Sunday 30 November 2014

87. Sadasiva, the expert on Jiva and Siva principles

Verse 87
காணடா சதாசிவமே மகனே என்று
கண்மணியே கருத்தின் நடு உதித்த ஐயா
தானடா லோகாதி லோகமாகத்
தானான யகாரமதை மவுனங் கண்டு
கோனடா குல தெய்வந் தன்னைப் பார்த்துக்
கூறுவான் பராபரனே என்று போற்றி
தேனடா தேனமுதந் தினமும் பாயச்
சீவ நிலை சிவநிலையாய்த் தேரென்றாளே

Translation:
See son, Sadasivame!
Sir, the beloved, the one who emerged from the middle of the attention
Self, son, as the millions of worlds
Seeing the silence of yakaara, the self
The king, the deity of kula, seeing it
He will praise calling it paraaparane!
Honey, son, with the nectar like honey flowing daily
She said become an expert of the status of Jiva and Siva.

Commentary:
Sakthi calls Sadasivam as the lovely one, the son, the one who emerged from the middle of mental focus.  She tells him to become an expert on the Siva state and the Jiva state by adorning the yakaara along with the silence and praising the paraaparam and eulogizing the deity of kula.  
Sadasiva represents the space principle.  He is indicated by the bija, yakaara.  As before he is also a state like Maheswara who is born from paraaparam when the appropriate principle, yakaara here, is adorned along with the silence and praising the paraaparam. Sadasiva is the junction between the state of Jiva and Siva.  His locus, is the neck, the kandam which is the junction point of these two states.


மகனே என்றும் கண்மணியே என்றும் சதாசிவனை அழைக்கும் சக்தி அவர் கருத்தின் நடுவிலிருந்து தோன்றியவரே என்கிறாள்.  அவரை யகாரத்தை மவுனத்தில் பூண்டு, பராபரத்தைப் போற்றி குல தெய்வத்தை வணங்கி ஜீவ நிலையையும் சிவ நிலையையும் அறிந்து தேறுமாறு கூறுகிறாள்.  குல தெய்வம் என்பது பொதுவாக ஒருவரது  குடும்பம் பரம்பரையாக வணங்கி வரும் தெய்வத்தைக் குறிக்கும்.  சித்தர்கள் பரம்பரையில் அது கௌலினி அல்லது குல குண்டலினி எனப்படும் வாலையையும் குறிக்கும்.  வாலையையே இங்கே சக்தி குல தெய்வம் என்று குறிப்பிடுகிறாள்.  சதாசிவ தத்துவம் ஆகாய தத்துவம்.  அதன் பீஜ எழுத்தது யகாரம்.  சதாசிவ தத்துவம் கண்டம் எனப்படும் விசுத்தி சக்கரத்தில் உள்ளது.  இது ஜீவதத்துவமும் சிவ தத்துவமும் சந்திக்கும் இடம்.  அதைத்தான் சிவனின் நீலகண்ட உருவம் காட்டுகிறது.  

Saturday 29 November 2014

86. Emergence of Sadasivan

Verse 86
பாரப்பா மயேஸ்வரத்தின் கூறு சொன்னேன்
பராபரமாஞ் சதாசிவத்தின் கூரைக் கேளு
ஆரப்பா யகாரமென்ற மவுனந்தன்னை
ஆனந்த மான பரா பரத்திற் சேர்ந்து
நேரப்பா நிலையறிந்து மவுனங் கொண்டு
நிற்கையிலே சதாசிவனு முதிக்கலாச்சு
தேரப்பா சதாசிவனும் பரையின் பாதந்
தெண்டனிட்டுப் பணிந்திடவே அழைத்தாள் காணே

Translation:
See Son, I told you about Maheswara’s details
Now hear about the nature of Sadasiva, the paraaparam
The silence of yakaara
Joining with the Paraaparam, the bliss
Knowing about the status, adorning the silence
While remaining so, the Sadasiva emerged
Sadasiva also worshipped the feet of Parai
She called him.  See.

Commentary:
Having concluded his description about Maheswara Subramanyar is starting to talk about the state of Sadasiva.  The silence of yakaara is joined with the Paraaparam, the bliss amd this bring about the emerged of Sadasiva.  Sadasiva then stands worshiping Parai’s sacred feet.  From the above verses we understand that all the states Brahma, Vishnu, Rudra, Maheswara and Sadasiva, emerged when each of the letters of the namacivaya is joined with the bliss of Paraaparam.  Thus, the each principle represented by the letter joins with the bliss of the Divine and emerges as a deity who controls a specific cosmic action.


மகேஸ்வரனைப் பற்றிக் கூறியபிறகு சுப்பிரமணியர் சதாசிவனைப் பற்றிக் கூறத் தொடங்குகிறார்.  சதாசிவனின் பீஜ அட்சரம் யகாரம்.  யகாரம் பராபரத்தின் ஆனந்தத்துடன் சேர்ந்து மவுன நிலையில் இருக்கும்போது சதாசிவன் உதிக்கிறது.  இவ்வாறு உதித்த சதாசிவனை பரை வா என்று அழைக்கிறாள்.

