Sunday, 18 January 2015

108. Trikoota Parvatham

Verse 108
தேரடா திரிகூடப் பருவதத்திற்
திருமாலும் அயனுடன் ருத்ரன்தானும்
ஆரடா மயேஸ்வரனுஞ் சதாசிவனும்
அப்பனே இராகுவொடு கேது தானும்
சேரடா மதியோடு ரவியுந்தானும்
தேவியெனும் பராபரைசிற் பரையாள்மைந்தா
காரடா சித்தரொடு முனிவரெல்லாம்
கலந்திருப்பார் இன்னம் வெகு பெரியோர் பாரே

Translation:
In the Trikooda parvatham
Thirumal, Brahma, Rudran
Maheswaran, Sadasivan
Son, Raahu and Ketu
Join, the moon and sun
The Devi, paraaparai, chith parai,
The Siddhar and munivar-all
Will remain together, and several other great souls, see.

Commentary:
Subramanyar is talking about another energy point in the body, the ajna.  It is the place where the ida, pingala and sushumna join.  Hence, it is called Trikoota parvatham.  Subramanyar tells Agatthiyar that all the deities and great souls remain there. 


இப்பாடலில் சுப்பிரமணியர் மற்றொரு சக்தி மையத்தைப் பற்றிப் பேசுகிறார்.  அது ஆக்ஞா சக்கரமாகும்.  ஆக்னையில் இடை, பிங்கலை, சுழுமுனை என்ற மூன்று நாடிகளும் கூடுவதால் அதைத் திரிகூட பர்வதம் என்கிறார் சுப்பிரமணியர்.  இங்கு தேவர்களும் கடவுட்களும் முனிவர்களும் அனைத்துப் பெரியோர்களும் இருக்கின்றனர் என்கிறார் சுப்பிரமணியர்.  

2 comments: