Tuesday 28 October 2014

60. Vaalai puja

Verse 60
சாத்தென்று சொன்னபடி நினைவாய்ச் சாத்தி
தவறாமற் பலகாரம் வடையும் வைத்து
போத்தென்று சொன்னபடி விஞ்சையோதிப்
புகழ்ந்திடுவாய் சாபமெல்லாம் நிவர்த்தி செய்து
ஏத்தென்று சொன்னபடி சமிதைப்போட்டு
என் மக்காளாவிநெய்யா விலையாற்சாத்தி
வாழ்த்தென்று வாழ்த்திடுவாய் வாலை பூசை
மறவாமல் அனுதினமும் பணிந்து கொள்ளே

Translation:
Adorning it as commanded before
Offering various eatables including “vada”
Reciting the scriptures as instructed to praise them
You will praise and thus remove all the curses
Lighting as instructure with the help of woodchips
My people, adding the clarified butter made from cow’s milk, with the leaf
You will praise, as instructed, and perform vaalai puja
Daily without forgetting, salute and accept it.

Commentary:
In this verse Subramanyar is talking about a homa for Vaalai or Kundalini Shakti.  Agatthiyar in his Saumya sagaram says that the letter “ci”represents vaalai.  The vaalai homa is performed with food offerings, kindling and growing the fire with ghee from cow’s milk which is added with a leaf, usually mango leaf, adding wood pieces and chanting the appropriate verses to expiate the curses.  Subramanyar is saying that this puja should be performed daily.


இப்பாடலில் சுப்பிரமணியர் வாலை பூஜையைப் பற்றிப் பேசுகிறார்.  வாலை என்பது குண்டலினி சக்தியைக் குறிக்கும்.  வாலைப் பூஜை அக்னியை பசு நெய்யினாலும் சமித்தினாலும் வளர்த்து, சாப நிவிர்த்தி மந்திரங்களை ஓதி பலாகரங்களையும் வடையையும் படைத்து மேற்கொள்ளப்படுகிறது.  இந்த பூசையை மறக்காமல் தினமும் செய்ய வேண்டும் என்கிறார் சுப்பிரமணியர்.

No comments:

Post a Comment