்டியதோர் பலகாரம் வடையும் வையே

Translation:
Stand with mental focus
In a particular state, adorning “aatthi” flower
Adorning the trident and cakra
Son, lighting the lamp of clarified butter
Say son, thinking about the fully complete
You adorn it on both sides, lighting the camphor
The bow, the sign of Devi
Offer eatables and vada.

Commentary:
In this verse Subramanyar talks about next steps in the puja.  Tiruvaatthi is the flower of Bauhinia tomentosa, a flower sacred to Siva.  Avvaiyar composed the Aathi choodi which means the one who adorns the aathi flowers- Siva.  The trident and the cakra should be added followed by lighting the lamp of clarified butter.  The camphor should be lighted after placing two lamps on either side.  Food offering should be made with vada and other eatables.


பூஜையில் அடுத்த கட்டத்தை இப்பாடலில் விளக்குகிறார் சுப்பிரமணியர்.  கும்பத்தில் ஆவாஹனம் செய்த தெய்வங்களுக்கு ஆத்திப் பூ சூட்டவேண்டும் என்கிறார்.  ஆத்திப் பூ சிவனுக்கு விசேஷமான மலர். ஆத்திச் சூடி என்ற அவ்வையாரின் பாடல்கூட சிவனின் பெயரில் இயற்றப்பட்டது.  பூவை வைத்த பிறகும் சூலம் சக்கரம் ஆகியவற்றை இட்டு நெய் தீபம் இருபுறமும் ஏற்றவேண்டும் என்கிறார் சுப்பிரமணியர்.  அதன் பிறகு கற்பூர தீபம் காட்டி பலகாரங்களையும் வடையையும் படைக்க வேண்டும் என்கிறார்.

55. Puja for Kapali, Vatugan, Isvari with kumbham

Verse 55
பண்ணுவது பூசியுந்தான் செய்யும்போது
பாலகனே கும்பமெல்லாம் வஸ்திரங்கட்டி
கண்ணுமனக் கண்ணறிந்து விண்ணைப் பார்த்துக்
கபாலிக்கும் வடுகனுக்கும் வஸ்த்ரங் கட்டி
எண்ணம்அயராமல் நீ புஷ்பம் வாங்கி
ஈஸ்வரியும் வடுகனையும் ரூபமாகித்
தண்ணுட்டா னிருந்து பாத்திரங் களைந்துஞ்
சத்தியமாய்ப் பானமிட்டுச் சரியாய் நில்லே

Translation:
While performing the worship ritual
Son adorn all the sacred pots with cloth
Knowing the mind’s eye, seeing the sky
Adorn cloth for Kapali and Vadugan
Without fatigue in your thoughts, you buy flowers
Invoking Isvari and Vadugan in a form
Keeping the focus within and the five vessels
Placing the water, remain properly.

Commentary:
After describing the yantra and the procedure for the kumbha puja Subramanyar is describing how to perform this puja.  After placing the kumbha with the bhija mantra they should be covered with appropriate cloth or vastram for Kapali, Vadugan or Bhairava.  They should be adorned with flowers and the gods should be invoked in the water placed in each kumbha.  The five vessels are the pancha patra used in puja where water is kept for performing rituals such as water offering, cleaning god’s feet, mouth etc.

It is interesting that Subramanyar does not say Sivan but says Kapali.  The term kapali when split as Ka+paali means one who protects the ka or space.  He is the Lord of the chith akasam, chith ambalam and perambalam, microcosm and macrocosm respectively.


