Sunday, 9 November 2014

69. Emergence of Achutan

Verse 69
மேவென்றா ளுருத்திரனை மைந்தாவென்று
மெஞ்ஞான விஞ்சைதனை விடுகாதென்றாள்
தாவென்றாளனுதினமும் நினைக்கச் சொன்னாள்
சங்காரஞ் செய்வதற்குப் பாசமீந்தாள்
கூ வென்றாள் பூரணத்தை நினைத்தே ஆத்தாள்
கோரியே மகார மென்றே மவுனந்தன்னை
ஆவென்றே நிலைதனையு மவள்தான் பார்த்தாள்
அச்சுதனும் வந்துமினிப் பணிந்தான் பாரே
Translation:
She told Rudra, “Son, Pervade
Do not leave the wisdom of meijnana”
She bid him to think about this daily
She offered him paasa to perform samhara
“koo”-thinking about the fully complete she said, the mother,
Seeking the makaara, the mavunam
She saw the state saying “aa”
Achuthan emerged and stood saluting before her.

Commentary:
After bidding Rudra to pervade and to not leave the wisdom of Meijnana, Sakthi offered him the paasa to perform the samhara.  Paasa traditionally means the noose that is said to tie the souls and draw them from their body.  Paasa also means attachment.  The senses and sensual experiences are the ties that hold a soul in a limited state.  However, the Divine has placed the paasa so that the souls will cut themselves from their limited state and become all pervasive.  Please refer to Tirumandiram tantra 8 on avatthai.
After bidding Rudra about his job, Sakthi thought “koo” This is the Tamil equivalent of the letter “hoo” which represents bindu.  Sivavaakiyar says everything became “kee” and “koo” or “hee” and “hoo”. Hee represents nada and hoo represents bindu.  Bindu is the primordial point from which the manifested universe emerged.  Sakthi created Achutan or Vishnu from the bindu and the makaara or the maya.  “aa” is the state of divine bliss in the expressed state.  Thus, creation happened as an expression of Sakthi’s bliss. 


ருத்திரனைப் படைத்து அவனை எந்நாளும் மெய்ஞ்ஞானத்தை மறவாதிருக்கவேண்டும் என்று பணிந்து அவனுக்கு அவனது சம்காரத் தொழிலைச் செய்ய, சக்தி, பாசத்தை அளித்தாள்.  பாசம் என்பது பொதுவாக உயிர்களை உடலிலிருந்து சங்கரன் பிரித்து இழுக்கும் கயிறு என்று கருதப்பட்டாலும் அது பற்று என்றும் பொருள்படும்.  மாயை தோற்றுவிக்கும் மலங்கள், இந்திரியங்கள், அவை தரும் அனுபவங்கள் என்பவையே பாசம் எனப்படுகின்றன.  அவை ஆத்மாவை பசு நிலையில் வைத்திருக்கின்றன.  ஆனால் ஆத்மா இந்த பாசத்தை உபயோகித்தே அதன் பாதிப்பிலிருந்து விடுபடவேண்டும்.  இதைப் பற்றிய விளக்கங்களை திருமூலர் திருமந்திரம் எட்டாம் தந்திரத்தில் அவத்தைகள் விளக்கப்படும் பாடல்களில் காண்க.  இவ்வாறு ருத்திரனுக்குக் கட்டளையிட்ட பிறகு சக்தி “கூ” என்று நினைத்தாள் என்கிறார் சுப்பிரமணியர்.  கூ என்பது ஹூ என்பதன் தமிழ்க் குறியீடு.  சிவவாக்கியர் தமது பாடலில் கூ, கீ அல்லது ஹூ, ஹீ என்பவற்றை பிந்து நாதம் என்று விளக்கியுள்ளார்.  விந்து அல்லது பிந்து என்பது உலகம் வெளிப்படுவதற்கான சக்தி மூலம்.  சக்தி கூ வுடன் மகாரத்தையும் நினைத்தாள் என்பது விந்துவுடன் மாயையையும் கொண்டு சக்தி தனது அடுத்த படைப்பை நிகழ்த்தினாள் என்று பொருள்.  அவளது அடுத்த படைப்பு அச்சுதன் எனப்படும் விஷ்ணு. 

