Wednesday 24 September 2014

32. Events at the peak of the experience

Verse 32
போமடா இரியென்றுங் கிரியென்றோதி
பொருத்தமுடன் பூரணத்தைக் கலந்து பாரு
ஆமாடா சகல சித்தும் அதிகமாகும்
அடங்காத பூதமைந்தும் ஒன்றாய்ச் சேரும்
வாமடா வாமமுந்தான் கசிந்து பாயும்
வடவரையில் துருவனுட சூட்சங் காட்டும்
காமடா காமப்பால் திரண்டு காணும்
காணாத காட்சியெல்லாங் காணும் பாரே

Translation:
It will go as hrim kreem
Merge with the fully complete and see it
Yes son, all the mystical accomplishments will increase
The uncontrollable five elements will merge into one
Vaamam will ooze and flow
The subtlety of Durva in the northern peak, it will show
Desire, the kaamappaal will accumulate and be seen
All the “difficult to see” sights will be seen, see!

Commentary:
Hreem and kreem are two Sakthi bheeja mantras.  This sadhana will grant all the mystical accomplishments in abundance.  This is the process of laya and so all the elements will merge with one another starting from muladhara cakra which represents the earth element.  Vaamam in this verse may be referring to sexual fluids.  This line may be referring to the concept of “madai maarral” or reversing the flow of the sexual fluids.  Vadavarai is the peak in the north.  This may be referring to the sahasrara.  The star, Druva, is the pole star or the north star which is important in navigation both in the worldly sense as well in the spiritual journey.  Seeing the star of Druva represents attaining a specific state in the spiritual progress.  Siddhas use the terms kaamappaal, kaanal paal, vaamappaal, somappaal to indicate various fluids that are released at specific stages of spiritual progress.  All the rare sights will become visible at this advanced state.


ஹ்ரீம் மற்றும் க்ரீம் என்பவை சக்தி பீஜ மந்திரங்கள். இந்த குண்டலினி யோகப் பயிற்சி எல்லா சித்திகளையும் அருளும் என்கிறார் சுப்பிரமணியர்.  சித்திகள் என்பவை ஆன்மீகப் பாதையில் மைல்கற்கள்.  முந்தைய பாடல்களில் விளக்கப்பட்டுள்ள பயிற்சிகள் லயம் அல்லது ஆதி நிலையை அடைவதைக் குறிக்கின்றன.  அதனால் சுப்பிரமணியர் எல்லா பூதங்களும் ஒன்றாகச் சேரும் என்று கூறுகிறார்.  “வாமம் கசிந்து பாயும்” என்பது சித்த யோகப் பயிற்சிகளில் ஒன்றான மடைமாற்றல் என்பதைக் குறிக்கலாம்.  இந்தப் பயிற்சியில் விந்து தனது கீழ்நோக்கிய பயணத்தை மாற்றி மேல் நோக்கி செலுத்தப்படுகிறது.  இது பல அரிய சித்திகளை யோகிக்கு அருளுகிறது.  வடவரை என்பது சஹாஸ்ராரத்தைக் குறிக்கலாம்.  வரை என்பது மலையுச்சியைக் குறிக்கும், தத்துவத்தின் உச்ச நிலையைக் குறிக்கும் என்று முன்னமே பார்த்தோம்.  துருவ நட்சத்திரம் என்பது கடலில் செல்லும் மாலுமிகளுக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறது.  ஆன்மீகப் பயணத்தை மேற்கொள்பவர்களுக்கும் அது அவர்களது பாதையைக் காட்டுகிறது.  சித்தர்கள் காமப்பால், கானல் பால், வாமப் பால், சோமப்பால் என்று உடலில் பல்வேறு நிலைகளில் சுரக்கும் திரவங்களைக் குறிப்பிடுகின்றனர்.  இந்த பயிற்சியை மேற்கொள்ளும் யோகிக்கு பல அரிய காட்சிகள் கண்ணில் தென்படுகின்றன.

No comments:

Post a Comment