Sunday 26 October 2014

59. Navagraha puja

Verse 59
கொள்ளுதற்கு நவக்கிரக சித்தி வேணும்
கொடியதொரு நவகலசம் வைக்க வேணும்
தள்ளுதற்கு முன் சொன்னபடிதானப்பா
தவறாமற் றாணையை ஏற்ற வேணும்
சொல்லுதற்குக் கிரக வட் சரங்கள் கீறிச்
சுத்தமுடன் தருப்பையுமாவிலையுங் கட்டி
மல்லுத்தம் பண்ணாமல் மக்காள் மக்காள்
மனோன் மணியை அர்ச்சித்து தேங்காய் சாத்தே

Translation:
To see it, navagraha siddhi is essential
The vicious nine sacred pots should be placed
What should be avoided is as mentioned before
The command must be raised without fail
The akshara of the planets should be draw for chanting
Tying up with purity, the dharbha grass and mango leaves
People, people, without performing boxing
Place the coconut after praising Manonmani.

Commentary:
Subramanyar says that to realize the significance of the three letters, a, u and ma, one should have navagraha siddhi.  The different plancts correspond to different sites in out body.  David Frawley describes the relationship between the different planets and the cakras in our body.  Muladhara corresponds to shani/saturn, svadhishtana to guru/Jupiter, manipuraka to mangala/Mars, anahata to shukra/venus, vishuddhi to budha/mercury, ajna to Chandra/surya.  Rahu and ketu correspond to the nodes where the moon and the earth meet.  Rahu is the node at the muladhara and ketu is at the sahasrara. Thus rise of kundalini Shakti is meeting of rahu with ketu.

For this puja Subramanyar says that nine pots should be placed along with dharba grass and mango leaves.  Dharba grass and mango leaves are said to have the highest value in conducting sound vibrations through their tips.  Hence, priests dip their tips in sacred water in the pots and sprinkle it.  Subramanyar says that a coconut should be placed on the pot after praying to Manonmani.  Manonmani is the sakthi of Sadashiva the manifestation corresponding to the space principle.  From space evolved the other principles.  Navagraha siddhi is siddhi of the cakra, corresponding to the nine planets and the five deities Sadashiva, Maheswara, Rudra, Vishnu and Brahma. 

Thus, navagraha siddhi is siddhi of the five elements and the mind.

அ உ ம என்ற மூன்றெழுத்தின் முக்கியத்துவத்தைக் காண நவகிரக சித்தி பெறவேண்டும் என்று சுப்பிரமணியர் கூறிகிறார்.  நவகிரகங்கள் நமது சக்கரங்களுடன் தொடர்பு கொண்டவை.  டேவிட் பிரௌலி என்பவர் கீழ்க்காணும் தொடர்பைக் கூறுகிறார்.  மூலாதாரம்- சனி, சுவாதிஷ்டானம்- குரு, மணிபூரகம்-செவ்வாய், அனாகதம்- சுக்கிரன், விசுத்தி- புதன், ஆக்ஞா- சந்திர சூரியர்கள். ராகு கேது என்பவர்கள் சந்திரனும் பூமியும் சநதிக்கும் புள்ளிகளைக் குறிக்கும்.  ராகு தென்புலத்தில் மூலாதாரத்திலும் கேது வட புலத்தில் சஹாஸ்ராரத்திலும் உள்ளனர்.  ராகுவை தலை என்றும் கேதுவை வால் என்றும் குறிப்பிடுவது வழக்கம்.  குண்டலினி சக்தியின் எழுச்சி என்பது ராகு கேதுவை சந்திப்பது, பாம்பு தனது தலை கீழ் நிலையிலிருந்து மேலே நோக்கி மாறுவது.  இதுதான் தலை கீழ் மாறலோ!

நவகிரக சித்தி பெற ஒன்பது கலசங்களை வைத்து அவற்றில் மாவிளையையும் தரிபைப் புல்லையும் வைக்கவேண்டும் என்கிறார் சுப்பிரமணியர்.  தர்பையும் மாவிலையும் சப்த அதிர்வுகளை தமது நுனியினால் கடத்துவதாக எண்ணப்படுகின்றன.  அதனால்தான் கலச நீரில் தர்பையையும் மாவிலையையும் நனைத்துத் தெளிப்பது வழக்கம்.  இதன் பிறகு மனோமணி யைப் போற்றி தேங்காயைச் சாத்த வேண்டும் என்கிறார் சுப்பிரமணியர்.  மனோன்மணி சதாசிவனின் சக்தி.  சதாசிவ தத்துவத்திலிருந்துதான், ஆகாய தத்துவத்திலிருந்துதான் பிற பூத தத்துவங்கள் பிறக்கின்றன. (சக்கரங்கள் இந்த தத்துவங்களுடன் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளன என்பதை நாம் முன்னமே பார்த்தோம்.  உதாரணம்- மூலாதாரம்- பூமி தத்துவம், சனி கிரகம்).  

இவ்வாறு நவக்கிரக சித்தி என்பது ஐம்பூதம் மற்றும் மன சித்தி.

No comments:

Post a Comment