Friday, 7 November 2014

68. Emergence of Rudra

Verse 68
பாரப்பா வுருத்திரனும் பிறந்துவந்து
பராபரியே என்றுசொல்லிப் பணிந்து நிற்க
ஆரப்பா சங்கார வுருத்திரா வென்றாள்
அவருக்குச் சிகாரமத்தை யருளிச்செய்தாள்
நேரப்பா யிதை நினைத்துப் போற்றச் சொன்னாள்
நேசமுடன் வாழ்ந்திருக்க நிலையுஞ்சொன்னாள்
மேரப்பா மேரிலிட்ட தீபம் போல
மேதினியில் நீயிருந்து மேவென்றாளே

Translation:
See son, Rudra came, after his birth
And stood saluting saying “Paraaparaiye!”
She said, “who is this son?  Rudra?”
And she granted him sikaaram
She told him to contemplate on this and praise it
She told him the way to life with love
Life the lamp lit on Mount Meru
“You remain in this world pervading it” she said.

Commentary:
Subramanyar is describing the emergence of Rudra.  Rudra is the atidevatha of manipuraka cakra, the locus of the fire element.  He is represented by the letter si or sikaara.  Tirumular says that it is Paraapari who as Sadasiva created the other deitites, Maheswara, Rudra, Vishnu and Brahma.  Their creation occurred in the above order.  Rudra is responsible for dissolution or laya.  During pranayama, kumbaka is practices at the navel cakra.


சுப்பிரமணியர் ருத்திரனின் படைப்பை இப்பாடலில் கூறுகிறார். திருமூலர் தனது திருமந்திரத்தில் பராபரை சதாசிவனாக மற்ற கடவுட்கலான மகேஸ்வரன், ருத்திரன், விஷ்ணு மற்றும் பிரம்மாவை இந்த முறையில் படிக்கிறாள் என்கிறார்.  சுப்பிரமணியரின் இப்பாடலும் அதை வழிமொழிகிறது.  ருத்திரனின் இருப்பிடம் மணிபூரக சக்கரம்.  அக்னி தத்துவத்தின் இருப்பிடமான இது சி அல்லது சிகாரத்தால் குறிப்பிடப்படுகிறது.  பிராணாயாமத்தின் போது இந்த சக்கரத்தில்தான் கும்பகம் நிகழ்த்தப்படுகிறது.  

Wednesday, 5 November 2014

67. Parai, the creator, the form of u and ma, created the triad

Verse 67
இருமென்று பரமசிவன் தனை இருத்தி
யிம்மூல மதிகமென்று சிவன்றான்கேட்கத்
திருமந்த்ர மூன்றெழுத்து அதிகமென்றே
ஜெகமதனைப் படைப் பதற்குச் சிவன்தான் வேண்ட
குரு மந்த்ர மவுனமதாய்ப் பரைதான் வந்து
குணமான மூவரையும் படைக்கும்போது
மருமந்த்ரம் வேறில்லை என்று சொல்லி
மவுன மதாய்ச் சிகாரமதை நினைத்தாள் பாரே

Translation:
Holding Paramasivan, bidding him to stay
With Siva asking this moolam which is excess
The three letters of the tirumantram in its excess
Siva requesting them to create the world
Parai who came there as guru mantra mavunam
When she created the triad, the ones with the qualities
Saying that there is no other mantra
She contemplated on the sikaara as the mavunam.

Commentary:
Subramanyar tells us that Sivan asked him for the three letters that would cause the world’s existence.  From the latter verses we find that these three letters are na, ma and si.  Parai the Sakthi of Param (Paramasiva) is the creatorix.  Subramanyar says that she emerged in the mantra swaroopa, u and ma.  She created the triad, Brahma, Vishnu and Rudra who are responsible for creation, sustenance and dissolution. Sakthi created them by contemplating on the letter si. Thus Subramanyar shows that the triple letters of na, ma and si are the active forms of a, u and ma.


