Wednesday, 7 January 2015

104. Linga from whose mouth emerges the snake

Verse 104
கேளடா மயேந்திரகிரி விஞ்சைதன்னில்
கிருபையுள்ள குகைவாசல் நாலைந்துண்டு
ஆளடா வம் மலையில் சாரை தானும்
அப்பனே ஐந்தாறு அதிலேயுண்டு
நாளடா வெக்கியமா முனியே காவல்
நரசிங்க மூர்த்தியுட நடப்போ மெத்த
வாளடா வடியிலொரு லிங்கந் தோன்றி
வாய்வழியே சாரையுந்தான் வருக்கும் பாரே

Translation:
Listen, in the spiritual knowledge of Mahendragiri,
There are four and five entrances to the caves
In that hill, the ratsnake,
There are five and six there,
The mamuni is the deity of protection there,
Is it the action of the Narasinga murthy? 
A linga will occur in the bottom
The ratsnake will come out through its mouth

Commentary:
Subramanyar is talking about the muladhara cakra here.  The nine entrances to caves may represent the nine cakra, those within the body and beyond it.  He says that in that Mahendragiri there are five six ratsnakes.  The Mahendragiri may mean the Kanta moola from where nadis branch out.  The five six may mean eleven nadis that are primary nadis for spiritual experience.  Subramanyar says that this site is under the watch of “vekkiya maa muni” and the activity there is due to Narasimha moorthy.  Narasimha is a tantric image found not only in Hindu pantheon but also in Tibetan tantric traditions.  The linga that he mentions next is the svayambu linga in the muladhara.  The “mouth” of this linga is the openining of the sushumna nadi.  The ratsnake that emerges from this mouth is the kundalini sakthi who is represented as a snake. 


மூலாதாரத்தைப் பற்றி சுப்பிரமணியர் இப்பாடலில் கூறுகிறார்.  ஒன்பது குகைவாசல் என்பது ஒன்று சக்கரங்களைக் குறிக்கும்.  இவற்றில் சில உடம்பிலும் சில அதற்கு வெளியிலும் உள்ளன.  அவர் மகேந்திரகிரி என்பது கண்டமூலம் என்று அழைக்கப்படும் நாடிகள் தோன்றும் இடம் என்று தோன்றுகிறது.  இங்கு ஐந்தாறு சாரைகள் உள்ளன என்கிறார் சுப்பிரமணியர்.  இது ஆன்மீக உணர்வுக்கு முக்கியமான பிரதம நாடிகளாக இருக்கவேண்டும்.  இந்த இடம் வெக்கிய மாமுனியின் காவலில் உள்ளது என்று கூறும் சுப்பிரமணியர் இங்கு நடைபெறுவன நரசிங்க மூர்த்தியின் செயலோ என்கிறார்.  ஆளறி என்று அழைக்கப்படும் நரசிம்மர் தந்திர மார்க்கத்தில் முக்கியமான ஒருவர்.  நேபாள பௌத்த கோவில்களிலும் இந்த மூர்த்தியைக் காணலாம்.  இதனை அடுத்து அவர் கூறும் லிங்கம் சுயம்பு லிங்கமாக இருக்கவேணும்.  அதன் வாய் எனப்படும் பகுதி சுஷுமுனை நாடியின் வாயிலாகும்.  இதினுள்ளிருந்து சாரை வெளிப்படும் என்பது குண்டலினி சக்தியைக் குறிக்கும். 

No comments:

Post a Comment