Thursday 27 November 2014

85. Sakthi remains as sankalpa dhaarana

Verse 85
வாவென்றா ளுந்தனுக்கு விஞ்சை தானும்
வகாரமென்ற மவுனத்தை வைத்தாள் ஆத்தாள்
ஆவென்றாள் பூரணத்தை அடுக்கச் சொன்னாள்
அதிலடங்கி வாசிஎன்றே இருக்கச் சொன்னாள்
கூவென்றாள் மனதடங்கி அறிந்து கொண்டாள்
கூறுகின்ற மனக்கண்ணால் ஒளியைப் பார்த்து
தாவென்று தமர்வாசர்க்குள்ளே சென்று
சங்கற்ப தாரணையுமானாள் பாரே

Translation
She said, “come” to you, the wisdom
The mother placed the silence, the vakaara
She said, “aa” and explained about the poornam
She bid to remain abiding in it as vaasi
With the mind coming under control as “koo”
Seeing the luminosity through the mind’s eye that is revealing it
Going within the threshold of the experts
She became the sankalpa dhaarana.
Commentary:
Sakthi bid the consciousness, knowledge to occur saying, “come” and placed the vakaara, the silence to aid this process. “aa” is the long form of akaara, the sakthi form of the letter of siva or the supreme being.  Siddhas talk about kaaranam and pooranam.  Kaaranam is the cause the akaara and pooranam is the active state of the kaaranam the aakaara.  This knowledge occurs when the yogin performs vaasi yogam.  The mind then comes under control.  “koo” as we saw before is the tamil form of “hoo” the letter for bindu, the singularity from which everything emerges.  The luminosity of consciousness should be experienced through the mind’s eye.  Thus, mind is both the impediment as well as the aid.  Hence, Agatthiyar said, “manamadhu semmaiyaanaal mandiram jebikka vendaam” (if the mind is perfected there is no need for reciting any mantra).  Ramana Maharishi says the mind must be used as a stick to stoke the fire of austerities and then it should also be thrown into the fire.  Sakthi remains as the sankalpa dhaarana or intentional contemplation.  By saying that Sakthi goes through process Subramanyar is indicating that all the five forms, Brahma, Vishnu, Rudra, Maheswara and Sadasiva are none other than Sakthi herself.


மகேஸ்வரனை வா என்று அழைத்த சக்தி வகாரம் என்ற மவுனத்தை ஞானம் பெறுவதற்காக வைத்தாள்.  அவள் ஆ என்ற பூரணத்தை அடையுமாறு கூறினாள்.  சித்தர்கள் காரணம் என்றும் பூரணம் என்றும் பரம்பொருளின் இரண்டு நிலைகளைக் குறிக்கின்றனர்.  பூரணம் என்பது சிவ நிலை, காரணம் என்பது சக்தி நிலை, செயல்பாடுடைய நிலை.  உயர் எழுத்துக்களில் அ என்ற குறில் சிவத்தையும் ஆ என்ற நெடில் சக்தியையும் குறிக்கும்.  பூரணத்தை விளக்கிய சக்தி வாசியினால் அதில் அடங்கி இருக்கக் கூறினாள்.  கூ என்பது பிந்துவின் எழுத்து என்று முன்னமே பார்த்தோம்.  பிந்துவிலிருந்துதான் உருவங்கள் தோன்றின.  இதை அறிவது மனதை அடக்கினால்தான் இயலும்.  மனம் என்பது தடையாகவும் உதவியாகவும் செயல்படுகிறது.  அதைக் கொண்டு ஒருவர் உலக வாழ்க்கையில் மூழ்கலாம் அல்லது உயர் நிலையை அடையலாம்.  அதனால்தான் அகத்தியர் மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்கிறார்.  ரமண மகரிஷியும் தவம் என்னும் தீயை எழுப்பும் கோலாக மனதைப் பயன்படுத்திவிட்டு முடிவில் அதையும் அந்தத் தீயில் இடவேண்டும் என்று கூறுகிறார்.  முடிவில் சக்தி தகுதி வாய்ந்தோர் என்னும் வாயிலில் புகுந்து அங்கு சங்கல்ப தாரணையாக நிற்கிறாள் என்கிறார் சுப்பிரமணியர். தாரணை என்பது பிரத்தியாகாரத்தால் உள்ளே இழுக்கப்பட்ட மணத்தை அந்த நிலையில் இருத்துவது.  

Wednesday 26 November 2014

84. Subramanyar talks about Maheswara tattva

Verse 84
பாரடா மயேஸ்பரனும் பரையைப் பார்த்து
பாதமதில் நமஸ்காரம் பண்ணி நிற்க
ஆரடா செகத்திலுள்ள வுயிர்கட்கெல்லாம்
அண்ட பிண்ட சராசரங்கள ளளாவிநின்றும்
தேரடா நடையுடை யுஞ் சீவசெந்து
தெளிந்திருந்து லோகாதி லோகமெல்லாம்
ஏரடா நீயிருந்து வாழுமென்றே
எடுத்துரைத்து மயேஸ்பரனை வாவென்றாளே

Translation:
See son, Mahesvaran, seeing Parai
Standing there worshipping her sacred feet
For all the lives in the world
Pervading the worlds and the universes
You remain as their actions (walking and dressing), as the Jiva
You live so
Saying so, she said, “Come Maheswara”

Commentary:
This verse explains the significance of Maheswaran.  Tamil Siddhas consider the universe and the human body are made in the same way.  While the external world is managed by the Gods, Brahma, Vishnu, Rudra, Maheswara and Sadasiva the human body is also managed by the same deities by remaining in the muladhara, svadhishtana, manipuraka, anahata and vishuddhi cakra.  Here Subramanyar shows us that the Maheswara tattva is the state of the Jiva who remains in the world and performs physical actions such as walking and dressing.  The mind is not involved here, only the external senses are functioning.  Hence, Sakthi is telling to remain as the Jivas with “nadai udai” or the physical actions.