இந்த உலகைப் படிப்பதற்கான மூவெழுத்து மந்திரத்தைக் கூறுமாறு சிவன் தன்னை அடுத்துக் கேட்டார் என்று கூறும் சுப்பிரமணியர் அ,உ மற்றும் ம என்னும் எழுத்துக்களின் அதிகம் அல்லது படைப்புக்கான எழுத்துக்கள் ந ம சி என்று பிற்பாடல்களில் கூறுகிறார்.  இந்த படைப்புத் தொழில் ஏற்பட வேண்டும் என்றபோது வெளிப்படுபவள் பரை, பரனின் சக்தி.  அவளே படைப்புத்தொழிலைச் செய்பவர்.  அவள் குரு எழுத்துக்களான மூல எழுத்துக்களான ம மற்றும் உ என்னும் மந்திர எழுத்து வடிவில் வெளிப்பட்டாள்.  வேறொரு மந்திரம் இல்லை என்று கூறிய அவள் சி என்னும் எழுத்தைக் கருத்தில் கொண்டாள்.  அதாவது நமசி என்னும் எழுத்துக்கள் அ,உ மற்றும் ம என்னும் ஓம்காரத்தின் வடிவே என்று காட்டுகிறார். 

66. Subramanyar as Sivaguru

Verse 66
பாரப்பா பரமசிவன் என்னைப் பார்த்து
பாலகனே என்குருவே என்றே போற்றி
தேரப்பா மூன்றெழுத்து மூல மந்த்ரஞ்
செப்பென்றே தெண்டனிட்டு மப்பாவென்றார்
வேரப்பா தெரியாதென் ரவர்க்குச் சொன்னேன்
வேண்டினார் என்னையுந்தான் விபரமாக
ஏரப்பா இம்மூன்று மூலங் காட்டி
என்நாளுஞ் சிரஞ்சீவி யிருமென்றேனே

Translation:
Subramanyar explains his name “Sivaguru” here even though he does not mention it explicitly.  He tells Agatthiyar that Paramasiva praised him as “my guru”, kneeled before Subramanayar and asked him to tell the three letter mantra. Subramanyar says that he taught Siva the three roots and blessed him to remain forever.  The three letters are a u and ma the roots for the Divine in the inactive, active states and its special capacity to create the world.


இப்பாடலில் சுப்பிரமணியர் தான் “சிவகுரு” என்று அழைக்கப்படுவதற்கான காரணத்தைக் கூறுகிறார்.  சிவ பெருமான் சுப்பிரமணியரின் முன் தெண்டனிட்டு மூன்றெழுத்து மூல மந்திரத்தைக் தனக்குக் கூறுமாறு கேட்டார் என்றும் தான் அவருக்கு மூன்று மூல எழுத்துக்களை, அ, உ மற்றும் ம என்னும் செயலற்ற செயல்பாடுடன் கூடிய இறைவனின் மூலத்தையும் அவரது படைப்புச் சக்தியான மாயையின் எழுத்தான மகாரத்தையும் கூறி அவரை இறவாமல் இருக்குமாறு வாழ்த்தினேன் என்றும் சுப்பிரமணியர் கூறுகிறார். 

Monday, 3 November 2014

65. Subramanyar explains his name, Murugan.

Verse 65
மோதென்ற வென்குருவு மெனக்குச் சொல்ல
மூன்றெழுத்தை யானறிந்து முருகனானேன்
சூதொன்றுமில்லையடா விந்த பேச்சு
சுக்கிலமுஞ் சுரோணிதமு மொன்றாய்ப் போச்சு
வாதொன்றும் வாய் திறந்து பேசிடாதே
வருகுமடா பேரிடியுந் தலையில் வீழ்கும்
காதொன்றுங் கேளாத பிள்ளை போலக்
கருத்தில் வைத்துப் பூரணத்தைக் கருவாய்ப் பாரே

Translation:
With my guru telling me to hit it
Knowing the three letters I became Mururgan
This talk is not deceitful
The semen and the female sexual fluid became one
Do not talk about the vadam openly
A huge thunder (lightning) will strike you
Pretending like a deaf person
Keeping in focus see the fully complete as the essence.

