Wednesday 19 November 2014

78. Creation occurs while remaining in the state of poornam

Verse 78
பாரப்பா நகாரமென்ற விஞ்சை தன்னைப்
பார்த்துவுன்றன் நிலையறிந்து பத்தியில் நின்று
ஆரப்பா சுடுகாடு பாழ்வீட்டுக்குள்
அமர்ந்தொடுங்கிப் பூரணத்தி லறிவில் நின்று
நேரப்பா நிஷ்டையோடு சமாதி பார்த்து
நின்னிலையும் நின்னுயிரும் நீதான் கண்டு
ஏரப்பா மணிவிளக்கைத் தூண்டித் தூண்டி
எவ்வுயிருந் தான் படைத்து மிருமென்றாளே

Translation:
She said, “See the wisdom, nakaara
Seeing it, knowing your state, remaining in devotion
Soothe, within the house of cremation, the void (paazh)
Remaining there abiding in the fully complete consciousness,
Experiencing the austerities along with Samadhi
You, seeing your state and your soul
Climb, increasing the flame of the lamp
Creating all the life forms you remain.”

Commentary:
Sakthi is instructing Brahma that he should understand the significance of the nakaara, the wisdom it represents.  He should know about his self and remain with devotion.  Abiding in the consciousness of the poornam, experiencing the austerities and Samadhi he should remain creating all the life forms while increasing the flame of consciousness. 
Among the five letters of namacivaya, nakaara represents the earth element.  The muladhara is the site of the nakaara.  “sudukaadu” means the forest that burns.  It also means the cremation ground where the body is burned.  The fire of kundalini remains in the muladhara and burns the seed of birth.  It is the site where the effects of maya are burned.  Paazh or void is an interesting concept.  It is not a space that is empty but one that contains everything. Tirumular talks about mayappaazh, bodhappaazh and upasaanthappaazh.  These are spaces of limitation created by maya. All these originate from muladhara where Brahma resides with Kalai vaani. 

From Sakthi’s instructions we understand how creation occurs in the world.  The Divine manifests as Brahma, the one who has the knowledge about the rules, the Vedas, the esoteric wisdom represented by the letter nakaara.  It creates the world while remaining in the state of supreme consciousness, by repeatedly invoking this state.  It remains in the muladhara the cremation ground and performs creation.  It performs the required austerities and holds itself in the state of Samadhi when and does not itself slip into the world of maya.

இப்பாடலில் சக்தி பிரம்மனுக்கு எவ்வாறு படைப்பை நிகழ்த்த வேண்டும் என்று கூறுகிறாள்.  பிரம்மன் முதலில் நகாரத்தால் காட்டப்படும் ஞானத்தை உணர வேண்டும்.  தன்னைப் பற்றி அறிந்து ஞானத்தில் திளைக்கவேண்டும்.  இந்த ஞானநிலையை, பூரண விழிப்புணர்வு நிலையை, தவத்தின் மூலமும் சமாதியின் மூலமும் பெறவேண்டு.  இந்த நிலையில் அறிவு என்ற விளக்கை அணையாமல் தூண்டிவிட்டபடி அவர் உயிர்களைப் படிக்கவேண்டும் என்று சக்தி கூறுகிறாள்.   
நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தில் நகாரம் பூமி தத்துவத்தைக் குறிக்கும்.  மூலாதாரமே நகாரத்தின் பீடம்.  சக்தி அதை சுடுகாடு, பாழ் என்கிறாள்.  சுடுகாடு என்பது பாபத்தை, மேலும் பிறவிகள் ஏற்படுவதற்குக் காரணமான விதத்தைச் சுடுவதைக் குறிக்கும்.  பாழ் என்பது ஒன்றும் இல்லாத பாழடைந்த நிலையல்ல.  அது அனைத்தையும் உள்ளடக்கிய சூனியமாகும்.  மாயையால் தோற்றுவிக்கப்படும் பாழ் மூன்று வகைப்படும் என்று திருமூலர் கூறுகிறார்.  அவை மாயப்பாழ், போதப்பாழ், உபசாந்தப் பாழ் என்பவை.  இந்த பாழ் ஜீவனைத் தான் அளவுக்குட்பட்டவன் என்று எண்ணச் செய்பவை.  இந்த பாழ் தோன்றும் இடம், மாயை செயல் புரியும் இடம் மூலாதாரம்.  இந்த மூலாதாரத்தில் நின்று அறிவு என்னும் விளக்கைத் தூண்டியபடி படைப்பை நிகழ்த்தியபடி இருக்குமாறு சக்தி பிரம்மனுக்குக் கூறுகிறாள். 

இப்பாடலிலிருந்து படைப்பு எவ்வாறு நிகழ்கிறது என்பதைப் புரிந்துகொள்கிறோம்.

இறைவனின் ஒரு வெளிப்பாடான பிரம்மன் தோன்றி தவம் மூலம் சமாதி நிலையில் இருந்த பூரண ஞானத்தைப் பெறுகிறான்.  இந்த நிலையில் தனது எழுத்தான நகாரத்தை மவுனத்துடன் கூட்டி, பராபர நிலையில் இருந்து, தன்னைப் பற்றிய உணர்வுடன் அறிவு என்னும் விளக்கைத் தூண்டித் தூண்டி தன்னை மாயையில் தொலைத்துவிடாமல் உயிர்களைப் படைத்தபடி இருக்கிறான்.  

No comments:

Post a Comment