இப்பாடலில் சுப்பிரமணியர் மகேச்வர தத்துவத்தை விளக்குகிறார்.  எவ்வாறு அண்டமான இவ்வுலகம் படைக்கப்பட்டு வழிநடத்தப்படுகிறதோ அதேபோல பிண்டமான நமது உடலும் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன் சதாசிவன் என்ற தத்துவங்களால் வழிநடத்தப்படுகிறது.  இவற்றில் மகேச்வர தத்துவம் இப்பாடலில் விளக்கப்படுகிறது.  மகேஸ்வரன் என்பது வெளிக்கரணங்களைப் பயன்படுத்தி வாழும் மனிதனின் நிலையைக் குறிக்கிறது.  இதனை அடுத்த தத்துவமான சதாசிவ தத்துவத்தில் மனம் பங்கு வகிக்கின்றது.  அதனால்தான் சக்தி மகேஸ்வரனிடம் நடை உடை என்ற புறச் செயல்களைச் செய்யும் ஜீவனாக நீ இருப்பாய் என்று கூறுகிறாள். 

Tuesday 25 November 2014

83. Vakaara Deeksha and Maheswara- Paramasiva asks Subramanyar to explain this to him

Verse 83
கூறியதோர் மயேஸ்பரனுஞ் சதாசிவனுங்
குணமாக வந்த வகை கூறுமென்றே
மாறியே பரம சிவன் என்னைக் கேட்க
வழுத்தினேன் பராபரையாள் பதத்தில் நின்று
தேறியே வகாரமென்ற மவுனந்தன்னைச்
சென்றெழுந்து பூரணத்திற் ஒளிவாய் வைத்து
ஏறியே லாடத்தில் அவள்தான் பார்த்தே
என் மகனே மயேஸ்பரா வென்றாள் பாரே

Translation:
The parts, Maheswara and Sadashiva,
Please tell how they occure
With Paramasiva asking me so,
I uttered remaining in the locus of Paraaparai
The silence of vakaara
Keeping it hidden/in the mouth of the pooranam
Climbing to the lalaata.  She seeing this,
She said, “Maheswara, My son.”

Commentary:
Subramanyar tells Agatthiyar that Paramasiva asked him to explain about Maheswara and Sadasiva states.  Subramanyar tells him that he remaining in the state of Paraaparai, the supreme sakthi while holding the silence of vakaara.  Consciousness was made to rise up to the lalaata cakra in the forehead.  Seeing this, Sakthi calls out,“My son! Maheswara!”
Agatthiyar has described different types of deekshai in his saumya sagaram.  The akaara deeksha is the siva deeksha, ukaara deeksha is sakthi deeksha, makaara deeksha is vaalai deekshai, sikaara deeksha is for the state of pooranam or the state where the kaya siddhi has been attained, vakaara deeksha is controlling the mind through vaasiThus, Maheswara emerges when the mind is brought under control through regulation of breath.  Gorakar in his vakaara sutram 100 says that it is the process of stopping the breath over the cakra and tying it like a crown.  The puri ashtakam or the eight senses, the five senses and the three modifications of mind are brought under control by this method. 

இதுவரை பிரம்மா விஷ்ணு சிவனைப் பற்றிக் கூறிய பிறகு தனக்கு மகேஸ்வரன் சதாசிவன் ஆகியோரைப் பற்றிக் கூறுமாறு பரமசிவன் சுப்பிரமணியரைக் கேட்கிறார்.  அதற்கு, தான் பராபரை பதத்தில் இருந்து, வகார மவுனத்தைக் கொண்டு விழிப்புணர்வை லலாட சக்கரத்தில் ஏற்றி இருந்ததாகவும் அப்போது வெளிப்பட்ட மகேஸ்வரனை பராசக்தி, “மகனே” என்று விளித்து அழைத்ததாகவும் சுப்பிரமணியர் கூறுகிறார்.