Commentary:
Subramanyar is explaining his name, Murugan.  He says that he learned about the three letters and hence became Murugan.  Meivazhi Kuzhanthaisami Gaundar explains this as mu- three, ru- brightness and gu- darkness.  Murugan got his name as he attained the jnana prakasha that explains the truth about the three letters.  The three prakasha or luminosity are sun, moon and fire.  Subramanyar says that suklam and sronitham became one.  This means that the male and female principles became one, he attained the unmanifested state.  He advises Agatthiyar to talk publicly about vaadam or the alchemy, the process of bringing forth a transformation.  This involves bringing together the male and female principles together.  Besides the conventional distinction based on gender Tirumular refers to the ida and pingala nadi, the surya and Chandra kala as female and male principles that should be brought together and offered to the fire of kundalini to attain yoga siddhi (third tantra Chandra yogam).  The principle of transformation of the metals is based on the union of male and female components that results in a superior metal.  Subramanyar has a poignant advice for Agatthiyar.  He tells Agatthiyar to remain like a deaf person, deaf to the world so that others would not disturb him, and keep his focus on the fully complete, the Divine, the poornam, the essence. 


சுப்பிரமணியர் தனது முருகன் என்ற பெயரை இப்பாடலில் விளக்குகிறார்.  தனது குரு தன்னை மூலாதாரத்தில் மோது என்று கூறியதால் தான் அவ்வாறு செய்து மூன்றெழுத்தின் உண்மையை அறிந்து முருகன் என்று பெயர் பெற்றேன் என்கிறார் அவர்.  மூன்றெழுத்து என்பது ந, ம, சி என்று அவர் முன் பாடலில் கூறியதைப் பார்த்தோம்.  மெய்வழி குழந்தைசாமி கவுண்டர், மு- மூன்று, ரு- பிரகாசம், கு- இருட்டு.  அறியாமை என்ற இருட்டை விலக்கி மூன்று பிரகாசங்களான சூரியன், சந்திரன், அக்னி ஆகியவற்றின் தன்மையை தான் அறிந்ததால் முருகன் என்ற பெயரைப் பெற்றேன் என்று சுப்பிரமணியர் கூறுகிறார் என்கிறார்.  இங்கு சுக்கிலமும் சுரோணிதமும் ஒன்றாய்ப் போச்சு என்கிறார் அவர்.  சுக்கிலமும் சுரோணிதமும் உலக வழக்கில் உள்ள உடல் சார்ந்த திரவங்களைக் குறிப்பதுடன் ஆண் பெண் என்ற பாகுபாடுகளைக் குறிக்கும்.  அவை ஒன்றாயின என்பது ஆண் பெண் என்ற நிலையற்று ஒருமை நிலையை அடைந்ததையே இங்கு அவர் குறிப்பிடுகிறார்.  மேலும் சூரிய கலையும் சந்திர கலையும் பெண், ஆண் எனப்படுகின்றன.  இந்த இரண்டு கலைகளையும் குண்டலினி அக்னியில் சேர்த்தால் தீராத ஆனந்தம் ஏற்படும் என்று திருமூலர் மூன்றாம் தந்திரத்தில் சந்திர யோகம் என்னும் பகுதியில் குறிப்பிடுகிறார்.  உலோகங்களை மாற்றுவதும் இந்த தத்துவத்தைக் கொண்டுதான்.  இந்த வாதத்தைப் பற்றி வாய்விட்டு பேசவேண்டாம் என்று கூறும் சுப்பிரமணியர் அகத்தியருக்கு மற்றொரு உபதேசம் செய்கிறார்.  காது கேளாதவரைப் போல அகத்தியர் வெளியுலகத்தால் கவரப்படாமல் கருத்தில் பூரணம் எனப்படும் பரமாத்மாவைக் கருவாகக் காணவேண்டும் என்கிறார். 