முந்தைய பாடல்களில் யந்திரத்தையும் கும்பத்தையும் விளக்கிவிட்டு எவ்வாறு பூஜை செய்ய வேண்டும் என்று இப்பாடலில் சுப்பிரமணியர் விளக்கத் தொடங்குகிறார்.  அரிசியைப் பரப்பி பீஜ மந்திரங்களை இட்டு கும்பத்தை வைத்த பிறகு அவற்றிற்கு வஸ்த்திரங்கள் இடவேண்டும் என்கிறார் அவர்.  கபாலி, வடுகன், ஈஸ்வரி ஆகியோருக்கு வஸ்த்திரங்களை அளித்து கும்பத்தில் ஆவாஹனம் செய்ய வேண்டும்.  இது மானத்த பூஜையாகையால் மனக்கண்ணை அறிந்து இதைச்செய்ய வேண்டும் என்கிறார் அவர்.  இதனை அடுத்து பஞ்சபாத்திரங்கள் எனப்படும் ஐந்து பாத்திரங்களில் நீரை வைக்க வேண்டும்.  இது அர்க்கியம் பாத்யம் எனப்படும் இறைவனின் கையை அலம்புவது கால் கழுவுவது என்பது போன்ற சடங்குகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. 
இப்பாடலில் சுப்பிரமணியர் சிவன் என்று கூறாமல் கபாலி என்கிறார்.  இந்த சொல் க+பாலி என்று பிரிந்து க என்னும் ஆகாய தத்துவத்தை பாலிப்பவர் பாதுகாப்பவர் என்று பொருள் படும்.  இந்த ஆகாசம் சித்தாகாசம் அல்லது சிதம்பரம் மற்றும் பேரம்பலம் எனப்படும் உடலினுள் இருக்கும் ஆகாயம் பிரபஞ்ச வெளி என்ற இரண்டுமாகும். 

Sunday 19 October 2014

54. Bhairava, Devi, pancha karatha pooja

Verse 54
பாரப்பா வடுகனுக்குக் கும்பம் வைத்துப்
பாலகனே நசிஎன்றே அடியிற்சாத்தி
ஆரப்பா தேவியுட கும்பத்துக்கு
அப்பனே மசிஎன்றே அடியிற் சாத்தி
நேரப்பா பஞ்ச கர்த்தாள் ஐந்துபேரை
நீ மகனே மானதமாய் நினைத்துப் போற்றி
ஏரப்பா பூரணமே தெய்வமென்று
இரவி மதி தனையடுத்துப் பூசை பண்ணே.

Translation:
See son, place a sacred pot for Vaduga
Little boy, you place “nasi” at the bottom
For Devi’s sacred pot
Son, place “masi” at the bottom
Son, the five “doers” (pancha kartha)
You think about them in the mind and praise them
Climb son, with the idea that pooranam is God
Worship the sun and the moon next.

Commentary:
This verse talks about Bhairava and Devi worship.  The bheeja akshara are nasi and masi for them.  The pancha kartha or five doers are Sadasiva, Maheswara, Rudra, Vishnu and Brahma.  They are responsible for the five actions of the Divine- bestowing grace, obscuration, dissolution, sustenance and creation respectively.
Subramanyar tells Agatthiyar to contemplate on them and raise the kundalini with the clear idea that the poornam (soul) is the Deity or Supreme Reality.  He says that the sun and the moon should be worshipped next.


இப்பாடலில் சுப்பிரமணியர் பைரவர் மற்றும் தேவி பூஜையை விளக்குகிறார்.  இருவருக்கும் கும்பம் வைத்து அடியில் முறையே நசி என்றும் மசி என்றும் சாத்த வேண்டும் என்கிறார் சுப்பிரமணியர்.  அதன் பிறகு பஞ்ச கர்த்தாள் எனப்படும் சதாசிவன், மகேஸ்வரன், ருத்திரன், விஷ்ணு, பிரம்மா என்ற ஐவரையும் மனதில் நிலைத்துப் பூசிக்கவேண்டும் என்கிறார் அவர்.  இவர்கள் அனைவரும் முறையே அருளால், மறைத்தல், அழித்தல், காத்தல் படைத்தல் என்ற ஐந்து தொழில்களைச் செய்கின்றனர்.  இவர்களை மானதமாகப் பூசித்து பூரணம் எனப்படும் ஜீவாத்மா தெய்வம் எனப்படும் பரமாத்மா என்ற உணர்வுடன் விழிப்புணர்வை மேலே ஏற்ற வேண்டும் என்று கூறும் சுப்பிரமணியர் இதனை அடுத்து ரவி மதி எனப்படும் சூரிய சந்திர வழிப்பாட்டை விளக்கப் போகிறேன் என்று கூறுகிறார்.   