வகாரம் என்றால் என்ன என்று அகத்தியர் தனது சௌமிய சாகரத்தில் கூறியுள்ளதைப் பார்ப்போம்.  அகாரதீட்சை என்றால் சிவ தீட்சை, உகார தீட்சை சக்தி தீட்சை, மகார தீட்சை வாலை தீட்சை, சிகார தீட்சை என்பது பூரணம் எனப்படும் காயசித்தி பெற்ற நிலைக்கான தீட்சை, வகார தீட்சை என்பது மனத்தை வாசியினால் கட்டுவது என்கிறார் அவர். இவ்வாறு மகேஸ்வரன் என்பது வாசியினால் கட்டுப்படுத்தப்பட்ட மனதின் நிலை என்பது புரிகிறது.  கோரக்கர் தனது வகார தீட்சை 100 என்ற நூலில் வகார தீட்சை என்பது மனதை சக்கரங்களில் நிறுத்தி மகுடம் போலக் கட்டுவது என்கிறார்.  இதனால் புரியஷ்டகம் எனப்படும் ஐம்புலன்களும் மனத்தின் மூன்று மாறுபாடுகளும் கட்டுக்குள் கொண்டுவரப்படுகின்றன.

Monday 24 November 2014

82. Subramanyar is Kumaraguruparan, Haran, Sivan

Verse 82
நாட்டியே பரமசிவன் தன்னைப் பார்த்து
நானுரைத்தேன் பூரணத்தின் நிலமைதன்னைக்
கூட்டியே பரமசிவன் என்னைப் பார்த்து
குருவென்றுஞ் சிவனென்றுங் குறித்தார் மைந்தா
ஆட்டியே பூரணத்தில் அடங்கி வாழ்ந்தேன்
அரனென்றுஞ் சிவனென்று மருளச் செய்தேன்
கூட்டியே எனை எடுத்து முகந்து கொண்டு
குமரகுரு பரனென்று கூறினாரே

Translation:
Seeing Paramasiva after establishing so
I spoke about the status of the fully complete
Seeing me, Paramasiva
Called me as Guru and Siva, my son!
Placing it in the poornam, I lived abiding in it
I made it grace as Hara and Siva
Collecting me and cherishing me
He said, “Kumaragur para”.

Commentary:
Subramanyar is talking about himself and about getting the name Kumara Guru para”.  We already saw in verse 34 about this name.  Here Subramanyar is telling us that it was Paramasiva who gave him this name.  This verse is interesting in that Subramanayar is telling us that he blessed as Hara and Siva.  The action of Hara and Siva are performed by remaining in the state of poornam.  We already saw the words of Sakthi when she tells Brahma, Rudra and Vishnu to perform their actions while remaining in the state of poornam.   Here Subramanyar tells Agatthiyar that he established himself in the state of poornam and functioned as Hara and Siva, the one who cuts away sins and further births and Siva, one who is auspiciousness, the agni and vayu, the underlying principles of vaasi yogam.


இப்பாடலில் சுப்பிரமணியர் தான் குருபரன் என்ற பெயரைப் பெற்றதைப் பற்றிக் கூறுகிறார்.  நாம் முன்பே பாடல் 34ல் இந்தப் பெயரின் விளக்கத்தைப் பார்த்தோம்.  இப்பாடலில் சுப்பிரமணியர் தனக்கு இப்பெயரைப் பரமசிவன் அளித்தார் என்று கூறுகிறார்.  மேலும் அவர் தன்னை அரன் என்றும் சிவன் என்றும் அழைத்ததாகக் கூறுகிறார்.   முந்தைய பாடல்களில் எவ்வாறு சக்தி பிரமன், ருத்திரன் மற்றும் மாலுக்கு அவர்கள் தத்தம் செயலை பூரணத்தில் நின்று நிகழ்த்தவேண்டும் என்று கூறியதைப் பார்த்தோம்.  இப்பாடலில் சுப்பிரமணியர் தானும் பூரணத்தில் நிலைத்து நின்று அரனது செயலான பாபங்களையும் இனிவரும் பிறவிகளையும் அறுத்து சிவனாக எல்லா மங்களங்களையும் அருளுவதாக, வாசி யோகத்தின் அடிப்படையானஅக்னி வாயுவாக இருப்பதாகக் கூறுகிறார். 

Sunday 23 November 2014

81. Kumari karpam

Verse 81
பாரென்றே இந்த முறை சொன்ன பேச்சு
பழுதில்லை பழுதில்லை மூன்றெழுத்தை
ஆரென்று கேட்டாலுஞ் சொல்லிடாதே
அயன் படைப்பு வித்தையெல்லா மிதுதான் மைந்தா
கூரென்றுங் கூடழிந்து போய்விடாது
குமரி கற்ப மென்று சொல்லி இதற்குப் பேராம்
நாரென்று பூவாலே வாசமாச்சு
நகாரத்தின் மகிமையெல்லாம் நாட்டினேனே

Translation:
This was what I said to see
Faultless, faultless, the three letters
Do not reveal it if anyone asks
All the magic of Brahma’s creation is only his, son
The enclosure, the section, will not get destroyed
Its name is kumara karpam
The thread became fragrant due to the flower
I established all the greatness of the nakaara

Commentary:
Subramanyar is repeating to Agatthiyar that he has told about the greatness of nakaara.  The three letters mentioned here may be a, u and ma, or aim, kleem and saum, or na ma si.  He instructs Agatthiyar to not reveal it to all and sundry and that this is the great magic of Brahma’s act of creation.  This magic holds the body together and prevents it from getting destroyed.  He says that this is also called the kumari karpam. Kumari is an interesting term. When it is split as ku+mari it means that which destroys ku or the darkness of ignorance.  These three letters destroy the ignorance of limitation.  Like the thread that holds the flower together also becomes fragrant, that which was created also became great due to its association with the greatness of the nakaara.