Sunday, 2 November 2014

64. Remain speechless, like a ghost and see the point from where breath emerges

Verse 64
ஆச்சடா இதனாலே கவனசித்தி
யம்பலவரனுதினமும் மாட்டைப் பாரு
பேச்சடா வாய் திறந்து பேசிடாதே
பேய்போலே இருந்து மனதறிவில் நில்லு
ஏச்சடா திரியாதே இந்தப் பேச்சு
எட்டிரண்டுமறியாத சவங்கள் தானும்
மூச்சடா பிறந்திடத்தில் முனையைப் பாரு
மூவுலகுந் தனதாச்சு மோது மோது

Translation:
Due to this, son, the gavana siddhi was attained
See the daily dance of the one of the arena
Speech, do not speak opening your mouth
Remaining with the mental awareness like a ghost
Do not roam around wastefully, this talk
By the dead one who do not know the eight and two
See the tip from where breath emerges
All the three worlds will become one’s own, crash it, crash it.

Commentary:
Gavana siddhi is getting the mental focus and the awareness that is required to experience higher states of consciousness.  Ambalavar is the person of the arena, the Divine who dances in the arena of chith ambalam and Perambalam.  Subramanyar tells Agatthiyar to see his daily dance.  Nataraja’s cosmic dance is responsible for creation, existence and dissolution.  This is an eternal dance.  Realizing the truth about this is attaining the state of wisdom.  Subramanyar tells Agatthiyar that he should not open his mouth and speak.  This means he should not get distracted by the four states of vak-the para, pashyanthi, madhyama and vaikari.  Remaining like a ghost means remaining without any attachment.  A ghost does not have any possessions including its body.  Hence, Subramanyar is advising that Agatthiyar should remain like a ghost in the state of true awareness and face this experience.  Eight and two are akara and ukara, the two letters that represent the numbers eight and two in Tamil lexicon. Those who do not know about the secret of eight and two about the inactive and active states of the divine are as good as being dead. Subramanyar tells Agatthiyar that he should focus at the point from where breath emerges.  This is the muladhara.  This focus will make the prana crash into the entrance of the sushumna nadi thus making the kundalini rise in the body.


கவன சித்தி என்பது மனத்தைக் குவிக்கக் கூடிய சித்தி, இது உயர் உணர்வுநிலைகளை அனுபவிக்கத் தேவையான ஒரு தன்மை.  அம்பலவர் என்பவர் அம்பலத்தை உடையவர், சிற்றம்ப லத்தையும் பேரம்பலத்தையும் உடைய நடராஜர்.  தினமும் நிகழும் அவரது நடனத்தைப் பார்க்குமாறு சுப்பிரமணியர் அகத்தியரிடம் கூறுகிறார்.  நடராஜரின் நடனமே உலகத்தின் இருப்புக்குக் காரணம். அதுவே படைத்தல், காத்தல் அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்து தொழில்களைச் செய்கிறது.  நடராஜரின் நடனத்தின் சூட்சுமத்தை அறிவது என்பது இருப்பின் சூட்டுசுமத்தை அறிவது.  சுப்பிரமணியர் அகத்தியரிடம் அவர் வாயைத் திறந்து பேசக்கூடாது மௌனமாக இருக்கவேண்டும் என்கிறார்.  வாயைத் திறந்து பேசும் பேச்சுக்கு அடிப்படையான் பரா, பஷ்யந்தி மத்தியமா என்ற மூன்று நிலைகள் வைகரி எனப்படும் வாயால் பேசும் பேச்சுக்கு முன்னோடிகள்.  ஒரு பேயைப் போல இருப்பது என்பது எவ்வித பற்றும் கொள்ளாமல் இருப்பது.  ஒரு பேய்க்கு தனது உடல்கூட சொந்தமில்லை.  பேய் போல எவ்வித பற்றும் இன்றி மன அறிவு நிலையில் இருந்து இந்த உயர் தத்துவத்தை அகத்தியர் உணர வேண்டும் என்கிறார் சுப்பிரமணியர்.   எட்டு இரண்டு என்பவை அகாரம் மற்றும் உகாரம்.  இந்த எழுத்துக்கள் தமிழ் எழுத்துக் குறியீடுகளில் எண்கள் எட்டையும் இரண்டையும் குறிக்கின்றன.  இந்த எழுத்துக்கள் குறிப்பிடும் செயலற்ற மற்றும் செயற் பாடுடைய இறைவனின் நிலையை அறியாதவர்கள் உயிரோடிருந்தாலும் செத்தவர்களுக்குச் சமம்.  அகத்தியர், மூச்சு பிறகும் இடத்தைக் கவனிக்கவேண்டும் என்கிறார் சுப்பிரமணியர்.  மூச்சு பிறக்கும் இடம் மூலாதாரம்.  இதுவே சுழியின் ஒரு முனையாகும்.  இவ்வாறு கவனித்தால் பிராணன் எழுந்து குண்டலினியை எழுப்பும்.  அந்த சக்தி சுழுமுனை நாடியின் கதவில் மோதி அதைக் திறக்கச் செய்யும். 

