Verse 101
கொள்ளடா யனுதினமும் லாடமேவிக்
குறிப்பறிந்து நித்திரையிற் சாய்ந்திட்டாலும்
அல்லடா இடக்கையைத் தலைகுவைத்து
அருளான லாடத்தில் உறங்க வேண்டும்
சொல்லடா வோரிபோல் துயின்று நீயுஞ்
சொல்லாதே சவம்போலே இருந்து மைந்தா
வில்லடா வில் பூட்டி ஏத்தி ஏத்தி
விஞ்சை என்ற மூன்றெழுத்தின் விபரம் பாரே
Translation:
Consume it daily, pervading the laatam
Knowing the signs, Even if lying down in sleep
Place the left hand under the head
Sleep while remaining in the laatam, the grace,
Say son, sleeping like Ori,
You do not say it, remain like a corpse, Son,
Stringing the bow and raising it higher and higher
See the details about knowledge, the three letters
Commentary:
Subramanyar is talking yoga nidra in this verse. He tells Agatthiyar that one should sleep
with the left hand under the head and mental focus on the lalata cakra. Subramanyar talks about Ori. He is one of the ancient philanthropists, the
ruler of kolli hills. He built a temple
for Lord Siva who appeared to him in the form of a wild boar. Ori hit it with his arrow and when it disappeared
into a bush he found a Siva linga there.
Ori built the Kailasanatha temple there.
The bow that Subramanyar is talking about next is the
sushumna nadi through which consciousness is raised higher and higher. The three letters he mentions may be a, u, ma
or the sakthi bheeja of aim, kleem, saum.
இப்பாடலில் சுப்பிரமணியர் யோக நித்திரையைப் பற்றிப்
பாடுகிறார். அதற்கு ஒருவர் இடது கையைத்
தலையின் அடியில் வைத்துக்கொண்டு கவனத்தை லலாட சாக்கரத்தில் வைத்து தூங்காமல் தூங்க
வேண்டும். சுப்பிரமணியர் அகத்தியரிடம்
அவர் ஓரி போல உறங்க வேண்டும் என்கிறார்.
ஓரி என்பவன் கடை ஏழு வள்ளல்களில் ஒருவன், கொல்லிமலைக் காவலன். ஒரு பன்றி வடிவில் சிவபெருமான் அவன் எதிரில்
தோன்றியபோது ஓரி அந்தப் பன்றியை ஒரு அம்பால் அடித்தான். அது ஒரு புதரினுள்
மறைந்தவிட்டது. ஓரி புதரினுள் பார்த்தபோது
ஒரு சிவலிங்கம் தென்பட்டது. அவ்விடத்தில்
அவன் ஸ்ரீ கைலாயநாதர் ஆலயத்தை எழுப்பினான்.
இதனால் ஓரி குறுநில மன்னனாக மட்டுமில்லாமல் இறையன்பனாகவும் இருந்தான்
என்பதும் தெரிகிறது. குறுநில மன்னனாக
இருப்பவன் எப்போதும் கவனத்துடன் ஆழ்ந்து உறங்காமல் இருப்பான் என்பதற்காகவும்
சுப்பிரமணியர் ஓரியை இங்கே குறிப்பிட்டாரோ என்னவோ. அடுத்து சுப்பிரமணியர் கூறும் வில் சுழுமுனை
நாடியாகும். அதில் விழிப்புணர்வை மேலே
ஏற்ற வேண்டும். அப்போது விஞ்சை எனப்படும்
அறிவைப் பெறலாம். சுப்பிரமணியர் கூறும் மூன்றெழுத்து
அ, உ, ம அல்லது சக்தி பீஜங்களான ஐம், கிலீம், சௌம் என்பதாகவோ இருக்கலாம்.
No comments:
Post a Comment