Wednesday 22 October 2014

56. Puja, step 3

Verse 56
நில்லடா ஒரு மனதாய் நிலையில் நின்று
நிறுத்தியே திருவாத்தி மலர்தான் சாத்தி
அல்லடா சூலமுஞ்சக் கரங்கள் சாத்தி
அப்பனே நெய் விளக்குத் தீபம் வைத்துச்
சொல்லடா பூரணத்தை நினைத்து நீயுஞ்
சூட்டுமிரு பக்கங்கற்பூரமேத்தி
வில்லடா தேவியுட குறியைப் பார்த்து
வேண்டியதோர் பலகாரம் வடையும் வையே

Translation:
Stand with mental focus
In a particular state, adorning “aatthi” flower
Adorning the trident and cakra
Son, lighting the lamp of clarified butter
Say son, thinking about the fully complete
You adorn it on both sides, lighting the camphor
The bow, the sign of Devi
Offer eatables and vada.

Commentary:
In this verse Subramanyar talks about next steps in the puja.  Tiruvaatthi is the flower of Bauhinia tomentosa, a flower sacred to Siva.  Avvaiyar composed the Aathi choodi which means the one who adorns the aathi flowers- Siva.  The trident and the cakra should be added followed by lighting the lamp of clarified butter.  The camphor should be lighted after placing two lamps on either side.  Food offering should be made with vada and other eatables.


பூஜையில் அடுத்த கட்டத்தை இப்பாடலில் விளக்குகிறார் சுப்பிரமணியர்.  கும்பத்தில் ஆவாஹனம் செய்த தெய்வங்களுக்கு ஆத்திப் பூ சூட்டவேண்டும் என்கிறார்.  ஆத்திப் பூ சிவனுக்கு விசேஷமான மலர். ஆத்திச் சூடி என்ற அவ்வையாரின் பாடல்கூட சிவனின் பெயரில் இயற்றப்பட்டது.  பூவை வைத்த பிறகும் சூலம் சக்கரம் ஆகியவற்றை இட்டு நெய் தீபம் இருபுறமும் ஏற்றவேண்டும் என்கிறார் சுப்பிரமணியர்.  அதன் பிறகு கற்பூர தீபம் காட்டி பலகாரங்களையும் வடையையும் படைக்க வேண்டும் என்கிறார்.

No comments:

Post a Comment