Saturday, 1 November 2014

63. The three letters

Verse 63
கூடினேன் அஷ்டாங்க முடிவுமாச்சு
குண்டலியாஞ் சத்தியுட குணமீதாச்சு
ஆடினே னானந்தம் பாடிப்பாடி
அஷ்ட கர்ம வாலையுட வருளும் பெற்றுக்
கூடினேன் சிவயோகக் குறியைப் பாடிக்
கொண்டேனடா மூன்றெழுத்தைக் குவித்தேயானும்
தேடினேன் மூன்றெழுத்தா மகாரமோடு
சேர்ந்தெழுத்து நகாரமொடு சிகாரமாச்சு

Translation:
I joined, it became the terminus of the ashtangam
This became the quality of kundali sakthi
I danced in bliss, singing repeatedly
Attaining ashtakarma vaalai’s grace.
I joined praising the sign/goal of Sivayogam
I attained by focusing the three letters
I searched, the three letters, along with makaara
The joining letters of nakaara and sikaara.

Commentary:
Subramanyar talks about the attainments one achieves by following the yoga and the puja he described before.  One attains a state that is the terminus, the end goal of ashtanga yoga.  The yogin attains grace of kundalini sakthi.  The state of bliss ensues and the yogi dances in this state.  The Anandha thaandavam of Nataraja represents this state of bliss.  Kundalini sakthi takes the yogi through the ashta karma that we already saw to be removal of certain obstacles in the path of realization and attainment of impetuses that would push the yogin forward in his endeavor.  This is Sivayogam, the yoga of attaining the Sivahood.  Subramanyar says that he attained this by praising the three letters.  These three letters are not the a u ma but ma na and si.  Na ma si represents the waking, dreaming and deep sleep states of consciousness. Subramanyar may be indicating that this is the way to cross these three states and reach the turiya. 


மேற்கூறிய யோக பூசை முறைகளைக் கடைப்பிடிப்பதனால் பெரும் பேறுகளை சுப்பிரமணியர் இங்கே கூறுகிறார்.  இவற்றால் ஒரு யோகி பெறுவது அஷ்டாங்க யோகத்தின் உச்சி, குண்டலினி, வாலையின் அருள்.  இது ஒரு யோகியை ஆனந்தநிலைக்கு அழைத்துச் சென்று அவரை ஆட வைக்கும்.  நடராஜரின் ஆனந்தத் தாண்டவம் இதைக் குறிக்கிறது.  அஷ்ட கர்மாவின் பயன் பரவுணர்வு நிலையை அடைய வைக்கும் பாதையில் உள்ள தடைகளை நீக்குவது அப்பாதையில் ஊக்குவிக்கும் தன்மைகளைப் பெறுவது என்று முன்னமே பார்த்தோம்.  இதுவே சிவயோகத்தின் இலக்கு.  இதைத் தான் மூன்றெழுத்துக்களைக் குவித்து அடைந்தேன் என்கிறார் சுப்பிரமணியர்.  அந்த மூன்று எழுத்துக்கள் மகாரம், நகாரம் மற்றும் சிகாரம்.  இந்த மூன்று எழுத்துக்கள் விழிப்பு நிலை, கனவு நிலை, ஆழ் உறக்கம் என்ற மூன்று உணர்வு நிலைகளைக் குறிக்கும்.  இந்த மூன்றையும் குவிப்பது என்பது இவற்றைக் கடந்து துரிய நிலையை அடைவது என்று பொருள்.