நகாரத்தின் மேன்மையைத் தான் விளக்கியுள்ள தாகக் கூறும் சுப்பிரமணியர் மூன்றெழுத்தை ஒருவருக்கும் கூறவேண்டாம் என்று வலியுறுத்துகிறார்.  மூன்றெழுத்து என்பது அ, உ, ம அல்லது, ஐம் க்லீம் சௌம் அல்லது ந ம சி என்பதாக இருக்கலாம்.  இந்த மூன்றெழுத்தே பிரம்மனின் படைப்பு என்னும் வித்தை என்றும் இவையே உடல் என்னும் பகுதியை கூரை அழியாமல் காக்கின்றன என்றும் கூறுகிறார் சுப்பிரமணியர்.  இதற்கு குமரிக் கற்பம் என்றும் பேர் என்று அவர் கூறுகிறார்.  குமாரி என்பது கு+ மரி என்று பிரிந்து கு என்னும் அறிவின்மையான இருட்டை மரிக்கச் செய்வது என்று பொருள்படும்.  இதையேதான் இந்தியாவின் தென்முனையில் இருக்கும் குமரித்தெய்வம் குறிக்கிறாள்.  பூவுடன் சேர்ந்த நாறும் மனம் வீசுவதைப்போல இந்த மூன்றேழுத்துக்களுடன் சேர்ந்த படைப்புக்கள் அனைத்தும் பெருமை பெற்றவை என்கிறார் சுப்பிரமணியர்.

Saturday 22 November 2014

80. Experiences of the yogi

Verse 80
கூடுவாய் தம்பனமும் இதுவேயாகும்
கோடி ரவி தனிக் காட்டிக் குறியில் நிற்கும்
ஆடுவாய் இதையறிந்து மவுனங்கொண்டு
அஷ்டமா சித்திஎட்டு மாட்டி வைக்கும்
நாடுவாய் நாற்பதின் முக்கோணந்தோன்றும்
நந்தி குரு ஆசானைப் பேசவைக்கும்
பாடுவாய் பரவெளியைக் கண்டுகண்டு
பாவமதை அகற்றிடுவாய் பாரு பாரே

Translation:
You will join this, this is the sthambanam
Showing millions of suns it will remain in the sign
You will dance, knowing this, adorning silence
The eight siddhis will torment you
You will seek in the fourty triangles
It will make the preceptor, Nandi Guru, speak
You will sing, seeing the supreme space repeatedly
You will eliminate sins, see, see.

Commentary:
Subramanyar is telling Agathiyar about the experiences of a kundalini yogi.  In the previous verse he spoke about kumbaka pranayama and joining the gurupaadam.  In this verse he says that this is sthambanam.  Sthamban or immobilization is one the ashta karma or eight acts.  We have already seen the details about these in verse 3.  While it is usually thought to be for immobilizing one’s enemy its actual purpose is to immobilize breath in kumbakam and along with it the mind as the movements of the mind is associated with the breath.  This practice will grant the ashta ma siddhi or the eight mystical accomplishments- anima, magima, lagima, garima, praapthi, praakaamyam, isithvam and vasithvam.  Subramanyar tells Agatthiyar that these accomplishments will torment one because a yogi loses his goal very easily being engulfed by the pride that these accomplishments grant.  The fourty triangles that Subramanyar talks about may be the Sricakra, the cosmogram that describes creation and dissolution.  Nandi guru aasaan is Siva who is the Adi guru.  Paraveli is the supreme space which represents the space of consciousness.  Through this procedure the yogin gets rid of his sins.


இப்பாடலில் சுப்பிரமணியர் ஒரு குண்டலினி யோகியின் அனுபவங்களை விளக்குகிறார்.  முந்தைய பாடலில் எவ்வாறு கும்பகத்தால் மூச்சை அடக்கி குருபாதத்தில் கூட வேண்டும் என்று சொன்ன அவர் இப்பாடலில் இதுவே தம்பனம் என்று விளக்குகிறார்.  தம்பனம் என்பது அஷ்ட கர்மாக்களில் ஒன்று.  இதைப் பற்றிய விவரங்களைப் பாடல் மூன்றில் பார்த்தோம்.  பொதுவாக தம்பனம் என்பது எதிரியை அசையாமல் இருக்கச் செய்வது.  இப்பாடலில் தம்பனம் என்பது மூச்சை கும்பகத்தில் அசையாமல் இருக்கச் செய்வது என்று சுப்பிரமணியர் காட்டுகிறார்.  இவ்வாறு மூச்சு கட்டுப்பட்டால் மனமும் தனது ஆட்டத்தை நிறுத்தி அசையாமல் இருக்கிறது. ஏனென்றால் மனமும் மூச்சும் நெருங்கிய தொடர்புடையவை.  ஒன்றின் செயல்பாடு மற்றொன்றை செயல்பட வைக்கும்.  இந்த பயிற்சி அஷ்ட சித்திகள் எனப்படும் அணிமா மகிமா, லகிமா, கரிமா, பிராகாமியம், ஈசித்வம், வாசித்வம் மற்றும் பிராப்தி என்பவை.  இந்த சித்திகள் ஒருவரை ஆட்டிவைக்கும் என்று சுப்பிரமணியர் கூறுகிறார்.  இந்த சித்திகளைப் பெற்ற யோகி அவை அளிக்கும் சக்தியினால் தனது இலக்கை நோக்கிப் பயணிக்காமல் வழிதவறிவிடலாம்.  நாற்பது முக்கோணம் என்று சுப்பிரமணியர் கூறுவது உலகின் தோற்றத்தையும் லயத்தையும் குறிக்கும் ஸ்ரீ சக்கரமாக இருக்கலாம்.  நந்தி குரு ஆசான் என்பது ஆதிகுருவான சிவனைக் குறிக்கும்.  பரவெளி என்பது விழிப்புணர்வு மண்டலத்தைக் குறிக்கும்.  

