Sunday 9 November 2014

69. Emergence of Achutan

Verse 69
மேவென்றா ளுருத்திரனை மைந்தாவென்று
மெஞ்ஞான விஞ்சைதனை விடுகாதென்றாள்
தாவென்றாளனுதினமும் நினைக்கச் சொன்னாள்
சங்காரஞ் செய்வதற்குப் பாசமீந்தாள்
கூ வென்றாள் பூரணத்தை நினைத்தே ஆத்தாள்
கோரியே மகார மென்றே மவுனந்தன்னை
ஆவென்றே நிலைதனையு மவள்தான் பார்த்தாள்
அச்சுதனும் வந்துமினிப் பணிந்தான் பாரே
Translation:
She told Rudra, “Son, Pervade
Do not leave the wisdom of meijnana”
She bid him to think about this daily
She offered him paasa to perform samhara
“koo”-thinking about the fully complete she said, the mother,
Seeking the makaara, the mavunam
She saw the state saying “aa”
Achuthan emerged and stood saluting before her.

Commentary:
After bidding Rudra to pervade and to not leave the wisdom of Meijnana, Sakthi offered him the paasa to perform the samhara.  Paasa traditionally means the noose that is said to tie the souls and draw them from their body.  Paasa also means attachment.  The senses and sensual experiences are the ties that hold a soul in a limited state.  However, the Divine has placed the paasa so that the souls will cut themselves from their limited state and become all pervasive.  Please refer to Tirumandiram tantra 8 on avatthai.
After bidding Rudra about his job, Sakthi thought “koo” This is the Tamil equivalent of the letter “hoo” which represents bindu.  Sivavaakiyar says everything became “kee” and “koo” or “hee” and “hoo”. Hee represents nada and hoo represents bindu.  Bindu is the primordial point from which the manifested universe emerged.  Sakthi created Achutan or Vishnu from the bindu and the makaara or the maya.  “aa” is the state of divine bliss in the expressed state.  Thus, creation happened as an expression of Sakthi’s bliss. 


ருத்திரனைப் படைத்து அவனை எந்நாளும் மெய்ஞ்ஞானத்தை மறவாதிருக்கவேண்டும் என்று பணிந்து அவனுக்கு அவனது சம்காரத் தொழிலைச் செய்ய, சக்தி, பாசத்தை அளித்தாள்.  பாசம் என்பது பொதுவாக உயிர்களை உடலிலிருந்து சங்கரன் பிரித்து இழுக்கும் கயிறு என்று கருதப்பட்டாலும் அது பற்று என்றும் பொருள்படும்.  மாயை தோற்றுவிக்கும் மலங்கள், இந்திரியங்கள், அவை தரும் அனுபவங்கள் என்பவையே பாசம் எனப்படுகின்றன.  அவை ஆத்மாவை பசு நிலையில் வைத்திருக்கின்றன.  ஆனால் ஆத்மா இந்த பாசத்தை உபயோகித்தே அதன் பாதிப்பிலிருந்து விடுபடவேண்டும்.  இதைப் பற்றிய விளக்கங்களை திருமூலர் திருமந்திரம் எட்டாம் தந்திரத்தில் அவத்தைகள் விளக்கப்படும் பாடல்களில் காண்க.  இவ்வாறு ருத்திரனுக்குக் கட்டளையிட்ட பிறகு சக்தி “கூ” என்று நினைத்தாள் என்கிறார் சுப்பிரமணியர்.  கூ என்பது ஹூ என்பதன் தமிழ்க் குறியீடு.  சிவவாக்கியர் தமது பாடலில் கூ, கீ அல்லது ஹூ, ஹீ என்பவற்றை பிந்து நாதம் என்று விளக்கியுள்ளார்.  விந்து அல்லது பிந்து என்பது உலகம் வெளிப்படுவதற்கான சக்தி மூலம்.  சக்தி கூ வுடன் மகாரத்தையும் நினைத்தாள் என்பது விந்துவுடன் மாயையையும் கொண்டு சக்தி தனது அடுத்த படைப்பை நிகழ்த்தினாள் என்று பொருள்.  அவளது அடுத்த படைப்பு அச்சுதன் எனப்படும் விஷ்ணு. 

No comments:

Post a Comment