53. Manasa puja

Verse 53
தானவனா யாவதற்கு அறியுமிட்டுத்
தப்பாமற் சித்திரியும் ஸ்ரீ யுஞ் சேர்த்து
வானவர்கோன் போற்றி செய்ய விஞ்சைவாலை
மைந்தனே மசிஎன்றும் நசிஎன்றோதி
மாநதமாம் பூசைசெய்து மைந்தா மைந்தா
மறக்காதே இருவளையம் வாசலிட்டுக்
கோனருளால் வாலையுட பீஜமிட்டுக்
கும்மென்றே யோதியுந்தான் குறியைப் பாரே

Translation:
Drawing hreem for Self to become him
Adding the image and shreem without failing
With the king of the celestials praising, the vaalai of kalaa
Son, chanting masi and nasi
Performing the mental worship, son, son,
Adding the two circle entrances without forgetting
Adding the bheejam of vaalai by the grace of the king
See the sign reciting gum.

Commentary:
The bheejakshara hreem transforms the limited self into universal self.  Chittiri means design, to carve.  It may mean the designs that are added along with the bheeja akshara in the yantra. Shreem is also included in the yantra.  Agatthiyar has mentioned in Saumya Sagaram that the letter for vaalai is si.  Subramanyar says that along with these the letters masi and nasi should be recited.  Thus, this comes to be si ma na, the reverse of na ma si.  This is mental worship. Gum is part of many mantra. Gum and phat are found in several prayoga mantra.


ஹ்ரீம் என்னும் பீஜாக்ஷரம் ஜீவாத்மாவை பரமாத்மா நிலைக்கு உயர்த்துவது.  சித்திரி என்பது படம்,ஓவியம் என்று பொருள்படும்.  யந்திரத்தில் பீஜ அக்ஷரங்களுடன் காணப்படும் குறிகளாக இது இருக்கலாம்.  ஸ்ரீம் என்னும் எழுத்தும் இதனுடன் சேர்க்கப்படுகிறது.  அகத்தியர் சௌமிய சாகரத்தில் வாலையின் எழுத்து சி என்று குறிப்பிட்டுள்ளார்.  இருவளையங்களுடன் மசி மற்றும் நசி என்ற எழுத்துக்களையும் உச்சரிக்கவேண்டும் என்று சுப்பிரமணியர் கூறுகிறார்.  இவ்வாறு இந்த மானச பூஜையில் சிமந என்று நமசி என்னும் எழுத்துக்கள் அவரோகணக் கிரமத்தில் உச்சரிக்கப்படுகின்றன. 

Friday 17 October 2014

52. More details about the yantra

Verse 52
காட்டிய ஓங்காரஞ் சுத்திலிட்டுக்
காரணியே பூரணியே கபாலி என்று
சுட்டிகளே வெறும் பேச்சுப் பேசிடாமல்
சூட்டடா பச்சரிசியாலே பீடம்
மட்டிகளே வடுகனையுங் கூட வைத்து
மாட்டு மறு கோணச் சக்கரந்தான் கீறி
முட்டியே திரியாமல் அஞ்செழுத்தை
மூட்டும் ஓங்கார நடுவரையில் தானே

Translation:
Placing the omkara in the periphery
As the lady, the cause, the fully complete one, kapaali
Made a dais with rice
People, place Vatuga (Bhairava) along with it
Draw cakra with single angles that holds it
Place the five letters
In the middle of omkara that kindles.

Commentary:
Subramanyar is continuing to describe the Shakti yantra in this verse.  After adding the Shakti bheeja mantra of aim kleem saum, shreem and hreem a dais or peeta is drawn with “paccharisi” or rice. Shakti and Siva are invoked in the yantra along with Vatuga or Bhairava , the protector.  The angles are drawn as a six pointed figure.  The omkara is drawn in the periphery, the five letters in middle raised area which has omkara.


