Monday, 12 January 2015

105. Site of emergence of the ratsnake

Verse 105
பாரப்பா சாரையைத் தான் பயமாய் வாங்கிப்
பதறாதே மத்தியிலே பிடித்துப் பாரு
ஆரப்பா பிடிக்கையிலே பொருதியோடும்
அடங்காத சாரையுந்தான் அறியப்போமோ
நேரப்பா மயேந்திரகிரி உச்சி மீதில்
நிறைந்தெழுந்த சந்திரன்போல் தடாகமுண்டு
தேரப்பா தடாகத்தில் சாரை மைந்தா
சிறந்துதித்துச் சென்றெழுத்து வந்தவாறே

Translation:
See son, hold the ratsnake with respect
Without panicking, hold it in the middle and see,
It will abide there and run when it is held so,
The uncontrollable ratsnake, can it be known
On the top of the Mahendragiri
There is a lake like the full moon
The ratsnake emerges from there, like how the supreme letter emerges

Commentary:
Subramanyar is continuing to describe the esoteric principle of directing the prana and the kundalini sakti through the sushumna.  The ratsnake represents this. It is the agnikala that emerges as a consequence of pranayama. It is uncontrollable generally until the person becomes an expert of pranayama.  Then it abides within the sushumna and flows in the middle.  Subramanyar is talking about a waterbody in the Mahendragiri.  This is the spot from where the kundalini sakti emerges.  It is in the muladhara or the kandamula from which the exhalation starts.  These energy centers are called hilltops to indicate that they represent the peak of a principle.  The letter mentioned may be na, the letter of muladhara or omkara.  Some siddhas locate the omkara in the muladhara while some others locate it at the ajna.


இப்பாடலில் சுப்பிரமணியர் வெண்சாரையைப் பற்றி மேலும் விளக்குகிறார்.  பிராணாயாமத்தால் எழுப்பப்படும் குண்டலினி சக்தி பொதுவாக கட்டுப்படுத்துவதற்குக் கடினமானதாக இருக்கும்.  இம்மூச்சுப் பயிற்சியில் தேர்ந்தவரால் மட்டுமே அதை சரியான முறையில் கையாள முடியும்.  (கட்டுப்பாடற்ற முறையில் எழுப்பப்பட்ட குண்டலினியின் பக்க விளைவுகளை சித்தர்கள் வெகுவாக விவரித்துள்ளனர்.)  இந்த குண்டலினி சுழுமுனை நாடியான மத்திய நாடியில் பயணிக்கிறது.  அது தோன்றும் இடத்தை மகேந்திர கிரியில் உள்ள சந்திரனைப் போன்ற ஒரு தடாகம் என்று சுப்பிரமணியர் கூறுகிறார்.  உடலில் உள்ள முக்கியமான சக்தி மையங்களை சித்தர்கள் ஒரு மலையின் உச்சி என்று அழைக்கின்றனர்.  இந்த இடங்கள் ஒரு தத்துவம் உச்சத்தில் இருப்பதைக் குறிக்கிறது.  அவ்வாறு குண்டலினி அல்லது அக்னி கலை தோன்றும் இடத்திலிருந்து ஒரு சிறந்த எழுத்து தோன்றுகிறது என்கிறார் சுப்பிரமணியர்.  அந்த எழுத்து ஓம்காரமாகவே நகாரமாகவோ இருக்கலாம்.  சில சித்தர்கள் ஓம்காரம் மூலாதாரத்தில் உள்ளது என்று கூறுகின்றனர் சிலர் அதை ஆக்ஞை யில் இருப்பதாகக் கொள்கின்றனர்.

No comments:

Post a Comment