Friday 21 November 2014

79. Creation and dissolution


Verse 79
இருமென்றாள் நகாரமென்ற விஞ்சை யாலே
என் மகனே மறை நான்குஞ் சேரலாச்சு
உருவென்றுஞ் செகமெல்லாம் படைக்கலாச்சு
ஓம் முடிந்த பட்டணத்தி லொடுங்கலாச்சு
தருவென்ற தருக்களெல்லாந் தோன்றலாச்சு
தமர் வாசற்குள்ளே யுந்தான் தரிக்கலாச்சு
குருவென்ற குருபாதங் காணலாச்சு
கும்மென்று தப்பித்துக் கூடுவாயே

Translation:
Remain with the wisdom of nakaara
My son, all the four Vedas came together
All the worlds, the forms, were began to be created
They abided in the town, the Om
The trees started sprouting
Within the threshold of the experts, it was adorned
The gurupada, the guru, became visible
With holding it, you will join.

Commentary:
This verse talks about the beginning of creation.  The wisdom of nakaara became the basis from which all the worlds, the forms were created with the help of the instrustions, the Vedas.  They all abided in the omkara.  The tree mentioned in the next line is the sushumna nadi, the experts activated it and experienced the gurupada the entrance that leads to sahasrara and to the state of all pervasiveness. The last line may be “gum enru kumpitthu kooduvaaye” as the kumbaka raises the soul, the prana and the fire of kundalini to the gurupaadam.  It could also be “kum enru sthambitthu kooduvaaye” as one of the ashtakarma, sthambanam is actually freezing or holding the mind without any movement.


இப்பாடலில் சிருஷ்டியின் தொடக்கம் பேசப்படுகிறது.  நகாரம் என்ற ஞானத்தால் எல்லா தோற்றங்களும், உலகங்களும் உருவாக்கப்பட்டன.  அதற்கான விளக்கமுறை வேதங்களாகும்.  இவ்வாறு வெளிப்பட்ட உலகம் அடங்குவது ஓம்காரத்தில்.  அடுத்த வரியில் உள்ள தருக்கள் என்பது நாடிகளைக் குறிக்கும்.  அந்த மரங்களைத் தரித்த ஆத்மாக்கள் குருபாதம் எனப்படும் சகஸ்ராரத்தின் வாயிலைக் காணும்.  அதற்கு கும்பகம் உதவும்.  அதனால் கடைசி வரி “கும் என்று கும்பித்து கூடுவாயே என்று இருக்குமோ என்று தோன்றுகிறது.  அல்லது “கும் என்று தம்பித்துக் கூடுவாயே” என்றும் இருக்கலாம் ஏனெனில் தம்பனம் என்பது மனதையும் பிராணனையும் ஆடாமல் வைத்திருப்பது, கும்பகத்தில் அதை நிறுத்துவது.  

Wednesday 19 November 2014

78. Creation occurs while remaining in the state of poornam

Verse 78
பாரப்பா நகாரமென்ற விஞ்சை தன்னைப்
பார்த்துவுன்றன் நிலையறிந்து பத்தியில் நின்று
ஆரப்பா சுடுகாடு பாழ்வீட்டுக்குள்
அமர்ந்தொடுங்கிப் பூரணத்தி லறிவில் நின்று
நேரப்பா நிஷ்டையோடு சமாதி பார்த்து
நின்னிலையும் நின்னுயிரும் நீதான் கண்டு
ஏரப்பா மணிவிளக்கைத் தூண்டித் தூண்டி
எவ்வுயிருந் தான் படைத்து மிருமென்றாளே

Translation:
She said, “See the wisdom, nakaara
Seeing it, knowing your state, remaining in devotion
Soothe, within the house of cremation, the void (paazh)
Remaining there abiding in the fully complete consciousness,
Experiencing the austerities along with Samadhi
You, seeing your state and your soul
Climb, increasing the flame of the lamp
Creating all the life forms you remain.”

