Verse 107
பாரப்பா சாரையுந்தான் வரும்போதெல்லாம்
பாலகனே நீ பிடித்து பசியுந் தீர்த்து
ஆரப்பா வணுவளவும் விட்டிடாமல்
அப்பனே அப்யாச மார்க்கஞ் செய்து
நேரப்பா நிலையறிந்து குருவைப் போற்றி
நிஷ்டையொடு சமாதியிலே நினைவாய் நின்று
வேறப்பா வேறிதென்று நினைத்திடாமல்
விதிவிலகச் சாரையுந்தான் உண்டு தேரே
Translation:
See son,
whenever the rat snake came
Young
boy! Catching it a satisfying the hunger
Pacify it,
without leaving even an atom of it
Son,
performing the abhyasa marga (practice method)
Learing the
status, praising the guru
Remaining with
concentration, in austerities and Samadhi
Without
thinking that this is something else
Consume the
ratsnake for removal of fate.
Commentary:
Siddhas
recommend vasi pranayama to raise the fire of kundalini. Through breath regulation this power is made
to emerge at specific occasions.
Subramanyar is telling Agatthiyar to perform this practice marga and
enjoy the full benefit of the power of kundalini. Along with this Agatthiyar was to perform
nishtai and remain in Samadhi. This
method has to be performed after praising the guru. Anyone who removes the darkness of ignorance
is a guru. Subramanyar tells Agatthiyar that this is the way to remove the
effects of fate and that Agatthiyar should not mistake this for something else.
It is
interesting that Subramanyar has added this line to the verse. There is a verse which talks about two rat snakes playing on a hill top, one is
black and another is white, both remain intertwined and one who is able to see
this and eat it will attain a supreme state.
The commentary on this was about a mysterious hill and about read
ratsnakes. Subramanyar clarifies here
that this symbolism is for breath and kundalini. He has saved people and rat snakes by telling
them not to mistake what he has said here for anything else!
சித்தர்கள் வாசி பிராணாயாமத்தின் மூலம் குண்டலினியை ஏற்றும்
யோகத்தையே உயர் உணர்வுநிலைகளைப் பெற பரிந்துரைக்கின்றனர். இந்த அப்பியாச மார்க்கத்தையே சுப்பிரமணியர்
இங்கே குறிப்பிட்டு அவ்வாறு எழுப்பப்படும் குண்டலினியின் பயனை அணுவளவும்
விட்டுவிடாமல் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.
அகத்தியர் இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும், குருவைப் போற்றி
நிஷ்டையிலும் சமாதியிலும் நிலைபெற்று இருக்க வேண்டும் என்றும் சுப்பிரமணியர்
கூறுகிறார். குரு என்பவர் கு என்னும்
அஞ்ஞான இருட்டை அழிப்பவர் (ரு).
இவ்வழியில்தான் ஒருவரால் தனது விதியை விலக்க முடியும் என்றும் தான் இங்கு
கூறியவற்றை வேறாக எண்ணாமல் இதை மேற்கொள்ள வேண்டும் என்றும் சுப்பிரமணியர்
கூறுகிறார்.
சுப்பிரமணியரின் இந்த வார்த்தைகள் ஒரு முக்கியமான விஷயத்தை
நமக்குக் கூறுகின்றன. ஒரு சித்தர் பாடலில்
மலையின் முகட்டில் இரு சாரைப் பாம்புகள் விளையாடுகின்றன ஒன்று கருப்பாகவும்
மற்றொன்று வெள்ளையாகவும் உள்ளது அவை இரண்டும் பிணைந்து இருக்கின்றன. அதைக் கண்டு உண்பவர் மரணமற்ற பெரு வாழ்வு
வாழ்வர் என்பதற்கு உண்மையிலேயே அவ்வாறு உடலுறவில் ஈடுபட்டிருக்கும் பாம்பைத்
தேடவேண்டும் என்று ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இது எவ்வளவு தவறான கருத்து என்பது
சுப்பிரமணியரின் வார்த்தைகளால் புரிகிறது.
இது குண்டலினி யோகத்தின் முக்கியமான ஒரு பயிற்சி என்பது அவரது
வார்த்தைகளால் புரிகிறது.
No comments:
Post a Comment