Thursday 11 September 2014

19. The asuras that Subramanya won




Vetrivel Murugan temple, Jogupalya, Bangalore

Verse 19
தானென்றும் இதுவென்றும் மலைந்துசெத்துச்
சாகாமல் உறைகின்ற தலமும் காணான்
வானென்றும் முடிவென்றும் கால்தான் என்றும்
மணிபூரந்தனை அறிந்து வணங்க மாட்டான்
தோணென்றால் தோணாது மனம் வேறாகச்
சுடுபொட்டால் காடு சுவறிப் போகும்
கோனென்றும் ஆறு படை வீடாம் என்று
கூறியே அசுரர்களைக் கொன்றேன்பார்

Translation:
Fatiguing as “I” and “this”
He will not see the locus attained by “dying and yet not dying”
As the sky, the terminus and as the vital air
He will not worship the manipooram with realization
If it is bid to occur it will not do so if the mind remains as the other
It will dry up as the wasteland
Saying that the King, the six houses
I killed the asuras (demons) see it.

Commentary:
Subramanyar tells Agatthiyar about how he killed the demons or asuras.  We already saw Subramanyar as the sense of discrimination or buddhi.  The asuras are erroneous ideas, understanding. 
The distinction as “I” and “that” is the first state of distinction.  This is the point of emergence of ahamkara or ego.  Subramanyar says that the ignoramous will fatigue maintaining the distinction, “I” and “that”.
The locus that is attained alive after dying is the state of superconsciousness.  “dying and yet not dying” means dying for the world, not being conscious of the world with distinctions and being alive to the state of singularity. 
The manipuraka cakra is the site of self esteem, warrior energy and the power of transformation.  Subramanyar tells Agatthiyar that this site should be worshipped with clear understanding.  This understanding should come from within and not from external instructions.  The mind must realize this truth.  Subramanyar says that he killed the asuras declaring the six cakras as the king.  The cakras represent different principles.  When a yogin has his consciousness cross these cakras he wins that principle.  Ascending from muladhara to sahasrara is the process of dissolution or merging, the laya.  All the distinctions and the faults that cause these distinctions are won over, the asuras are defeated.

சுப்பிரமணியர் அசுரர்கள் யார் என்பதைக் குறிப்பால் உணர்த்தி தான் அவர்களை வெற்றிகொண்டதை இப்பாடலில் குறிப்பிடுகிறார்.  சுப்பிரமணியர் என்பது பகுத்தறிவு என்று நாம் முன்னமே பார்த்தோம்.  நால்வகை அந்தக் காரணங்களான மனஸ், புத்தி, அஹம்காரம், சித்தம் என்பவற்றில் புத்தியின் குணம் பகுத்தறிவது.  தான் வேறு பிறர் வேறு என்று பிரித்துணர்வது பலவாக இருக்கும் நிலை.  இத்தகைய பிரிவுகள் இல்லாமல் இருக்கும் ஒருமை நிலையை ஒருவர் புத்தியைப் பயன்படுத்தி அறியவேண்டும்.  ஆனால் மக்கள் பொதுவாக இதை அறியாமல் மனக்கலக்கமுறுகின்றனர் என்கிறார் சுப்பிரமணியர்.
செத்தும் சாகாமல் இருக்கும் இடம் பரவுணர்வு நிலை.  உலகைப் பொறுத்த வரை இறப்பது என்பது அதன் செயல்பாடுகளில் பங்கெடுத்துக்கொள்ளாமல் இருப்பது.  ஆனால் இந்த ஆத்மாக்கள் என்றும் இறவாநிலையை அடைந்தவர்கள். 
சக்கரங்களில் மணிபூரகம் ஒருவர் தன்னைப் பற்றி எண்ணுவதைக் குறிக்கும்.  வீர உணர்வு இருக்கும் இடம், மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சக்தி இருக்கும் இடம்.  சுப்பிரமணியர் இந்த இடத்தை வானம், இருப்பின் முடிவு, பிராணன் ஆகியவற்றைப் பற்றிய சரியான புரிதலுடன் ஒருவர் வணங்கவேண்டும் என்கிறார்.  ஆனால் மக்களை அவ்வாறு செய்யவிடாத குணங்கள் அசுரர்கள்.  இந்தப் புரிதல் வெளியிலிருந்து வரும் கட்டளையால் ஏற்படுவதல்லை, மனதினில் தோன்றுவது. 

சுப்பிரமணியர் தான் ஆறு சக்கரங்களை அரசர் என்று அறிவித்து அசுரர்களை வென்றதாகக் கூறுகிறார்.  உடலில் உள்ள சக்கரங்கள் ஒவ்வொன்றும் ஒரு தத்துவத்தைக் குறிக்கின்றது.  இவற்றை ஒரு யோகி கடக்கிறார் என்றால் அந்த தத்துவம் ஏற்படுத்தும் பிரிவினையைக் கடக்கிறார், அசுரரை வெல்கிறார் என்று பொருள்.

No comments:

Post a Comment