Commentary:
Sakthi is instructing Brahma that he should understand the significance of the nakaara, the wisdom it represents.  He should know about his self and remain with devotion.  Abiding in the consciousness of the poornam, experiencing the austerities and Samadhi he should remain creating all the life forms while increasing the flame of consciousness. 
Among the five letters of namacivaya, nakaara represents the earth element.  The muladhara is the site of the nakaara.  “sudukaadu” means the forest that burns.  It also means the cremation ground where the body is burned.  The fire of kundalini remains in the muladhara and burns the seed of birth.  It is the site where the effects of maya are burned.  Paazh or void is an interesting concept.  It is not a space that is empty but one that contains everything. Tirumular talks about mayappaazh, bodhappaazh and upasaanthappaazh.  These are spaces of limitation created by maya. All these originate from muladhara where Brahma resides with Kalai vaani. 

From Sakthi’s instructions we understand how creation occurs in the world.  The Divine manifests as Brahma, the one who has the knowledge about the rules, the Vedas, the esoteric wisdom represented by the letter nakaara.  It creates the world while remaining in the state of supreme consciousness, by repeatedly invoking this state.  It remains in the muladhara the cremation ground and performs creation.  It performs the required austerities and holds itself in the state of Samadhi when and does not itself slip into the world of maya.

இப்பாடலில் சக்தி பிரம்மனுக்கு எவ்வாறு படைப்பை நிகழ்த்த வேண்டும் என்று கூறுகிறாள்.  பிரம்மன் முதலில் நகாரத்தால் காட்டப்படும் ஞானத்தை உணர வேண்டும்.  தன்னைப் பற்றி அறிந்து ஞானத்தில் திளைக்கவேண்டும்.  இந்த ஞானநிலையை, பூரண விழிப்புணர்வு நிலையை, தவத்தின் மூலமும் சமாதியின் மூலமும் பெறவேண்டு.  இந்த நிலையில் அறிவு என்ற விளக்கை அணையாமல் தூண்டிவிட்டபடி அவர் உயிர்களைப் படிக்கவேண்டும் என்று சக்தி கூறுகிறாள்.   
நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தில் நகாரம் பூமி தத்துவத்தைக் குறிக்கும்.  மூலாதாரமே நகாரத்தின் பீடம்.  சக்தி அதை சுடுகாடு, பாழ் என்கிறாள்.  சுடுகாடு என்பது பாபத்தை, மேலும் பிறவிகள் ஏற்படுவதற்குக் காரணமான விதத்தைச் சுடுவதைக் குறிக்கும்.  பாழ் என்பது ஒன்றும் இல்லாத பாழடைந்த நிலையல்ல.  அது அனைத்தையும் உள்ளடக்கிய சூனியமாகும்.  மாயையால் தோற்றுவிக்கப்படும் பாழ் மூன்று வகைப்படும் என்று திருமூலர் கூறுகிறார்.  அவை மாயப்பாழ், போதப்பாழ், உபசாந்தப் பாழ் என்பவை.  இந்த பாழ் ஜீவனைத் தான் அளவுக்குட்பட்டவன் என்று எண்ணச் செய்பவை.  இந்த பாழ் தோன்றும் இடம், மாயை செயல் புரியும் இடம் மூலாதாரம்.  இந்த மூலாதாரத்தில் நின்று அறிவு என்னும் விளக்கைத் தூண்டியபடி படைப்பை நிகழ்த்தியபடி இருக்குமாறு சக்தி பிரம்மனுக்குக் கூறுகிறாள். 

இப்பாடலிலிருந்து படைப்பு எவ்வாறு நிகழ்கிறது என்பதைப் புரிந்துகொள்கிறோம்.

இறைவனின் ஒரு வெளிப்பாடான பிரம்மன் தோன்றி தவம் மூலம் சமாதி நிலையில் இருந்த பூரண ஞானத்தைப் பெறுகிறான்.  இந்த நிலையில் தனது எழுத்தான நகாரத்தை மவுனத்துடன் கூட்டி, பராபர நிலையில் இருந்து, தன்னைப் பற்றிய உணர்வுடன் அறிவு என்னும் விளக்கைத் தூண்டித் தூண்டி தன்னை மாயையில் தொலைத்துவிடாமல் உயிர்களைப் படைத்தபடி இருக்கிறான்.  

Monday 17 November 2014

77. The True creator

Verse 77
காட்டுகிறேன் அண்ட பிண்டம் படைத்து நீயுங்
கலந்தெழுந்த வெண்பத்து நான்குயிர்க்கும்
பூட்டுகிறே னவரவர்க்குப் புசிப்புத் தானும்
புகழ்ந்தெழுந்த தெய்வமோடு பூதந்தானும்
நாட்டுகிறேன் பூமி நடு மத்தி தன்னில்
நடுவாக மேரு வென்று நலமுண்டாக
வாட்டுகிறேன் சமுத்திர முஞ் சகல வித்தும்
மானிடரைப் படைத்து நித்தம் வாழ்வாய் பாரே

Translation:
I will show. Creating the micro and macrocosms
For the eighty four types of lives that emerged
I am locking the food for every one of them
Along with the deities and the elements
I am planting in the middle of the world
In center as Meru so that goodness occurs
I am toasting the oceans and all the seeds
Creating the humans, you will live eternally.