இப்பாடலில் மேற்கூறிய  யந்திரத்தை மேலும் விளக்குகிறார்.  சக்தி பீஜங்களான ஐம் கிலீம் சௌம், ஸ்ரீம் ஹ்ரீம் என்ற எழுத்துக்களை இட்டு இரு வளையங்களையும் சேர்த்த பிறகு ஓம்காரத்தை சுற்றி எழுதவேண்டும் என்றும் காரணி, பூரணி கபாலியை நிலைத்து பச்சரிசியால் ஒரு மேடையை அமைத்து அங்கு வடுகன் எனப்படும் பைரவரையும் ஆவாஹனம் செய்து நடுவரையில் ஒம்காரத்தையும் ஐந்தெழுத்துக்களையும் இடவேண்டும் என்கிறார். 

Thursday 16 October 2014

51. Sakthi Yantra, Chitambaram

Verse 51
போற்றுகிறேன் பஞ்ச சத்தி மூல மந்த்ரம்
போடடா சக்கரத்தில் வரைந்து கட்டி
ஏற்றுகிறேன் ஆறு வரை வீடு மைந்தா
என் வாக்காற் சொல்லவுந்தான் முடியாதையா
சாற்றுகிறேன் சிதம்பரமென்றிதற்குப் பேரு
சத்தியமாய்ச் சொல்லுகிறேன் மைந்தா மைந்தா
ஏற்றுகிறேன் ஆறுவரை வீட்டுக்கெல்லாம்
இருவளையம் வாசலிலே இட்டுக் கட்டே

Translation:I
I am praising the pancha sakthi mula mantra
Draw it in the cakra and tying it
Son, I am raising it to the six peak houses
I cannot say it in my own words
Chitambaram is the name for it,
I am saying the truth, Son, Son
I am raising it to the all the six peak loci
Drawing the two circle at the entrance, tie it.

Commentary:
Subramanyar is talking about a yantra here.  It contains the five letters, aim, kleem, saum, sreem, hreem and the omkara.  Through visualization consciousness is raised through the six peak houses or the cakra, the pinnacles of various principles.  Subramanyar says that the procedure and the experience cannot be described in words.  Thus, a guru is essential in this esoteric kundalini yoga practice.  He says that Chitambaram is the name.  The cakra are loci of consciousness.  Thus, Chitambaram may not be one spot in the body but these loci of consciousness- chith+ambaram.  He concludes the verse by saying that two circles should be drawn at the entrance.


சுப்பிரமணியர் ஒரு யந்திரத்தைப் பற்றி இப்பாடலில் பேசுகிறார்.  முன் பாடலில் கூறிய பஞ்ச சக்தி மூல எழுத்துக்களான ஐம் கிலீம் சௌம் ஸ்ரீம் ஹ்ரீம் என்ற ஐந்து எழுத்துக்களை அதில் கீறி விழிப்புணர்வை ஆறு வரை வீடுகள் எனப்படும் சக்கரங்களின் ஊடே ஏற்றவேண்டும் என்கிறார் அவர்.  இந்த வழியையும் அனுபவத்தையும் வார்த்தையால் கூறமுடியாது என்று அவர் கூறுவது  குண்டலினி யோகம் தகுந்த குருவின் மேற்பார்வையில்தான் மேற்கொள்ளப்பட வேண்டும்.  வெறும் புத்தக அறிவுடன் இதை முயலக் கூடாது என்பதைக் காட்டுகிறது.  இதற்குப் பெயர் சிதம்பரம் என்று சுப்பிரமணியர் கூறுகிறார்.  பொதுவாக சஹஸ்ராரத்தை சிதம்பரம் என்று அழைப்பது வழக்கம்.  சித் அம்பரம் அல்லது விழிப்புணர்வின் அரங்கம் என்று பொருள் படும் இந்தச் சொல் எல்லா சகரங்களையும் குறிப்பதாகவும் கொள்ளலாம் ஏனெனில் ஒவ்வௌர் சக்கரமும் ஒரு குறிப்பிட்ட விழிப்புணர்வு நிலையின் உச்சமாகும்.  அதைத்தான் சுப்பிரமணியர் “வரை” அல்லது முகடு என்று குறிப்பிடுகிறார்.  இரு வளையங்களை வாசலில் இட்டு இந்த சக்கரத்தைக் கட்ட வேண்டும் என்று கூறி சுப்பிரமணியர் இப்பாடலை முடிக்கிறார்.