Verse 98
போடென்றேன் பொய் கொலைகள்உயிரைக் கொன்று
புசித்தவரை அப்புறமே தள்ளு தள்ளு
நாடென்றேன் ரவி மதியை மைந்தா நீயும்
நாதாக்கள் சாபமெல்லாம் நிவர்த்தி செய்து
தேடென்றேன் தவந்தேடி யோகம் பாரு
செம்பவளம் போலேதான் நிறமுங்காட்டும்
பாடென்ன பட்டவற்குப் பலன்தான் உண்டு
பராபரத்தின் அடியினுட பாதந்தானே
Translation:
Falacy,
murder, killing lives
And eating
them- push them away
Son, I told
you seek the sun and the moon
Making amends
for the curses of the nathaas
I told to
search for tapas and see the yoga
It will show
the hue like that of reddish coral
There is
definitely benefit for hard labor
The sacred
feet of Paraparam.
Commentary:
Subramanyar is
continuing to list the type of people one should discard. He talks about those who lie, who kill others
and those who eat meat. He advises Agatthiyar
to seek the sun and the moon. The sun
and the moon represent the inhalation and exhalation. According to the Siddhas the breath flows in
the sun nadi or pingala for twelve counts and in the moon nadi or ida for
sixteen counts. These two should be
brought in sync so that the prana and apana are balanced and the fire of kundalini
rises in the middle channel, sushumna.
He says that Agatthiyar should make amends or parihara for the curses of
the nathas. Previously he has mentioned
that if there is the curse of the natha there is no way one would get the “veedu”
or the attain the supreme state. He
further adds that tapas or austerities should be performed so that yoga becomes
fruitful. When this is achieved the
yogin will experience the light which is reddish coral hued. He guarantees that
hard work will definitely be fruitful and the fruit for this hard work is the
sacred feet of Paraaparam or the Supreme state of the Divine.
மேற்பாடலில் யாரை எல்லாம் விலக்கவேண்டும் என்று
கூறத்தொடங்கியத்தை இப்பாடலிலும் தொடருகிறார் சுப்பிரமணியர். பொய் பேசுபவர், கொலை புரிபவர், உயிர்களைக்
கொன்று புசிப்பவர் ஆகியோரை நிச்சயமாகத் தள்ளவேண்டும் என்றும் ரவி மதியை அதாவது
சூரிய சந்திரரை நாடவேண்டும் என்று சுப்பிரமணியர் அகத்தியருக்குக் கூறுகிறார். ரவி மதி என்பது பிங்களா இடா நாடிகளைக்
குறிக்கும். சித்த பிராணாயாமத்தில் பிராணன் இடையில் பதினாறு அளவுகளும் பிங்கலையில்
பன்னிரண்டு அளவுகளும் பாய்கிறது. இந்த
நிலையில் பிராணன் மூலாதாரத்தில் உள்ள அக்னியை மூட்டி அதை சுழுமுனையில் பாயச்
செய்கிறது. இதைத்தான் சுப்பிரமணியர் இங்கு
கூறுகிறார். அதனை அடுத்து நாதாக்களின்
சாபங்களைத் தீர்க்க தகுந்த பரிகாரங்களைச் செய்ய வேண்டும் என்று அவர்
கூறுகிறார். முந்தைய பாடலில் நாதாக்களின்
சாபம் இருந்தால் வீடு கிட்டாது என்று அவர் கூறியுள்ளார். இதன் பிறகு யோகம் ஈடேற தவத்தை மேற்கொண்டால்
செம்பவள நிறம் தென்படும் என்கிறார் சுப்பிரமணியர். இதைத் தான் மணியின் நிறம் என்று சித்தர்கள்
குறிப்பிடுகின்றனர். இவையனைத்தையும்
கூறியபிறகு சுப்பிரமணியர் கடினமாகப் பாடுபட்டால் பலன் நிச்சயம் என்றும் இந்த
உழைப்புக்கு பெறும் பலன் பராபரத்தின் திருப்பாதம் என்றும் உறுதியளிக்கிறார். பராபரம் என்பது இறைவனின் உச்ச நிலை.
No comments:
Post a Comment