Verse 102
பாரப்பா எனைபோலே வெளியாய்த்தானும்
பார்தனிலே முனிவோர்கள் சித்தர் சொல்வார்
ஆரப்பா அஷ்டாங்க மார்தான் சொல்வார்
அருள் தங்கு மவுனமணி யார்தான் காண்பார்
நேரப்பா முன்சொன்ன படியே மைந்தா
நினைவிருத்தி நிலைதனிலே நின்றாயானால்
வேறப்பா வேதனுட எழுத்துத் தோணும்
விட்டகுறை தொட்டகுறை தெரியலாச்சு
Translation:
See son,
who will say this so explicitly,
In this world, not even munivar and siddhar
Who will say about the ashtangam
Who will see the silent jewel where the silence resides?
Son, as said before,
If you keep it in mind and remain firmly so,
The letter of the Vedan will become visible
That which was left and that which was touched became
visible.
Commentary:
Subramanyar tells Agatthiyar that he has described all
the esoteric principles so clearly and explicitly and that no one, saints and
siddhas, will not do so. No one will
describe the ashtanga yoga or see the jewel of silence. He advises Agatthiyar that if he remains
following Subramanyar’s previous advice he will see the letter of the “Vedan”. Veda means that which should be known. Vedan means the essence of the Veda, the Lord
Almighty. The letter of Vedan may be si
or om. “Vitta kurai” and “thotta kurai”
represents the fire of kundalini flowing between muladhara and ajna.
தான் இதுவரை கூறிய விஷயங்களை யாரும், முனிவர்களோ
சித்தர்களோ, இவ்வளவு வெளிப்படையாகக் கூறமாட்டார்கள் என்றும் அஷ்டாங்க யோகத்தை யாரும்
இவ்வளவு விவரமாக விளக்கமாட்டார்கள், மவுன மணியைப் பார்க்க மாட்டார்கள் என்று
கூறும் சுப்பிரமணியர் அகத்தியரை தான் இதுவரை கூறியவற்றை மனதில் கொண்டு அவற்றில்
நிலையாக நின்றால் “வேதனின் எழுத்து” கண்ணுக்குப் புலப்படும் என்கிறார். வேதம் என்பதற்கு அறியப்பட வேண்டிய அறிவு என்று
பொருள். வேதன் என்பது வேதத்தின் சாரமான
இறைவன். இதனால் வேதனின் எழுத்து என்பது
ஓம்காரமாகவோ சிகாரமாக இருக்கலாம். விட்ட
குறை தொட்ட குறை என்பது குண்டலினி மூலாதாரத்தை விட்டு மேலே எழும்பி ஆக்ஞை வரை
பெரும் நெருப்பாகப் பாய்வதைக் குறிக்கும்.
No comments:
Post a Comment