Commentary:
Sakthi tells Brahma that she is creating the food, the deities and the elements for the eightyfour types of life forms that he will be creating.  These lives emerged due to the intermixing of the macro and microcosms.  The five elements and their combinations found in the external world are present internally also.  Every part of the human body is derived from the five elements.  Agatthiyar in his Saumya Sagaram describes the 60 thaathvika or the derivatives from the tattva or principles. For example the derivatives of the earth element are the bone, skin, teeth, hair and flesh.  Sakthi also mentions that she is planting the Meru or the sushumna or the spinal cord where the cakras are located so that the life forms will be benefited by it.  The oceans and the seeds mentioned are the causes for birth.  They are the fluids in the body and the essence that causes a birth.  Now that Sakthi has created all the essentials for the worldly life as well as liberation Brahma should creat in the world creating the humans.


எண்பத்து நான்கு வித உயிர்களுக்குத் தேவையான உணவு, தெய்வங்கள் பூதங்கள் ஆகியவற்றைத் தான் படைத்துள்ளதால் பிரம்மா அண்டத்தையும் பிண்டத்தையும் படைத்துக்கொண்டு இருக்கவேண்டும் என்று சக்தி கூறுகிறாள்.  அவற்றோடு தான் மேரு எனப்படும் சுழுமுனை நாடியை அல்லது தண்டுவடத்தை பூமியின் நடுவில், உடலின் நடுவில் மற்றும் உலகம் சுழலும் அச்சாகவும் நாட்டியுள்ளதாகவும் அதனால் உயிர்களுக்கு நலம் உண்டாகட்டும் என்றும் அருளும் சக்தி தான் கடல்களையும் வித்துகளையும் வாட்டுவேன் என்றும் கூறுகிறாள்.  கடல்களும் வித்துக்களும் ஒரு பிறப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்.  தான் இவ்வாறு எல்லாவற்றையும் தயாராக்கியுள்ளதால் பிரம்மா மானிடரைப் படைத்து உலகில் நித்தம் வாழவேண்டும் என்று சக்தி கூறுகிறாள். இதனால் படைப்புத் தொழிலைச் செய்பவர் பிரம்மா என்றாலும் அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்பவள் சக்தி, அவள்தான் உண்மையான படைப்பாளி என்பது புரிகிறது.  

Sunday 16 November 2014

76. Instructions to Brahma about his consort and job

Verse 76
பாரப்பா என் மகனே விஞ்சை நாதா
பாணி கலை வாணி என்றும் பரையே என்றும்
ஆரப்பா மறை நான்குஞ் சிரசதான
அயனாக லோக மெல்லா மருளிச் செய்ய
நேரப்பா வுதித்துவந்த மைந்தா நீயும்
நிறைந்த பராபரத்தினுட நிலையினின்று
வேரப்பா வேதாந்த வேத வேதா
விஞ்சை தனை யுன்றனுக்குக் காட்டுவேனே

Translation:
See my son, the Vinchai natha!
As Vani, Kalaivaani, and Parai
The pinnacle/head of all the four Vedas
You emerge as Ayan and bless the whole world
Coming out directly, my son, you
Remaining in the state of Paraapara. 
The root, the Vedanta Veda Vedaa
I will show you the knowledge.

Commentary:
In this verse Sakthi addresses Brahma as the Ayan, the lord of knowledge (vinchai).  He is the expert of the four Vedas.  The pinnacle of the Vedas is the Divine.  Brahma along with his consort Sarasvathi or Kalai vaani blesses the whole world and performs his duty by remaining in the state of Paraapara.  Kalai vaani has another meaning.  Besides artforms kalai also means breathing pattern, the esoteric states of pranava, the praasaadha kala. Kala is one of the vidya tattva that causes the manifested world.  Hence, Brahma’s consort is Kalai vaani, the expert of kalai.   Sakthi says further that she will teach Brahma the root of creation the VedantaVeda. Vedanta veda vedaa may be addressing Brahma as the embodiment of the Vedanta. 


பிரம்மாவை அயனே என்று அழைத்து அவரது சக்தி வாணி என்னும் கலைவாணி என்கிறாள் சக்தி. அவள் பரையின் ஒரு உருவமே என்றும் கூறுகிறாள்.  கலை என்பதற்கு பல பொருள்கள் உள்ளன.  பாட்டு நாடகம் என்னும் கலைகளைத் தவிர மூச்சுப் பயிற்சியும்  கலை எனப்படுகிறது.  கலை என்பது வித்யா தத்துவங்களில் ஒன்று.  வித்யா தத்துவங்கள் உலகின் வெளிப்பாட்டுக்குக் காரணமாக இருப்பவை.  உலகைப் படைக்கும் பிரம்மனுக்கு கலை துணையாக இருப்பது பொருத்தம்தானே!  வேதங்களின் சிரஸ் என்பது இறைவனைக் குறிக்கும்.  பிரம்மன் பராபர நிலையில் நின்று உலகை ரட்சிக்க வேண்டும் என்று கூறும் சக்தி தான் அவருக்கு வேதாந்த வேதத்தை விளக்கப்போவதாகவும் கூறுகிறாள். வேதாந்த வேத வேதா என்பது பிரம்மனுக்கு அவள் அளிக்கும் பெயராகத் தோன்றுகிறது.